ராஜ்கபூர் திரைப்படங்களின் ஈர்ப்பால் சிட்டோரா அவிலியாவின் திரைப்படப்பயணம் ஆரம்பித்தது. பின்னால் கோபக்கார அமிதாப்பச்சனும், மிதுன் சக்கரவர்த்தியின் ஈர்ப்பும் வாழ்க்கை சக்தியாக திரைப்படத்தைக் கைக்கொள்ளச் செய்தது. ரஷ்யாவின் மிகப்பெரிய திரைப்படத் திருவிழாவின் ஆக்கபூர்வமான இயக்குனரான அவரின் படைப்புகளும், அமைப்பு செயல்பாடுகளும் கேரள திரைப்பட விழாவின் நீதிபதிகளில் ஒருவராக்கியுள்ளது. நான் திரைப்படங்களை எடுப்பதில்லை. ஆனால் திரைப்படமில்லாமல் என்னை நான் கற்பனை செய்து கொள்ள முடியாது என்கிறார் அவர்.

நல்ல திரைப்பட வரையறை : எனக்குத் திரைப்படம் என்பது வித்யாசம் காட்டுவது. பிரம்மாண்டமான உலகம் கலையையும், வியாபாரத்தையும் கலவையாக்குகிறது. நல்ல திரைப்படம் வியாபாரம், கலைக்குமான பிரிவை ஒன்றிணைக்கிறது.

திரைப்படம் என்ன செய்கிறது?

நவீன உலகில் மிகப்பெரிய கவர்ச்சியான அம்சமானதால், திரைப்படம் எல்லாவற்றுடனும் தொடர்பு கொண்டுள்ளது. வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் இறந்த, நிகழ், எதிர்காலங்களில் காலத்தை புரிந்து கொள்ளச் செய்கிறது. உலகம் முழுவதும் எப்போதுமிருக்கும் வித்யாசங்களைப் பற்றியது திரைப்படம். வாழ்க்கையின் பிரகாசங்களை இணைக்கும் பர்ர்வையாகிறது. கலாச்சாரம், நாடுகள், மக்களை இணைக்கும் முதல் தர வழியாகும் திரைப்படம்.

திரைப்பட விழாக்கள் : உலகம் முழுவதிலிருந்தும் வரும் திரைப்படங்களைக் காணவும் அடையாளம் காணவும் எனக்கு திரைப்பட விழாக்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. எவ்வகை பிரச்னைகள் முக்கியமானவை என்பதை ஒருவர் அறிந்து கொள்ளலாம். அரசியலை விடவும் முக்யத்துவம் வாய்ந்த பிரச்னைகளை இணைத்தும் ஒருங்கிணைத்தும் முடிவாகிறது.

நல்ல திரைப்படங்களை அடையாளம் காண : தொழில்தனம், ஒரு நல்ல ஸ்கிரிப்டை முழுமையாக்குவது, நல்ல நடிகர்கள், நல்ல இயக்கம் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் பார்க்கிறேன். நல்ல தொழில் நுட்பத்திற்காக உறுதுணை புரிகிறது. எனவே திரைப்படங்கைளைப் பார்க்கிறபோது திறமையின் பொலிவை நான் பார்க்கிறேன். யதார்த்தமான கதாபாத்திரங்கள் யதார்த்தமான பிரச்னைகளுடன் தற்போதைய கால சூழலை பிரதிபலிக்கும் உண்மையானப் படங்களை நான் விரும்பிகிறேன்.

ரஷ்யன் திரைப்படம், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் : ரஷ்யத் திரைப்பட உலகில் யுஎஸ்எஸ்ஆர் க்கு முந்தின நிலை என்பது புதிய முன்னேற்றங்களுக்கான ஆச்சர்யமானவை, ஆனால் அது தேவையான முறையல்ல, எப்போதும் இருந்து வரும் நல்ல திரைப்படங்கள் முக்யப் பிரச்னைகளை ஆழமாக விவாதிக்கிறது. ஆனால் இது ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் வழக்கமாகக் காணப்படுவதல்ல, உலக ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வெகுஜன ஈர்ப்பு முறைகளை அவர்கள் அறிந்திருக்கின்றனர். இதுவே பொதுவாகிப் போயிற்று.

(மொழிபெயர்ப்பு : ஆர்.பி.எஸ் : மிதிதிரி)
Pin It