மாழையைப் போற்ற வேண்டும் என்கிறார் இளங்கோவடிகளார்.

கெடுப்பதுவும், கொடுப்பதுவும் என்ற இரண்டையும் மழையே செய்யும் என்று சுட்டிக் காட்டுகிறார் வள்ளுவர். அனுபவத்தால் இவ்விரண்டையும் மக்கள் அறிவார்கள்.stalin chennaiகடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் பெய்த பருவமழையில் ஆறுகள் பெருக்கெடுத்தன. ஏரி, குளங்கள் எல்லாம் நீர் நிறைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்தது. தெருக்கள், நகரமெல்லாம் வெள்ளம், வெள்ளம்! பல நாள்கள் வெள்ளம் வடிய வழியில்லாமல் விழிபிதுங்கிப் போனார்கள் மக்கள். 2015ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் முன் திட்டமில்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்ததன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் மறக்கவில்லை.

2022, இப்போது, வடகிழக்குப் பருவமழை தொடக்கத்திலேயே பெருங்கனமழையாகக் கொட்டியது.

ஆனால் முன்னிருந்த அவலம், பாதிப்பு இப்போது மக்களுக்கு இல்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தேர்ந்த ஆட்சியில், தெளிவான வழிகாட்டுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் அடையாறு, ஆறு அகலப்படுத்தித் தூர்எடுத்து வெள்ளம் போக வழிகளைச் செய்தனர் அதிகாரிகள்.

மைய நகரங்கள் உள்படப் பரவலாக நீர் தேங்காமல் வடிகால் வழியாகச் செல்ல செம்மையான நீர்வடிகால் பணிகளை முன்கூட்டிச் செய்து முடித்தது தமிழக அரசு இயந்திரம்.

இதன் விளைவால் வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்ட மக்கள், தப்பித்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

எடப்பாடி, ஜெயக்குமார் போன்ற அ.தி.மு.கவினர் தங்களின் 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எந்தப் பணிகளையும் செய்யாமல் பொழுது போக்கிவிட்டு இப்போது, வடிந்த நீரைப் பார்த்து வடியவில்லை என்கிறார்கள், இல்லாத வெள்ளத்தை இருக்கிறது என்று கதறுகிறார்கள். பா.ஜ.க இது குறித்து மூச்சு கூட விடவில்லை. பாவம், வேறு என்னதான் செய்வார்கள் அவர்கள்.

காலம் அறிந்து, தேவை அறிந்து, மக்களுக்கு வேண்டியவைகளை முறை செய்யும் ஆட்சியாளர் இணையில்லாத் தலைவராகின்றார்.

அத்தகையத் தலைவர், நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை, அவரின் இம்மழைக்காலத்திற்கு உரிய செயல்பாடுகள், உறுதி செய்கின்றன, வாழ்த்துவோம்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It