“சுயராச்சிய அரசமைப்பில் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மைக்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு வகுப்புக் குத் தனி அரசியல் உரிமைகள் தரப்பட வேண்டும் என்றால், அது தாழ்த்தப்பட்ட வகுப்புதான் என்று பலரும் கருதி வருவதாக நான் உறுதியாக நம்புகிறேன். இதோ ஒரு வகுப்பு இருக்கிறது; இவ்வகுப்பைச் சேர்ந்தவர் கள் வாழ்வுக்கான போராட்டத்தில் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்பதில் அய்யமே கிடையாது.

அவர்களைக் கட்டிப் பிணைத்துள்ள மதமானது அவர்களுக்குக் கவுரவத்துக்குரிய இடம் தருவதற்குப் பதிலாக அவர்களைத் தொழுநோயாளிகளாக, சாதா ரணமாகக் கலந்து உறவாடத் தகாதவர்களாக முத்திரை யிடுகிறது. பொருளாதார வகையில் சொன்னால், இவ்வகுப்பானது தனக்கென்று சுயேச்சையான வாழ்க்கை வழி ஏதுமில்லாமல், அன்றாடம் சோற்றுக்கு உயர் வகுப்பு இந்துக்களையே முழுக்க முழுக்க சார்ந்திருக் கிறது.

இந்துக்களின் சமூக காழ்ப்புகளின் காரணத்தா லேயே எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டன என்ப தல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்க்கையில் ஏணிப்படியில் ஏறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்யும் பொருட்டு சாத்தியமான ஒவ்வொரு கதவையும் மூடித் தாழிட இந்து சமூகம் முழுவதிலும் திட்டவட்டமான முயற்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் சாதி இந்துக்கள், தங்களிடையே எவ்வளவுதான் பிளவு பட்டிருந்தாலும், சாதாரண இந்தியக் குடிமக்களின் தரப் பிலான சிதறலான சிறுபகுதியாய் அமைந்துள்ள தாழ்த் தப்பட்ட வகுப்பினரின் தரப்பிலான எந்தவொரு முயற்சி யையும் ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்குவதற்கு எப் போதும் நிரந்தர சதியில் ஈடுபட்டிருப்பதாகச் கூறுவது மிகையாகாது”

- டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

(1932இல் பிரித்தானிய அரசு இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேதை அம்பேத்கர் கோரிய தனிவாக்காளர் தொகுதி முறையை வழங்கியது. அதை எதிர்த்து காந்தியார் எரவாடா சிறையில் சாகும் வரை உண்ணாநோன்பை மேற்கொள்ளப் போவதாக அறிவித் திருந்தார். காந்தியார் தன் நிலையை மாற்றிக் கொள்ளு மாறு வேண்டி அம்பேத்கர் 1932 செப்டம் பர் 19 அன்று வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி மேலே தரப் பட்டுள்ளது)

Pin It