தோழமை உறவுகளுக்கு வணக்கம்.

தமிழ் இதழியல் வரலாற்றில் விளிம்புநிலை மக்களுக்கென தரமான ஓர் இதழாக தலித் முரசு வந்துகொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

தன்னுடைய கொள்கையில் என்றும் மாறாமல் எந்தவித வியாபார நோக்குமில்லாமல் சமூக சமத்துவ ஜனநாயகத்திற்கான அத்தனை வேலைகளையும் தலித் முரசு ஆற்றி வருகிறது.

எந்த பலமும் இல்லாமல் இப்படி ஒரு இதழை 16 ஆண்டுகளாக இடைநிறுத்தம் இன்றி கொண்டுவருவது மிகவும் சவாலான சிரமம் என்பது தாங்கள் அறியாததல்ல. அதனால் தலித் முரசுக்கு பெரும் கடன்சுமையும் தொடர்ந்து வெளிவர முடியாத நிதிநெருக்கடியும் இப்போது வந்திருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் தலித் முரசு நின்றுவிடக்கூடாது என்பதும் நம் காலத்திய வரலாறு நம் கண்ணெதிரே அழியக்கூடாது என்பதும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

அதனால், அதற்காக நிதி சேர்ப்புக்கான இயக்கமாக “தலித்முரசு காப்பு நிதியம்” என்னும் அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். அதன் சார்பில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஒரு கலைநிகழ்வினை ஒழுங்குபடுத்தி அதன்மூலம் தலித் முரசுக்கான நிதியை திரட்டுவது எனத் தீர்மானித்து வரும் செப்டம்பர் 23, 2012 அன்று அந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

உங்களிடம் எங்கள் வேண்டுகோளாக நாங்கள் அன்புடன் வைப்பது  'தலித் முரசுக்கு நிதி தாருங்கள்; உங்கள் தோழமைகளிடம் நிதியைப் பெற்றுத் தாருங்கள்; அதன்மூலம் தலித் முரசு இதழின் சமூகப்பணிக்கு உரமூட்டுங்கள்; இந்தப் பணி வெற்றியடைய உதவுங்கள்”

பணவிடை/ வரைவோலை/ காசோலை என பணம் அனுப்பவர்கள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும் (உங்கள் நன்கொடைக்கானப் பற்றுச்சீட்டு கண்டிப்பாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்)

R.Ramaprabu@ Yazhan Aaathi,
18, pudumanai IInd st, Kaspa – B, Ambur.Vellore dt, Tamil Nadu. 635 802  Cell : 9443104443

நிதியை வங்கியிலும் செலுத்தலாம். கணக்கு எண்: A/C 13041000019317, R.Ramaprabu, HDFC Bank, Ambur Branch

மிக்க நம்பிக்கையுடன் உங்கள் உதவியை நாடும்

யாழன் ஆதி,
ஒருங்கிணைப்பாளர்,
தலித் முரசு காப்பு நிதியம்.9443104443

Comments

2 comments

2
தமிழ்ஹிந்து
தலித் முரசு தலித்களுக்காக நடத்தப்படும் இதழ் என்று சொல்லப்பட்டாலும் அது மதமாற்ற,இந்திய விரோத சக்திகளின் ஆதரவாக செயல்படுகிறது. அது ஒரு போதும் பாகிஸ்தானை விமர்சித்தோ இஸ்லாமிய பயங்கரவாதத்தினை எதிர்த்தோ எழுதியதில்லை. மதமாற்றம் தீர்வு, இந்து மத்த்திலிருப்பதால் தலிகளுக்கு விடுதலை இல்லை என்றே எழுதி வந்தது.மேலும் தலித்களுக்கு ஆதரவாக சிபிஎம் கட்சி அமைத்த தீண்டாமை ஒழிப்பு முண்ணனி போன்றவற்றை வரவேற்க்காமல் குறை கூறியே எழுதியது. தலித் முரசின் கபட நாடகங்களை புரிந்து கொண்ட தலித்களும்,பிறரும் அதை ஆதரிக்கவில்லை. மதமாற்ற சக்திகளின் முகவராக திகழும் தலித்முரசு அவர்களிடம்ல்லவா நிதி திரட்ட வேண்டும். தலித் முரசு என்ற பெயரில் தேசவிரோத,மதமாற்றும் சக்திகளின் ஊதுகுழலாக செயல்பட்ட பத்திரிகை நின்று போனால் இழப்பு அந்த சக்திகளுக்கேயன்றி தலித்களுக்கு அல்ல.
jayapal
ஓட்டை பாத்திரத்தில் எவ்வளவு ஊட்றி என்ன பயன் ?

ஓட்டை யென்ன ?

அடைப்பது யார், எப்படி?

பணம் எவ்வளவு வேண்டும் ?

ஒரு இதழ்க்கான செலவு எவ்வளவு ?

ஒரு மாதத்திற்கான செலவு எவ்வளவு ?
எவ்வளவு இதழ் வெளியிடுகிறஈர்கள் ?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.