நழுவி விடுகிறது ஒவ்வொன்றும்

‘‘இருள் பிரியும் முன்பே தோட்டத்தில்
முத்துக்கள் பூத்திருப்பதைக் கண்டேன்
பூக்குடலை எடுக்கப் போனவன்
சிறிதே தாமதித்து திரும்புகையில்
புல்லின் நுனியில்
வெறுமை காத்திருந்தது.
இப்படித்தான் நழுவி விடுகிறது ஒவ்வொன்றும்‘‘.

நூல்: நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்: மயூரா ரத்தினசாமி
வெளியீடு: மயூரா பதிப்பகம்
37, தொட்டராயன் கோவில் வீதி,
காட்டூர், கோவை-641009
தொலைபேசி: 9360789001
பக்கங்கள்: 72, விலை: ரூ.40


பெரியார் சிந்தனைச் சிறுகதைகள்

தந்தை பெரியாரின் கருத்துக்களை மக்களுக்கு தம்மால் முடிகின்ற ஒவ்வொரு வழியிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் தொண்டன் நாத்திகம் பி.ராமசாமி அவர்களின் முயற்சியால் விளைந்தது இந்நூல். பெரியார் கருத்துக்களை பரப்பும் முயற்சியாக சிறுகதைகள், நாடகங்கள், உரையாடல்கள், புராண அடிப்படைக் கதைகள் என பல்வேறு வடிவத்தில் நாத்திகம் இதழில் வெளியிடப்பட்ட அனைத்தும் தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
பெரியார் தொண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல்.

நூல்: பெரியார் சிந்தனைச் சிறுகதைகள்
ஆசிரியர்: நாத்திகம் பி.ராமசாமி
வெளியீடு: நாத்திகம் வெளியீடு
97/55, என்.எஸ் கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சென்னை--24, பேசி: 42134024
பக்கங்கள்: 224 விலை: ரூ.90


மாற்றம் நிகழாது

‘‘தொலைவுகளை என் பயணங்கள் துரத்துகின்றன!
துயரங்களை என் முயற்சிகள் துரத்துகின்றன!
என் மூடநம்பிக்கைகளைப் பகுத்தறிவு துரத்துகின்றது!
அறியாமையைக் கற்றல் துரத்துகின்றது!
அடிமைத்தனத்தைப் போராட்டம் துரத்துகின்றது!
சுதந்திரம் சுவாசிக்கையில் தான் உணர்கின்றேன்
எதிர்வினையாற்றாமல் எதுவும் நிகழாது
மாற்றம் நிகழாது.’’

நூல்: பூதங்கள் பலவகைப்படும்.
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்: நா.இராஜா ரகுநாதன்
தொடர்புக்கு: கலை நிலா பதிப்பகம்,
46, ஆசாத் நகர், கருணாநிதி நகர்,


நிழலாடும் உறவின் சுகம்


‘‘தொலைபேசி கைபேசி என
அறிவியல் அற்புதம் ஆயிரம் இருப்பினும்
அஞ்சல் காரர் எடுத்துக் கொடுத்து
அவரசத்தில் உறை கிழித்து
பிரித்துப் படிக்கும் கடிதத்தில்
நிழலாடும் உறவின் சுகம்.’’

நூல்: கடவுளைக் கொன்று விடு
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்: அருணா சுந்தரராசன்.
வெளியீடு: அகரம்
1, நிர்மலா நகர், தஞ்சாவூர்
போன்: 9994386861
பக்கங்கள்: 72, விலை: ரூ.40.
Pin It