பதறிப் பறந்து போனது
தேன் சிட்டு
அகலாத பார்வையால்
துரத்திய கரும்பூனை
படர்ந்திருந்த பாசியில்
சறுக்கிக் கால் தவற
விட்டத்து நாட்டோடுகள்
நான்கைந்து
நடுமுற்றத்து
தண்ணீர் தவலையில்
தப்புத் தாளமிட்டன.
போர்த்திய வேட்டியின்
சூரிய திட்டுகள்
புரண்டு படுத்ததில்
இடம் மாறி விழுந்தன
நாசி தொட்டசக்கி
நனவை மீட்டது
நசுக்கிய பூண்டு
நித்திரை விலக
நினைவில் முட்டின
காலைக் கடனும்
வாங்கிய கடனும்.
- சித்தன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அகநாழிகை - அக்டோபர் 2009
கடனுக்கு
- விவரங்கள்
- சித்தன்
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009