திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் 8ஆவது பொதுக்குழு, 20.08.2017 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சென்னை, கொளத்தூரில், பேரவையின் துணைத்தலைவர் அ.இல. சிந்தா தலைமையில், பொதுச்செயலாளர் சுபவீ முன்னிலையில் நடைபெற்றது.  மாநிலப் பொறுப்பாளர்களும், அணிகளின் பொறுப்பாளர்களும், 13 மாவட்டங்களைச் சேர்ந்த  தோழர்களும்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

dravidian iyakam 6001) கீழடி அகழ்வாய்வை நிறுத்தி வைத்திருக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, 10.09.2017 காலை 11 மணிக்கு, மதுரையில், தோழர் சுபவீ தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

2) பேரவையின் மூன்றாவது மாநில மாநாட்டை, விரைவில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

3) மாவட்டம்தோறும் ஆர்வமுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, மண்டல வாரியாக அவர்களுக்குத் திராவிட இயக்க வரலாறு, கோட்பாடுகள், அதன் இன்றையத் தேவைகள் குறித்துத்  தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.

4) பேரவையின் புதிய கிளைகளான கரூர், நாமக்கல், மணப்பாறை ஆகியனவற்றில் இணைந்துள்ள தோழர்களை வரவேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தோழர் எட்வின் தமைமை நிலையச் செயலாளராகவும், தோழர் ஜெயம்பெருமாள் தெற்கு மண்டலச் செயலாளராகவும்  நியமிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம், மாநகர், புறநகர் என்று பிரிக்கப்பட்டு, இரண்டு மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களும்,  வேலூர் மாவட்டப் பொறுப்பாளர்களும், மணப்பாறை உள்ளிட்ட புதிய கிளைகளுக்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.  

Pin It