‘பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை’ என்ற நாட்டுப்புற பழமொழிக்கேற்ப கேட்பாரின்றி பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை இன்று அம்பலமாகியுள்ளது.

chitra ramakrishnan and anand subramaniamதேசியப் பங்குச் சந்தை ஆணையத்தின்(NSE) முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன், சிலருக்குச் சாதகமாகச் செயல்பட்டு பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி பெருத்த கொள்ளையடித்திருப்பது தொடர்பான குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இக்குற்றச்சாட்டில் இன்னும் பல பார்ப்பனர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனைப்படி தாம் செயல்பட்டதாக சித்ரா இராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். பல இலட்சம் கோடிகள் புரளும் பங்குச் சந்தையின் முக்கியத் தகவல்களை அந்நியர் ஒருவரிடம் சொன்ன குற்றத்திற்காகவும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இடஒதுக்கீட்டால் தகுதி திறமையெல்லாம் போய் விட்டதென்றும், இலஞ்சம் ஊழல் பெருகி விட்டதென்றும் திரும்பத் திரும்பப் பொய் சொல்லும் பார்ப்பனர்கள் அடித்திருக்கும் கொள்ளையைப் பாருங்கள்.

மேலும் தேசியப் பங்குச் சந்தையின் முடிவுகளை ஒரு யோகியின் ஆலோசனைப்படி எடுத்தேன் என்று ஒரு தலைமை நிர்வாக அதிகாரி கூறுவதிலிருந்து அவாளின் தகுதி திறமையைப் பற்றி உலகம் அறியும்.

இந்த சித்ரா இராமகிருஷ்ணன், அவருடைய உறவினர் ஆனந்த் சுப்ரமணியம் என்பவரை முக்கிய அதிகாரியாக நியமித்துக் கொண்டு, தலைமை அதிகாரியான ரவி நாராயணன் என்கிற இன்னொரு பார்ப்பனரோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்துள்ளார்கள்.

ஆனந்த் சுப்ரமணியம் என்பவரின் ஊதியத்தை இரண்டே ஆண்டுகளில் 1.68 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி வரை உயர்த்தியுள்ளார். அவாள் நடத்தும் ராஜ்ஜியம். நம் கண் முன் நடக்கும் ராமராஜ்ஜியம்!

பார்ப்பனர்கள் சிலர் கூடி அடித்தக் கொள்ளையைப் பார்ப்பனர்கள் பலர் சேர்ந்து மூடி மறைத்துக் காப்பாற்ற 2018ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளனர். வரலாறு காணாத ஊழல் செய்திருக்கும் இந்தப் பார்ப்பனக் கும்பலுக்கு, இந்த நடவடிக்கைகளைக் கண்காணித்து தண்டனை வழங்க வேண்டிய செபி(Securities Exchange Board of India) அளித்திருக்கும் தண்டனை, சித்ரா இராமகிருஷ்ணனுக்கு வரவேண்டிய போனஸ் ரூபாய் 4.37 கோடியை நிறுத்தியது.

 “பிராமணர்களுக்குத் தலைமுடியை மழித்தலே கொலைத் தண்டனையாகும். மற்றவருக்கு உயிரை எடுப்பதே கொலைத் தண்டனையாகும்.” (8:379)

“பிராமணன் எல்லா பாவங்களும் செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்தினால் போதும்.” (8:380)

மனுநீதியின் இந்த இரண்டு விதிகளும் எப்படி நவீன முறையில் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதை, இப்போதெல்லாம் மனுநீதி எங்கிருக்கிறது என்று கேட்கும் பார்ப்பனரல்லாதார் உணர வேண்டும். மனுநீதியின் பெயரால் இத்தனையையும் செய்து கொண்டுதான் பார்ப்பனர்கள் சமத்துவம் பேசுவது போல் வேடமிடுகின்றனர் என்பதை நாம் விளங்கிக் வேண்டும்.

2G என்ற ஒரு கற்பனைக் குற்றச்சாட்டை வைத்து, தி.மு.கழகத்தின் அந்நாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா அவர்களையும், கனிமொழி அவர்களையும் கைது செய்து, பொய் மூட்டைகளை ஊடகங்கள் மூலம் அவிழ்த்துவிட்டு பார்ப்பனர்கள் குளிர் காய்ந்ததை, 2G வழக்கின் தீர்ப்பு உலகுக்குக் கொணர்ந்தது.

ஆனால் தேசியப் பங்குச் சந்தையின் இந்த ஊழலை, உலகறியாமல் 4 ஆண்டுகள் மூடி மறைத்து, இன்று முழுக்க நனைந்த பின் முக்காடு போட முடியாமல், நீதிமன்றம் சி.பி.அய்யையும், செபியையும் கேள்வி எழுப்பியவுடன், இமயமலை யோகியின் பெயரால் “இமாலய ஊழல்” செய்திருக்கும் சித்ரா இராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வெளிவந்த ஊழல்களும், கொள்ளைகளும் இவ்வளவுதான். கடலளவு இன்னும் மறைந்திருக்கிறது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே பார்ப்பனியத்தைச் சிதறடிக்கும். இந்த விழிப்புணர்வை இந்தியா முழுதும் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவருடைய கடமையுமாகும்.

- மா.உதயகுமார்

Pin It