கொடுங்ன்மை-பாசிச அரசு!.

ஒவ்வொருவரும் 2 முறை படியுங்கள்!

எல்லா  நாடுகளிலும்  வரி அமைப்பு முறை மன்னர் ஆட்சிக் காலத்திலிருந்து இயங்கி வந்தது. பண்டைய காலத்தில் உணவு தானியங்களே நிலவரியாகப் பெறப்பட்டன. பண்டைய தமிழ் சமூகத்திலும் வரி அமைப்பு இயங்கியதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. சுங்கவரியும் விதிக்கப்பட்டதாகப் பட்டினப் பாலையில் குறிப்புகள் உள்ளன. ஓர் அரசு எவ்வகையில் வரி விதிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை  வள்ளுவர்

இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.        - குறள் 385

என்று அழகுற விளக்கி, அரசமைப்பு முறைக்கு இலக்கணம் தருகிறார். 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தற்கால வரி அமைப்பு முறை விரிவுபெற்றது. பொருளாதாரத் தந்தை என்று போற்றப்படுகிற ஆதம் சுமித் ‘ஒருவருடைய வருமானத் திறனுக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும் (எல்லா  நாடுகளிலும்  வரி அமைப்பு முறை மன்னர் ஆட்சிக் காலத்திலிருந்து இயங்கி வந்தது. பண்டைய காலத்தில் உணவு தானியங்களே நிலவரியாகப் பெறப்பட்டன. பண்டைய தமிழ் சமூகத்திலும் வரி அமைப்பு இயங்கியதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. சுங்கவரியும் விதிக்கப்பட்டதாகப் பட்டினப் பாலையில் குறிப்புகள் உள்ளன. ஓர் அரசு எவ்வகையில் வரி விதிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை  வள்ளுவர்

இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.        - குறள் 385

என்று அழகுற விளக்கி, அரசமைப்பு முறைக்கு இலக்கணம் தருகிறார். 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தற்கால வரி அமைப்பு முறை விரிவுபெற்றது. பொருளாதாரத் தந்தை என்று போற்றப்படுகிற ஆதம் சுமித் ‘ஒருவருடைய வருமானத் திறனுக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும் (Ability to pay principle)’ என்ற கருத்தை முன்மொழிந்தார். மேலும் அரசு, வரிகளைப் பெறும்போது மக்களைத் துன்புறுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்று கூறிப் பல புதிய விதிகளை புகுத்தினார். அவற்றில் ஒன்றுதான்  திறன் மிக்க நிர்வாகம் ஆகும்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு லூயி மன்னர்கள் ஆட்சியில், வரிக் கொடுமைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஒரு பக்கம் உணவுக்குப் பற்றாக்குறை, மற்றொரு புறம் செல்வக் குவிப்பு, ஏழைகள் மீதோ வரிக்கொடுமை! இத்தகைய காரணங்களால்தான் இயற்கைவாதிகள் (Pysiocrats) என்பவர்கள் பிரான்சு நாட்டில் கொடுமை யான முறையில் வசூலிக்கப்பட்ட வரிகளை  எதிர்த்தார்கள். இதுவும் பிரெஞ்சுப் புரட்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

குறிப்பாக வேளாண் துறையில் மிகை உற்பத்தி இருந்தால் வரி விதிப்பதில் தவறில்லை என்றும் வாதிட்டார்கள். ஆனால் இக்காலக்கட்டத்தில் Mercantilism என்ற பொருளாதாரக் கொள்கையை இங்கிலாந்தில் இருந்த சில பொருளாதார எழுத்தாளர்கள் வலியுறுத்தினர். இங்கிலாந்து அரசு வலிமையாக இருக்க வேண்டுமென்றால் வரிவிதிப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டனர். இதைத்தான் பொருளாதார நூல்களில் ‘வணிகஇயல் கொள்கை’ (Mercantilism) என்று குறிப்பிடுகின்றனர். இதற்கு எதிர்ப்பாகப் பிரரெஞ்சு இயற்கையாளர்கள் வரியின் சுமையை மக்கள் மீது ஏற்றக்கூடாது என்று வாதிட்டனர். இக்காலக்கட்டத்தில்  உருவான பொருளாதாரமே அரசியல் பொருளாதாரம் (Political Economy) என்று அழைக்கப்பட்டது. 18, 19ஆம் நூற்றாண்டுகளில்   பல பொருளியல் அறிஞர்கள் குறிப்பிட்ட அரசியல் பொருளாதாரத்தின் திறனாய்வே காரல் மார்க்சின் மூலதனம் என்ற நூலாகும்.

19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் செல்வாக்குப் பெற்ற நலப்பொருளாதாரம்  (Welfare Economics) உருவாயிற்று. இக்கொள்கையை ஏற்ற பிறகு கல்வி, பொதுச் சுகாதாரம் மற்றும் கட்டமைப்புத் துறைகளில் அரசின் செலவு பெருகியது. எனவே புதிய வரிகளும் விதிக்கப்பட்டன.

முதல் உலகப் போர் ஏற்படுத்தியப் பேரழிவும் பொருளாதாரச் சரிவும் ஐரோப்பிய நாடுகளைப் பெருமளவில் பாதித்தன. வரிகள் வழியாக வருவாய் ஈட்டினால்தான் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற கொள்கையும் வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவில் கிழக்கிந்தியக் குழும ஆட்சியில் நிலவரியைத்தான் அதிகமாக விதித்து வருவாயைப் பெற்றார்கள். 1857இல் நடந்த சிப்பாய்க் கலகத்தில் இராணுவச் செலவிற்காகப் புதிய வரிகளை விதிக்க முற்பட்டார்கள். தற்காலிகமாக  வருமான வரியும் 1857க்குப் பிறகு விதிக்கப்பட்டது. பிரித்தானிய ஆட்சியில் 1919, 1935 ஆண்டு அரசமைப்புச் சட்டங்களில் நடுவண் அரசு, மாகாண அரசு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான  அதிகாரப் பகிர்வும் தனித்தனியான வரிவிதிப்பு முறையும் வகுக்கப்பட்டன.

1935ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டப்படி 1937ஆம் ஆண்டு தமிழ் மாகாணத்தின் பிரதமராகப் பதவியேற்ற இராஜகோபாலாச்சாரியார் சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத் தலைவர் பி.ஜே.தாமசின் பரிந்துரையின் பெயரில் முதன்முதலில் விற்பனை வரியை விதித்தார். இந்த விற்பனை வரிதான் வாட் வரியாக மாறி இன்று சரக்கு-சேவை வரியில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் 1935ஆம் ஆண்டு பிரித்தானிய அரசியல் சட்டத்தில் மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிகளைக் கூட, 1950க்குப் பிறகு ஒவ்வொன்றாக ஒன்றிய அரசுப் பிடுங்கிக் கொண்டே வருகிறது. இதில் இறுதிக் கட்டம்தான் இன்றைய சரக்கு சேவை வரியாகும். 1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட போது, சேவை வரியைப் பற்றி எந்த விதியும் இடம்பெறவில்லை.

gst hotels2002இல் வாஜ்பாய் அரசால் அமைக்கப்பட்ட வெங்கடாசலய்யா ஆணையம் சேவை வரியை எஞ்சிய அதிகாரத்தை (Residual Powers) பயன்படுத்தி இவ்வரியை விதிப்பது மிகத்  தவறான முன்னுதாரணம் என்று கண்டனம் தெரிவித்தது. 2003லிருந்து ஒன்றிய அரசால் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட சேவைவரி இன்றைக்கு ஒன்றிய அரசிற்குப் பல இலட்சங் கோடி ரூபாய் வருவாயை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. ஒன்றிய அரசு தந்திரமாக மாநில எல்லைக்குள் விதிக்கும் இதுபோன்ற வரியைப் பற்றி மாநில அரசுகள்  பெரும் அக்கறையோ கவலையோ கொள்ளவில்லை. மதிப்புக் கூட்டுவரியை (வாட்) விதிப்பதற்கு ஒன்றிய அரசுக் கையாண்ட முறையை எதிர்த்து மேற்கு வங்க இடதுசாரி ஜோதிபாசு அமைச்சரவையில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான அசோக் மித்ரா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ‘மாநில அரசுகளின் உரிமை பறிபோகிறது இந்த வரியால் மாநிலங்களுக்கும் மக்களுக்கும் பலன்கள் கிடைக்காது’ என்று வாதிட்டார். இதில் ஒரு வியப்பு என்னவென்றால் மேற்குவங்க ஜோதிபாசு முதலமைச் சரவையில்  நிதியமைச்சராக பொறுப்பு வகித்திருந்த அஜிம்தாஸ் குப்தா வாட் வரியை நடைமுறைப்படுத்தும் ஆலோசனைக் குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.

தமிழ்நாட்டில் 2006வரை வாட் வரியைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு காரணம் தமிழ் நாடு திட்டக்குழுவின் துணைத்தலைவராகப் பணி யாற்றிய இக்கட்டுரையாளர் (பேராசிரியர் மு.நாகநாதன்) வாட் வரிக்கு எதிராக பல புள்ளிவிவரங்களை இணைத்து சிறு கருத்துரையை வழங்கினார். இதைப் பார்த்த தமிழ்நாட்டு அரசின் உயர் அலுவலர்களும் வாட் வரி வேண்டாம் என்பதை ஒப்புக்கொண்டனர். இந்தியா முழுவதிலும் வாட் வரி நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மட்டும் தனித்து நிற்கிறது என்று ஒன்றிய அரசின் சார்பில் ப.சிதம்பரம் அன்றைய முதல்வர் கலைஞரிடம் வலியுறுத்தினார். இவ்வரி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழ்நாட்டிற்கு ஏறக் குறைய ரூ.3000 கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. உடனடியாக இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதியளித்தது. ஆனால் இந்த உறுதிமொழியை ஒன்றிய அரசு காப்பாற்றவில்லை.

வாட் வரி முறையே 1 5 14.5 என்ற விழுக்காடுகளில் விதிக்கப்பட்டது. பல அமைப்புகளும் வணிகர்களும்  எதிர்த்தார்கள். வாட் வரியை நடைமுறைப்படுத்தினால் நுகர் பொருட்கள் மருந்துகள் விலை குறையும் என்று வாக்களிக்கப்பட்டது. ஆனால் அனைத்துப் பொருட்களின் விலையும் பன்மடங்காக உயர்ந்தது. தமிழ்நாடு அரசு தனது வளர்ந்து வரும் வருவாய்த் தேவையை ஈடுகட்டுவதற்காக வாட் வரி, வாட் அல்லாத வரிகள் என்று வகுத்துக்கொண்டு 2007 முதல் 2017 சூன் திங்கள் வரை இரண்டு வரிகளைப் பின்பற்றியது. சான்றாக வாட் வரி வழியாக 2010-11 நிதியாண்டில் தமிழ்நாடு பெற்ற வரி வருவாய் ரூ.12,563 கோடிகளாகும். 2015-16 நிதியாண்டில் பெற்ற வருவாய் ரூ.23,572 கோடி களாகும். வாட் அல்லாத வரியாக தமிழ்நாடு பெற்ற வருவாய் 2010-11 நிதியாண்டில் ரூ.13,795 கோடிகளாகும் 2015-16 நிதியாண்டில் இந்த வரி வருவாய் ரூ.30,574 கோடிகளாக உயர்ந்தது. காரணம் நமது குடிமக்கள் குடலை அறுத்துக்கொண்டு மதுவை அருந்தி 2015-16இல் செலுத்திய வரித்தொகை ரூ.15,702 கோடிகளாகும். இரண்டாவதாக பெட்ரோலியப் பொருட்கள் அளிக்கும் வரி வருவாய் ரூ.10,080 கோடிகளாகும். மூன்றாவதாக கரும்பு, புகையிலை மீது விதிக்கப்படும் வரிகளாகும். இதுமட்டுமல்லாமல் உச்சநிலையில் சில மதுவகைகளின் மீது 245 விழுக்காடு வரை வரிகள் விதிக்கப்படுகின்றன. ஏற்கெனவே ஒழங்காக இயங்கி வந்த மாநில வரி வருவாய், எல்லையில் சீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு அடித்த கொட்டங்கள் ஏற்படுத்திய குழப்பங்கள் எண்ணிலடங்கா. இதில் பாஜக காங்கிரசுக் கட்சிகளுக்கிடையே வேறுபாடுகள் இல்லை. தேசியம் என்பது புதிய முதலாளித்துவம் ஆகும் என்பதை இக்கட்சிகள் அறிவிக்காமலேயே மக்களை ஏமாற்றி வருகின்றன.

ஜனகண வரியே வரியே

ஏழை மீதுதான் எல்லா வரியுமே

ஜனகண உள்நாட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கே

எல்லா வரிச்சலுகைகளே ஜனகண

என்று புதிய கீதத்தைப் பாடி வருகின்றனர். இத்தகைய சூழலில் 2017 சூலை 1 முதல் ஒன்றிய அரசு நள்ளிரவில் சரக்கு சேவை வரி என்ற பெயரில் 5, 12, 18, 28 விழுக்காடு என நான்கு முனை வரிகளை விதித் துள்ளனர். பொருளாதாரப் பாடங்களில் முதன்மையான பாடமாக-பொது நிதியியல் (Public Economics) என்ற பாடமும் இளங்கலை முதுகலைப் பாடங்களில் இடம் பெற்றுள்ளது. எல்லாப் பொருளாதார  அறிஞர்களும் ஒட்டு மொத்தமாக மறைமுக வரிகள் மக்களை வாட்டி வதைக்கும் வரிகள் வரிச்சுமையை அதிகரிக்கும் வரிகள் என வாதிட்டுள்ளனர். இத்தயை மறைமுக வரியை ஆங்கிலத்தில் Regressive Taxes என்று குறிப்பிடுவ ர்கள். தமிழில் இதைக் கொடுங்கோன்மை வரிகள் என்றே குறிப்பிடலாம். இந்த விவரங்கள் எல்லாம் மக்களிடம் சென்று அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத் திசை திருப்பும் வகையில், ‘ஒரே வரி, ஒரே நாடு’ என்ற முழக்கம் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் எழுப்பப்படுகிறது. சான்றாக ஒன்றிய தீர்வை வரி  Central Excise Duty),   கூடுதல் தீர்வை வரிகள் (Additional Duties of Excise), மருந்து  கழிவறை சார்ந்த பொருட்களின் மீதான தீர்வை (Excise Duty levied under Medicinal and Toilet Preparation Act), இறக்குமதி மீதான கூடுதல் வரிகள் (Additional Duties of Customs) சேவை வரிகள் (Servics Taxes), துணை வரிகள் (Cesses), துணைக் கட்டணங்கள், (Surcharges), ஆகிய எல்லா வரிகளும் இணைந்து  CGST (Central Goods and Service Tax)  ஒன்றிய அரசின் சரக்கு சேவை வரியாக மக்கள் மீது திணிக்கப்படுகிறது.

மாநில வாட் வரி, விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, கொள்முதல் வரி, உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் கேளிக்கை வரிகள் தவிர்த்த, மாநில அரசுகள் விதிக்கும் கேளிக்கை வரி, ஆடம்பர வரி, எல்லாவிதமான நுழைவு வரிகள், சூதாட்டம் பந்தயம் பரிசு சீட்டுகளின் மீதான வரி கட்டணங்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக  SGST (State Goods and Service Tax)  மாநில அரசின் சரக்கு சேவை வரியாக மக்கள் மீது சுமத்தப்படுகிறது. இதே முறையைப் பின்பற்றி தில்லி அரசின் ஆளுமையின் கீழ் இயங்கும் 7 பகுதிகளில் (Union Territory Goods and Service Tax) இவ்வரியை விதிக்கிறார்கள.

மேற் குறிப்பிட்ட வரிக் கட்டமைப்புகளுடன்  ஒருங் கிணைக்கப்பட்ட சரக்கு சேவை வரி ((Integrated Goods and Service Tax)) 5, 12, 18, 28 விழுக்காடுகளில் மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வணிகம், சேவை, மீது ஒன்றிய அரசு விதிக்கிறது. ஆகவே ஒன்றிய அரசு மூன்று விதமான வரி  அமைப்புகளையும் மாநில அரசுகள்  ஒரு வரி முறையையும் பின்பற்றி வரிச்சுமையை மக்கள் மீது அடுக்குகின்றன. இது வரிச்சுமை மட்டுமல்ல; ஏழை நடுத்தர மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

மூன்று முறை இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் ஆரம்ப காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர் தாதாபாய் நௌரோஜி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போது, ‘நீங்கள் இங்கிலாந்து மக்கள் மீது வரியைப் போடுகிறீர்கள். ஆனால் இந்திய மக்கள் மீது இரத்தம் வழிய வரி போடுகிறீர்கள் (You are taxing the people of England but you are bleeding the people of India)’  என்றார். இதனால்தான், காந்தி நௌரோஜியைப் பொருளாதார தேசியம் கற்பித்த பிதாமகன் என்றார். ஆனால் இன்றோ, ஏழை எளியவர்களின் இரத்தம் உறிஞ்சும் வரி அமைப்பை நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் சீர்திருத்தம் என்று அறிவிக்கின்றார் மோடி. சீரழிவா? சீர்திருத்தமா? என்பதற்கான  வெளிப்பாடுகள் இப்போதே நாடெங்கும் நடைபெறுகிற வேலை நிறுத்தங்கள், வணிகர்களின் எதிர்ப்புப் போராட்டங்களின் வழியே தென்படத் தொடங்கிவிட்டன.

சான்றாக, தமிழ்நாட்டில் திருமண மண்டபத்தில் மணவிழா நடத்தினால் 18 விழுக்காடு வரி செலுத்த வேண்டும். மாநகராட்சிகள்தான் சாலை தெருவிளக்கு மற்றும் சுகாதாரப் பணிகளை மக்களுக்கு அளிக் கின்றன. தற்போது திருமண மண்டபங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் மணவிழா நடத்துவோர் பணம் கொடுத்துத் தண்ணீரைப் பெற வேண்டிய நிலையில் உள்ளனர். எந்த சேவையையும் வழங்காமல் தேவையற்ற முறையில் சரக்கு சேவை வரியாகத் திணிப்பது இதற்கு ஒரு தக்க சான்றாகும்.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டப்படி 1953-54ஆம் ஆண்டில் வரி ஆய்வு ஆணையம், (Taxation Enquiry Commision) ஒன்றிய, மாநில, உள்ளாட்சி அரசுகள் தனித்தனியே விதிக்கும் வரிகளைப் பரிந்துரைத்தது. இதன் அடிப்படை யில்தான் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் பல வரிகளை விதித்து வந்தன. இவ்வரி களையே  சுமையான வரிகள் என்று மக்கள் குற்றம் சாட்டி வந்தார்கள். இருப்பினும் நாட்டு வருமானமும் தனிநபர் வருமானமும் பெருகியதால் இவ்வரிகள் சரியானவை எனப் பொருளாதார வல்லுநர்கள் வாதிட்ட னர். நேர்முக வரிகள் வழியாக அதிக வருவாயைப் பெறுவதுதான் பொருளாதாரத்தில் வளர்கின்ற நாடுகளுக் குச் சரியான அடையாளம் என்று பல வரி இயல்  அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். சான்றாக வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அரசிற்கு நேர்முக வரிகள் வழியாக 60 முதல் 70 விழுக்காடு வரை வருவாய் கிடைக்கின்றது.

இந்தியாவில் 9, 8, 7 விழுக்காடுகள் பொருளாதார வளர்ச்சி தொடர்கிறது என்று முழக்கமிடும்  ஒன்றிய அரசு மறைமுக வரி வழியாகத்தான் அதிக வருவாயை ஈட்டுகிறது. இந்தப் புதிய சரக்கு சேவை வரி மறைமுக வரியினுடைய வருவாய் விழுக்காட்டை நேர்முக வரி வருவாயைக் காட்டிலும் பெருமளவில் அதிகமாக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

பிரதமராக நேரு இருந்த காலத்தில் நேர்முக வரியைத் திருத்தியமைத்து அதன் வழியாக ஒன்றிய அரசின் வரி வருவாயைப் பெருக்க வேண்டும் என்று விரும்பினார். 1957ஆம் ஆண்டு நிக்கலோஸ் கால்டர் என்ற இங்கிலாந்து நாட்டு வரி இயல் அறிஞரை அழைத்து நேர்முக வரிச் சீர்திருத்தக் குழுவை நேரு அமைத்தார். இரண்டு ஐந்தாண்டுத் திட்டக்காலங்களில் பெரும் பணக்காரர்கள் பெருகி வருவதை உணர்ந்த நேரு, இந்த வரி சீர்திருத் தத்தை மேற்கொண்டார். 1957க்குப் பிறகுதான் தனிநபர் வருமான வரியிலிருந்து குழுமங்களின் வருமான வரி (Corporate Tax) பிரிக்கப்பட்டது. இந்த இரண்டு பெரிய வரிகளுக்குத் துணை வரிகளாக-கொடைவரி (Gift Tax), செல்வவரி (Wealth Tax), இறப்பு வரி (DeathTax), மூலதன இலாபத்தின் மீதான வரி (Capital Gain Tax), செலவு வரி (Expenditure Tax) எனப் பணம் படைத் தோர்கள் வரி ஏமாற்றாமல் இருப்பதற்காக நேரு காலத்து ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டன. ஆனால் நேரு மறைவிற்குப் பிறகு ஒவ்வொன்றாக இந்தத் துணை வரிகளை நீக்கிப் பணக்காரர்கள் தங்கள் செல்வாக்கை உயர்த்திவிட்டனர்.

மேலும் 2013இல் ஒன்றிய அரசிற்குத் தேசியப் பொது நிதியியல் ஆய்வு மையத்தால் அளிக்கப்பட்ட அறிக்கை யில் ஆண்டு ஒன்றிற்கு உள்நாட்டில் மட்டும் நேர்முக வரிகளைக் கட்டாமல் ஏமாற்றி ரூபாய் 23 இலட்சம் கோடிகளைக் கறுப்புப் பணமாகப் பதுக்குகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் வரி நிர்வாகத்தைச்   செம்மைப்படுத்துவதற்கும்  பல வல்லுநர் குழுக்கள் பல பரிந்துரைகளை வழங்கியுள்ளன. இந்த முதன்மையான பரிந்துரைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஏழை எளிய நடுத்தர மக்களை-சிறு வணிகர் களைப் பாதிக்கின்ற சரக்கு சேவைவரியை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியது வரிக்கொடுங்கோன்மையின் உச்சநிலையாகும்.

அண்மையில் வெளிவந்த இந்திய புள்ளிவிவரங் களின்படி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்  1969 லிருந்து 1991 வரை ரூபாய் 2 இலட்சம் கடன் பெற்றவர்கள் எண்ணிக்கை 99.3 விழுக்காடாகும். இவர்களில் பெரும்பாலானோர் சிறு வணிகர்கள் சிறு விவசாயிகள் மாணவர்கள் என்று புள்ளிவிவரம் சுட்டுகிறது. 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு வணிக வங்கிகளில்  பணக்காரர்கள் புகுந்து தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது சொல்லப்பட்ட வாக்குறுதி களை அறவே அழித்தனர். 2015 புள்ளிவிவரப்படி ரூபாய் 100 கோடி முதல் 1000 கோடி வரை கடன் பெற்ற பெரு முதலாளிகள் எண்ணிக்கை 86 விழுக்காடாகும். ரூபாய் 2 இலட்சத்திற்குக் குறைவாகக் கடன் பெற்றவர்கள் எண்ணிக்கை 6.9 விழுக்காட்டினர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளைப் பயன்படுத்தித் தான் தங்களின் மூலதனப் பெருக்கத்தை உருவாக்கி, மக்களின் பணத்தைப்  பெரும் முதலாளிகள் சூறையாடி யுள்ளனர் என்பது தற்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த முதலாளிகள் செலுத்த வேண்டிய கடன் தொகை 2016 வரை ரூ.8 இலட்சம் கோடிகளாகும்.

இதைத் தவிர 1991 முதல் 2015 வரை நேர்முக, மறைமுக வரிச்சலுகைகளைப் பெரு முதலாளிகள் பெருமளவில் பெற்றுள்ளனர். அத்தொகையை ஒட்டு மொத்தமாகக் கூட்டினால் ஏறக்குறைய 200 இலட்சம் கோடியைத் தாண்டுகிறது. 2017ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் பல்முனை வறுமைக்கோட் டிற்குக் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 50 விழுக்காடாகும். அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒப்பிடும் போது 93 விழுக்காடாக உயர்ந்துள்ளது.  இது போன்று  ஏழை எளிய சாதாரண மக்கள் நுகரும் பொருட்கள் தேநீர் திண்பண்டங்கள், குழந்தைகள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றின் மீது சரக்கு சேவை வரியைச் சுமத்துவது பொருளாதார அறிஞர்களால் சுட்டப்படுகிற வரிச்சமத்துவக் கொள்கையை (Principle of Equity) ஒன்றிய அரசு திட்டமிட்டுக் குலைக்கிறது. மேலும் கடந்த ஓராண்டாக வேளாண்மை, தொழில், சேவை ஆகிய மூன்று துறைகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. இச்சூழலில் இந்தச் சரக்கு, சேவை வரி பெரும் சீரழிவை மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும். மேலும் இருக்கின்ற குறைந்த வரி அதிகாரங் களைக் கூட மாநிலங்கள் இழந்து வருகின்றன. இந்தியா ஒரே வரி, ஒரே நாடு என்கிற முழக்கத்தின் வழியாக ஒரு கொடுங்கோன்மை பாசிச அரசாக ஒன்றிய அரசு மாறி வருகிறதா?