அண்ணாமலை, அண்ணாமலை என்ற ஒருவர், பாரத ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக இருந்து வருகிறார்.

ஐ.பி.எஸ் படித்ததாகச் சொல்லும் இவர் அரசியல் பண்ணத் தெரியாத ஒரு ‘பஃபூன்’ என்றே தோன்றுகிறது.

அண்மையில் சட்ட மன்றத்தில், திராவிட இயக்கங்கள்தான் தமிழ் நாட்டை ஆள முடியும் என்று செங்கோட்டையன் பேசினார்.

 பதறிப் போன அண்ணாமலை, ‘திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை’ என்றார். அடுத்த வார்த்தை ‘நானும் திராவிடன்தான்’ என்றார். திராவிடர்கள்தான் தமிழகத்தை ஆள முடியும் என்று சொல்லிக் கொண்டே, தி.மு.க, அ.தி.மு.கவில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள் என்று முடித்துக் கொள்கிறார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு குழப்பமாக அல்லவா இருக்கிறது.

இந்தியாவின் அலுவல் மொழியாக இந்திதான் வரும் என்று பா.ஜ.க வின் அமித்ஷா சொல்கிறார். இதற்குத் தமிழகம் ஆப்படித்து வைத்திருக்கிறது என்பது வேறுவிசயம்.

ஆனால் அண்ணாமலை என்ன சொல்கிறார்? இந்தித் திணிப்பை பா.ஜ.க ஏற்காதாம். அப்படி இந்தியைத் திணிக்க முயற்சித்தால் தமிழக பா.ஜ.க எதிர்க்குமாம்! யாரை எதிர்க்கும்? சொல்லவில்லை அவர்.

ஆனாலும் விடவில்லை அவர். தமிழ் இந்தியாவின் இணைப்பு மொழியாவதற்கான “குவாலிட்டி” (தரம்) அதற்கு இருந்தாலும், “குவாண்டிட்டி” (பேசுவோர் எண்ணிக்கை) குறைவு என்று அசரீரி வாக்கு அளித்துக் கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்த்தெடுக்கப் போகிறாரோ என்று பார்த்தால், அவர் ரேசன் கடைக்குள் நுழைந்து மோடியின் படத்தை மாட்டிவிட்டுக் கட்சியை வளர்ப்பது மக்களை ‘ஆச்சரியப்பட’ அல்லவா வைக்கிறது.

இப்பொழுது என்ன சொல்கிறார் அண்ணாமலையார்?

தமிழக ஆளுநர் கொடுக்கும் தேனீர் விருந்தைத் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால், கவர்னருக்கு காசு லாபம் -என்கிறார் இந்தக் கணக்குப் பிள்ளை?

ஏன் புறக்கணிப்பு என்பது கூடத் தெரியாத ஞானசூனியமா இவர் என்று நாம் கேட்கவில்லை.

கமலாலயத்திற்கும் பொழுதுபோக வேண்டும் அல்லவா?

Pin It