தொடர்புடைய படைப்புகள்

rn ravi 340எப்போதும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசுடன் முட்டிக்கொண்டு இருப்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என்று தெரிந்தும் கூட; மதவாத, சனாதன விதைகளை விதைக்க முயலும் வேண்டாத வேலையைச் செய்து கொண்டு இருப்பார் அவர். ஆனால் செய்ய வேண்டிய வேலையை மட்டும் செய்யமாட்டார்.

 இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களை அவருக்கு எதிராகவே போராடும் அளவுக்கு நிலைமையை உருவாக்கி விட்டார்.

அந்தப் பல்கலைக் கழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பட்டங்களை வழங்காமலும், அதற்குறிய தேதியைச் சொல்லாமலும், அதைப் பற்றிக் கவலை இல்லாமலும் இழுத்தடிக்கிறார் என்று ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் குமுறுகிறார்கள்.

பட்டங்கள் கிடைத்தால் தான் வெளிநாடுகளில் வேலை தேடவும், இங்கே தனியார் நிறுவனங்கள் உள்பட வேலைக்குப் போகவும் முடியும் என்று சொல்லும் மாணவர்கள், இனியும் பட்டம் வழங்கக் காலம் தாழ்த்தி, இழுத்தடித்தால் பெரிய அளவில் போராடப் போவதாகக் கூறுகிறார்கள்.

என்ன செய்யப் போகிறார் ஆளுநர்?

- எழில்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.