அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் “நாங்கள் மதவாதத்திற்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல” என்று பேசியிருக்கிறார்.

ஜவகர்லால் நேரு, “வின்சன்ட் ஸ்மித் ‘இந்துயிசம்’ மற்றும் ‘இந்து மயமாக’ போன்ற வர்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இந்தியக் கலாச்சாரம் என்ற ஆக அகலமான அர்த்தத்தில் அவை பயன்படுத்தலால் அன்றி, அவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவது சரி என்று நான் நினைக்கவில்லை. மேலதிக, குறுகிய, குறிப்பாக மதரீதியான கருத்தோடு அவை தொடர்பு படுத்தப்பட்டு இருந்தால், அது தவறாக வழிநடத்தும்.” என்று அவரின் The Discovery of India நூலில் சொல்லியிருக்கிறார்.

அயோத்தியில் ராமர் கோயில் 2024, ஜனனவரி1ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

அதையடுத்து ஏப்ரல், மே மாதங்களை ஒட்டி நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ், அதன் முகமூடியான பா.ஜ.க வின் சித்தாந்தமே இந்துத்துவா என்ற மதவாதம்தான் என்பதற்கு அயோத்தி ஒரு சான்று.

தமிழ்நாட்டில், ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலை, வர்ணாசிரம, மதவாதப் பாதையை நோக்கிப் பேசி வருவது ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரம்பற்றப் பொய்களைக் கூறுவதும், ஊடகவியலாளர்களைத் தரமற்று, மிரட்டும் தொனியில் பேசுவதும் மதவாதச் சக்தியின் அடையாளமாகத் தோன்றுகிறது.

இந்த நிலையில் மதத்திற்கு நாம் எதிரல்ல, மதவாதத்தை எதிர்ப்போம் என்று நம் முதலமைச்சர் சொல்லியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

2024 ஆம் ஆண்டுத் தேர்தலில், இந்துத்துவ மதவாதச் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும், தோற்கடிப்பார்கள் மக்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It