அரசியல் கதகளி! சாதியில் மறையும் கட்சி ‘இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் நாட்டை தலைமை ஏற்று ஆளும் நிலை வரவேண்டும்’ - தமிழிசை சௌந்தர்ராஜன் (நாடார் மகாஜன சங்க மாநாட்டில்...)
கட்சிகளிலுள்ள பலர் சாதிச் சங்க மாநாடுகளிலும் பங்கேற்கின்றனர். இந்திய ஆளுங்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக உள்ள தமிழிசையே சாதி மாநாட்டில் கலந்துகொள்வதும் சாதி அடிப்படையில் நாட்டின் தலைமை வரவேண்டும் என்று சொல்வதும் இன்று ஏற்பட்டுள்ள நிலை. அப்படியானால் கட்சி எதற்கு? கட்சியில் தலைமைப் பதவி எதற்கு? இது சித்தாந்தப்பேச்சு.!?
“தி.மு.க கருணாநிதிக்கும், அ.தி.மு.க. ஜெயலலிதாவுக்கும் என்னவித்தியாசம்? வயது மட்டும்தான் வித்தியாசம். ஒருவர் வேட்டி கட்டியிருக்கிறார், மற்றவர் சேலை கட்டியிருக்கிறார்”. - தோழர் முத்தரசன்
தி.மு.க & அ.தி.மு.க இரு கட்சிகளுக்குமான கொள்கை கோட்பாடுகளை, பொதுவுடமைச் சிந்தாந்தத்தின் அடிப்படையில் இதைவிட வேறுயாராலும், இப்படித் தெளிவாகச் சொல்லிவிட முடியாது.
ஐயோ பாவம் தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு- எச்.ராஜா
ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லையாம். அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம் என்னே நாகரிகம்!
தமிழ் நாட்டிலுள்ள வயதானவரைப் பார்த்துக் கேட்கிறேன். இதுவரைநீங்கள் எத்தனைக் கட்சிகளை உடைத்தீர்கள்? சிங்கத்தைக்காலி செய்தகிழட்டு நரியின் கதையைநானறிவேன்... கிழட்டு நரி... மாற்றுச் சக்தியான மக்கள் கூட்டணியை உங்களால் உடைக்க முடியாது. - வைகோ.
அரைநூற்றாண்டு அனுபவம் மிக்க மூத்த அரசியல் தலைவர் கலைஞரை, இந்தியத் தலைவர்கள் மதிப்போடு பார்க்கும் போது, “வயதானவரைப்” பார்த்து கேட்கிறேன் - “கிழட்டு நரி” என்றெல்லாம் பேசுகின்ற இவரின் அரசியல் பண்பாட்டு நாகரீகத்தை, வேறு எங்குதான் போய் பார்க்க முடியும்! பலேபலே!
கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் கலைஞருக்கு எதிரான செயல்பாடுகள் இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழகத்தில் எடுபடும்?
கலைஞரின் அரசியல் இன்னும் எத்தனை காலத்திற்குத் தமிழகத்தில் எடுபடுகிறதோ, அதுவரை அவருக்கு எதிரான அரசியலும் எடுபடும். அது இன்று நேற்றுஅல்ல. பெரியாரின் குடி அரசு அலுவலகத்திலேயே அவருக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் உண்டு.
அண்ணா காலத்துத் தி.மு.க.விலும் கலைஞருக்கு எதிரான அரசியல் ஏராளம் இருந்தது. தனக்குப் போட்டியாளர்களாக இருந்தவர்களுக்கு எதிராகக் கலைஞர் செய்த அரசியலும் நிறைய உண்டு.
மாற்றுக் கட்சியிலும் கலைஞர் ஆதரவு, கலைஞர் எதிர்ப்பு என்ற இரு அணிகள் உருவாயின. கலைஞரை எதிர்ப்பது மட்டுமே அரசியல் கொள்கை என்று செயல்படுகிறவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை வந்து போய்விட்டார்கள். எல்லாவற்றையும் கடந்து தனது அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்.
நன்றி ஜுனியர் விகடன் ஒரு கேள்வியும் பதிலும் ‘