இந்த இளம் பெண் ஈரான் இயக்குனரின் படங்கள் கற்பனைக்கும், யதார்த்தத்திற்கும் புனைவிற்குமிடையிலான வேறுபாட்டை உணர்த்துவது. அரசியல் உக்கிரமும், வலியின் ஆழமும் இணைந்தவை. அவரின் உரையாடலில்...

பேட் இன் (Fade in) : யதார்த்தத்திற்கும் புனைவிற்குமான சமன்பாட்டை திரைப்பட் ஆக்கத்தின் சிறந்த வழியாகக் கருதுகிறேன். புனைவு பகுதியில் அது மாயமானதாகவும், யதார்த்தம் வெளியேறக்கூடியதாகவும் இருக்கிறது. யதார்த்தமான வாழ்க்கையும், அன்பை உருவாக்கும் கலைஞனின் கற்பனையும் இணைந்து ஆக்கபூர்வ விடயங்களை உருவாக்கும்

பேட் அவுட் (Fade out) : விமர்சனத்துக்கான ஊடகமல்ல திரைப்படம். எதையும் மாற்ற நான் விரும்பவில்லை. ஏதோ சிலவற்றை நான் காட்டுகிறேன். கலை படைப்பு, திரைப்படமும் அரசியல் பிரசாரமாக்கப்படுவது கால ஓட்டத்தில் நிலைபெறாது. காலாவதியாகும் விஷயமாகிவிடும்.

பேட் இன் : எனது படங்களில் நான் பங்கேற்கும் விஷயங்கள் ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய உலகம் பற்றியவை. மதத்தை விமர்சிக்கவோ, நம்பிக்கையை விமர்சிக்கவோ பிரச்னைகள் உள்ளன என நினைக்கவில்லை. எல்லா சமூகங்களிலும் அது உள்ளடக்கிய கலாச் சார மத நியாயங்களை சார்ந்த சில அறியாமைளை வெளிச்சம் போட்டுக் காட்ட முயல்கிறேன்.

பேட் அவுட் : பிடரிக்கோ கார்சியோ லோர்க்காவினை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். நிலைபெற்ற காலமற்ற உலகின் இடைவிடாத சண்டையைப் பற்றிய மாற்றங்களைப் பதிவு செய்தவர். அவரது படைப்புகளுடன் அவரின் கலைப்பார்வையை இணைப்பது எனது இம்முயற்சியாகும்.

Pin It