school_student_250தெருவுக்குத் தெரு
முளைத்திருக்கின்றன
பல குழந்தைத்
தொழிற்சாலைகள்

காலைக் கடிக்கும் ஷூ
கழுத்தை நெரிக்கும் டை
முதுகு பொறுக்கும் சுமையுடன்
தீயெனப் பொசுக்கும்
வெயிலில் சீருடையணிந்த
குழந்தைத் தொழிலாளிகள்

காதைக் கிழிக்கும்
ஹாரனுடன் தெருவில் வந்து
திரும்புகின்றன இவர்களை
ஏற்றிச் செல்லும் சிறை வண்டிகள்

கையசைத்துச் சிரிக்கும்
கனவுப் பைத்தியங்களைக்
கண்ணாடி வழியே கண்டவாறு
வாரி எறியப் பட்ட
காகிதக் குப்பைகளின்
நடுவே விதியே என
குழந்தைத் தொழிலாளிகள்

தலை வாரி மை பூசி
தன் அப்பாவின்
கனவுச் சிறையில்
அடைக்கப்பட்ட கைதியாக
கடைசிவரை கண்ணாடி
வழியே பார்த்தவாறு நம்
குழந்தைத் தொழிலாளிகள்

- அருண் காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
சோமா
இன்றைய காலச்சூழலில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் கூட தொழிலாளி போலத்தான்...நாளைக்கானப் பணிக்கு இன்று ஒத்திகை நடத்துகிறார்கள். இன்றைய குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. வீடியோ கேம்ஸ், கிரிக்கெட் இன்று கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. கவிதை நன்று.
கி.பிரபா
கருவிலிருக்கும் வரை தான் அம்மா குழந்தைக்குச் சொந்தம். மேலும் இரண்டு ஆண்டுகள் இருவருக்கும் சொந்தம். பின்னர் பள்ளி எனப் பெயரில் உள்ள சிறைச்சாலையில் மனவளர்ச்சியில்லா நிலையில் கொடூரமாக வளர்க்கப்படுகின்றனர்.தனக்குப் பொழுது போக வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் எண்ணத்திற்காக ஆசிரியர் எனப் பெயர் தாங்கி அடிப்படை பண்புகளே இல்லாமல் குழந்தைகளை விலங்குகள் போல் நடத்துகின்றனர் என்பதே உண்மை. பெற்றோருக்கு அறிவிருந்தால் இந்நிலைக்குத் தம் குழந்தைகளைப் பணம் செலுத்தி விற்க மாட்டார்கள். பேணி வளர்க்க வேண்டிய பெற்றோர், முறையாக வளர்க்க வேண்டிய பெற்றோர் பெரும்பாலும் இன்றில்லை என்பதுவும் உண்மை. கூட்டுக் குடும்பம் இல்லை. உறவுகள் இல்லை. உணர்வுகள் மறத்தும் மறந்தும் குழந்தைகள் வளர்க்கப் படுகின்றனர்.ஆகவே பின்னொரு நாளில் அவர்கள் சொத்துரிமைக்கு மட்டும் பெற்றோரை நாடுகின்றனர்.தன் வினை தனைச் சுடும் என்பதற்கேற்ப பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு முறையாக வாழத் தெரியாமல் திசை மாறிப் போய் விடுகின்றனர். கனவுச் சிறை குழந்தைகள் களவாணிகளாகவும் கொலையாளிகளாகவும் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.பணம் படுத்தும் பாடு ஒரு புறம்; மேலை நாட்டு மோகம் மறுபுறம்.
அருண் காந்தி
''கருவிலிருக்கும் வரை தான் அம்மா குழந்தைக்குச் சொந்தம்''
ஆம் உண்மைதான்...தற்போதைய நிலை அப்படித் தான் இருக்கிறது.இந்நிலை கண்டு பெற்றோர்கள் உள்ளே மனம் வருந்தினாலும் குழந்தையின் எதிர்காலம் என்ற ஒன்றை கருத்தில் கொண்டு எந்த மாறுபாட்டையும் கொண்டுவர முன்வருவதில்லை.
kaarunyan
கையாகாலாகாத தமிழ் சமுதாயம் நமது. வேறு என்ன சொல்ல. பணம் கொழுத்த சாராய வியாபாரி, அரசியல் அங்கீகாரம் பெற்ற ப்ரத்தல்கள், குண்டி கொழுத்த சமுதாய சுரண்டிகள், கல்வி கொலை செயயும் கல்விதந்தைகள் என்னும் ஓனாய்கள் உள்ள வரை கல்வி இப்படித்தான் குழந்தைகள் என்றும் பாராமல் கல்வி கர்ப்பழிக்கப்பட்டுக்கொண்டெ தான் இருக்கும். வாழ்க தமிழ் வாழ்க கல்வி. இப்படிக்கு கையாலாகத ஒரு ஆசிரியன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.