beef 400

சமூகத்தில் ஒரு மனிதன் என்ன வகையான உணவு உண்ண வேண்டும் என்பதைத் தீர் மானிக்கும் சுதந்திரம், அந்த தனிமனிதனைச் சார்ந்ததே. அதைப் பறிப்பதையே பசுவதைத் தடைச்சட்டத்தை அமுல்படுத்தி வரும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.ஸின் போக்கு நமக்குக் காட்டுகிறது.

உணவு வகையில் நாம் எதை உண்ண வேண்டும் என்ற பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்.ஸின் முடிவு, அரசியல் ரீதியான பாசிஸத்தை விட மிகவும் ஆபத்தானதாகும்.

வரலாற்றில், மிகவும் கொடூரமான மனிதனாகப் பேசப்படும் ஹிட்லர் சைவ - உணவு உண்ணும் மனிதராம்! ஆனால், அவர் கூட, தன்னைப் போல் பிறமனிதர்களும் சைவ உண வையே உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்த வில்லை. ஆனால், நம் நாட்டில் பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதைச் செய்யத் துணிந் திருக்கிறது.

மோகன் பாகவத்தின் செயல்திட்டமும், பிரதமர் நரேந்திர மோடியின் விகசனத் திட்டமும் ஒன்றுக்கு ஒன்று மோதுவதினால் ஏற்படும் விளைவுதான் ‘கர்-வாபசி’ (வீட்டுக்குத் திரும்பவும் = மீண்டும் இந்து சமயத்திற்குத் திரும்பவும்)யும், பசுவதைத் தடைச்சட்டமுமாக வெளிப்படுகிறது. மோகன் பாகவத் சங்கப் பரிவாரின் தலைமைப் பொறுப்பில் இருந்து, மீண்டும் சனாதனப் போக்கை நம் நாட்டில் கொண்டு வரத் துடிப்பவர்; இந்துமத வெறியுள்ள பிராமணர். நாக்பூரைச் சேர்ந்தவர். சங்கப் பரிவார் அமைப்பை கையில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடியின் குடுமியைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருப்பவர்.

பசுக்களையும் காளைகளையும் கொல்லக் கூடாது என்று சொல்லக்கூடியவர்கள் எருமை களைக் கொல்லலாம் என்று சொல்வதற்குப் பின்னால் ஒளிந்திருப்பது வருணாசிரம சிந்தனையே!

பசு என்றால் புனிதமான மிருகம்; கருத்த நிறமான எருமைகள் இழிந்த, கீழ்த்தரமான மிருகங்கள் என்ற எண்ணம்தான் அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது. மட்டுமல்ல; அவை தலித்துகளும், அடித்தள மக்களும் வீடுகளில் வளர்த்துவரும் மிருகமும் கூட!

காளைகளைக் கொண்டு உழுவதும், வண்டியில் பூட்டுவதும் இப்போது குறைந்து வருகிறது. இப்படி யிருக்க, அவைகளைக் கொல்லவும் கூடாது என்று சொன்னால் அப்புறம் அவைகளை என்னதான் செய்வது?

இப்போது நமக்குக் கிடைத்துக் கொண் டிருக்கும் பாலில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு எருமை மாடுகளிலிருந்துதான் கிடைத்துக் கொண் டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸின் ‘கேள்வி’க்கு மட்டும் பயன்படும் வகையில் ஒருவரும் பசுக்களை வளர்க்க முன்வரமாட்டார்கள்.

‘லவ் ஜிஹாத்’பிரசாரத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ். விரும்புவது என்னவென்றால் சமூகத்தில் எவரும் காதலித்து திருமணம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்பதே! ஆனால், அதே வேளையில் இந்துக் களிடையே தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த வர்கள், உயர்சாதிப் பெண்களைத் திருமணம் பண்ணுவதை இவர்கள் ஏன், எதிர்க்கிறார்கள்? உயர்ந்த சாதிப் பெண்ணும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த ஆணும் ஒரே மதத்தைச் சேர்ந் தவர்கள்தானே? ஆணும், பெண்ணும் இந்துவாக இருந்தாலும்கூட இவர்கள் அதை அங்கீகரிப்ப தில்லை.

சமூகத்தில் எல்லோரும் சமஸ்கிருதமொழியைக் கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் இவர்கள், தங்கள் பிள்ளைகளை கிருத்தவமிஷனரிகள் நடத் தும் இங்கிலீஷ் மீடியம் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். அவர்கள் வெளிநாடு களுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்தமான எந்த உணவை வேண்டுமானாலும் உண்டு கொள்ள லாம்; அங்கே, அவர்களுக்கு உணவு கட்டுப்பாடு எதுவும் இல்லாத இடங்களில் வேலைசெய்து வாழ்ந்து கொள்ளலாம்! தலித்துகள், அடித்தள மக்கள் போன்றவர்களின் பிள்ளைகளை சமஸ் கிருதம் படிக்க வைத்து, வேலை கிடைக்காமல் செய்துவிடுவார்கள்.

கேரள மாநிலத்தில் முன்பு மதம் மாறிய ஆதிக்க சாதியினர் கிருத்தவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், அதே சமயத்தில் மதம் மாறிய ஏழை-எளிய தலித் மக்களையும், அடித்தள மக்களையும் கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ மீண்டும் இந்துமதத்திற்குத் திரும்பவும் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அவர்களை ஏவிவிட்டு, கிருத்தவ தேவாலயங்களை இடித்துத் தள்ளுகிறார்கள். இதற்குப் பதிலாக தலித் மக்களுக்கும் அடித்தள மக்களுக்கும் வேதம் கற்றுக்கொடுத்து குருவாயூர் போன்ற கோவில் களில் பூசகர்களாகப் பணிபுரிய வைப்பதில் இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டலாமே!

நன்றி: மாத்ருபூமி மலையாள நாளிதழ் - 24-3-2015

தமிழில்: ஏ.எம்.சாலன்

Comments

1 comment

1
Sam
then what about the rules which Islamic organizations imposing on normal muslims....? I could not see a single article against it..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.