தொடர்புடைய படைப்புகள்

seeman tamilisaiதிராவிட இயக்க முகமூடியில் வளர்ந்த சீமான் இன்று ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதைப் போல திராவிட இயக்கத்தைத் தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

திமுகவுக்கு ஓட்டுப் போட்டால் குஷ்டம் வரும் என்று திருவொற்றியூர் பிரச்சாரத்தின்போது அவர் பேசியிருக்கிறார். கருத்தைக் கருத்தால் மோதுவது நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அதை விட்டுவிட்டு இரத்தக் கண்ணீர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வேடத்தில் பேசுவது நாகரீகமான செயல் அன்று.

அதானியின் துறைமுக விரிவாக்கத்தை எதிர்ப்பதற்காக திருவொற்றியூர் தொகுதியில் நிற்பதாகச் சொல்லும் அவருக்கு, அத்துறைமுக விரிவாக்கம் இருப்பது பொன்னேரியில் என்பதுகூடத் தெரியவில்லை.

பாஜகவையும், அதிமுகவையும் எதிர்ப்பதாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சீமான் சசிகலாவையும், இந்துத்துவ சங்கிகளையும் புறக்கடை வழியாகச் சந்திக்கிறார் என்பதற்கு இணையதளத்தில் காணும் கீழ்கண்ட படமே சாட்சி.

சீமானின் வேடம் கலைகிறது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.