161730_thumpஓர் அரசு தன் ஆட்சியில் தவறுகள் இழைக்குமானால், மக்களின் குமுறல் அதை வெளிப்படுத்தும். மக்களின் குமுறல்களை சட்டமன்றம் விவாதிக்கும். இரண்டையும் சேர்த்து ஊடகங்கள் நடப்புகளைப் பதிவு செய்யும். ஆனால், தமிழ்நாட்டில் இன்று மக்களின் குமுறல்கள் கேட்பார் அற்றுக் காற்றில் கரைந்து கொண்டிருக்கின்றன.சட்டமன்றத்தில் எந்த விவாதமும் நடப்பதில்லை. முதலமைச்சரை ஆளும் கட்சி மற்றும் தோழமைக் கட்சியின் உறுப்பினர்கள் பாராட்டிப் பேசுவது இயல்புதான். ஆனாலும், பாராட்டுகள் மட்டுமே சட்டமன்ற நடவடிக்கைகளாக மாறிக் கொண்டிருக்கின்ற அவலத்தை இன்று நாம் பார்க்கின்றோம். எந்த ஒரு சட்டமுன்வடிவும், அந்தந்தத் துறை அமைச்சர்களால் முன்மொழியப் படும். பிறகு அது குறித்த விவாதங்கள் நடைபெறும். இறுதியில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தாலும் வாக்கெடுப்பின் மூலம் அவை நிறைவேற்றப்படும். ஆனால், அமைச்சர்களுக்கு வேலையே இல்லாமல், சிறப்பு விதியான 110இன் கீழ் எல்லா அறிவிப்புகளையும் முதலமைச்சரே இப்போது வெளியிடுகின்றார். 110ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்படும் எதன் மீதும் சட்டமன்றம் விவாதம் நடத்த முடியாது. எனவே விவாதமே இல்லாமல் சட்டமன்றம் நடைபெறுகிறது.

மக்களின் அவலங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச எழுந்தால், உடனே கூக்குரல் எழுப்பி அவர்களை அடக்க முயல்கின்றனர். அவைத்தலைவரோ அவர்களை உடனடியாக வெளியேற்றி விடுகின்றார். தினந்தோறும் சட்டமன்றத்தின் போக்கு இதுவாகத்தான் உள்ளது. நான்காம் படை (Fourth Estate) என்று கூறப்படும் ஊடகங்களோ எதிர்க்கட்சிகள் பற்றியே, குறிப்பாகத் தி.மு.க. பற்றியே துருவித் துருவி எழுதிக்கொண்டிருக்கின்றன. எனவே சட்டமன்றங்களிலும் விவாதம் இல்லை, ஊடகங்களிலும் விவாதம் இல்லை. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னர்களின் ஆட்சி தொடர்கிறது.

Dr20Ambedkarஅம்பேத்கரின் கோட்பாடுகளை ஏற்றுச் சமூக நீதியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, பேரணியும், சென்னை மயிலாப்பூரில் பொதுக்கூட்டமும் நடத்தத் திட்டமிட்டது.பேரணியின் பெயர் கூட மக்கள் ஒற்றுமைப் பேரணி என்றே அறிவிக்கப் பட்டிருந்தது. அதற்குத் தமிழகஅரசு தடை விதிக்கவே, வேறு வழியின்றிச் சிறுத்தைகள் நீதி மன்றத்தை நாடினர். நீதிமன்றம் அனுமதி அளித்தது. பொறுக்கமுடியவில்லை அம்மையாரால்.

உடனே  தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்ற அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அம்பேத்கர் விழாவைத் தடுப்பதில் அரசுக்கு அப்படி என்ன ஆர்வம் என்பது விளங்கவில்லை.

அரசு வழக்கறிஞர் சோமயாஜுலு திறந்த நீதிமன்றத்தில், கொடுமையான வாதம் ஒன்றினை முன்வைத்தார். மயிலாப்பூரில் வாழும் மக்களும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கக்கூடிய மக்களும் வேறு வேறு வகையினர் என்பதால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

நம் நாட்டைவிட்டுத் தீண்டாமை இன்னும் வெளியேறவில்லை என்பதும், அந்நிலைக்கு இன்றைய தமிழக அரசே ஆதரவாக உள்ளது என்பதும் அப்போது புலப்பட்டது. நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நீதிபதியின் அனுமதி பெற்று, சேரி மக்களாகிய நாங்கள் மயிலாப்பூருக்குள் கால் வைக்கக் கூடாதென்று, அரசு வழக்கறிஞர் கூறுகின்றார், இந்த மேன்மைமிகு நீதிமன்றத்தின் கருத்தும் அதுதானா என்று கேட்டார். அதன்பிறகு, மாண்பமை நீதிபதிகள் மயிலாப்பூரிலேயே கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர்.

அன்றாடம் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் புகழ்ந்து கொண்டிருக்கும் செ.கு. தமிழரசன் போன்றவர்கள் இதுகுறித் தெல்லாம் வாய் திறப்பதில்லை.

கலைஞரின் ஆட்சியில், அடையாறு பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவிற்கு, தொல்காப்பிய பூங்கா என்று பெயரிடப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு, அந்தப் பெயர் நீக்கப்பட்டு, அடையாறு பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கலைஞரின் பெயரைக் கேட்டால் அம்மையாருக்குக் கடுங்கோபம் வரும் என்பதை நாம் அறிவோம். ஆனால், தொல்காப்பியர் மீது கூட, அ.தி.மு.க. அரசுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. தொல்காப்பியர் என்ன தி.மு.க.வின் மாவட்டச் செயலாளரா? தமிழ்ச் சான்றோர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்களின் பெயர்களே இனிமேல் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாதா?

தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசியம் என்று ஒவ்வொரு மேடையிலும் உரக்க முழக்கமிடும் தலைவர்கள் எவரும் இதுகுறித்தெல்லாம் வாய் திறப்பதே இல்லை...என்ன காரணம்?

அண்மையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த கூட்டுறவுத் தேர்தல்கள் சட்டமீறல்களுக்கும், வன்முறைகளுக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக நடந்து முடிந்துள்ளன. சி.பி.எம். கட்சியாலேயே பொறுக்க முடியாமல் போகிற அளவுக்கு அவை நடந்துள்ளன என்பதால்தான், அக்கட்சியின் உறுப்பினர்கள், சனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் அரசின் நடவடிக்கை களைக் கண்டிப்பதாய் மார்புப் பட்டை (பேட்ஜ்) அணிந்து சட்டமன்றம் வந்தனர்.

கொள்கை அடிப்படையில் நமக்கு எதிரான நிலையில் உள்ளது என்பது மட்டுமல்லாமல், நலத்திட்டங்களிலும், நிர்வாகத்திலும் கூட ஜெயலலிதா அரசு மிகவும் பின்தங்கியே உள்ளது.

மலிவு விலை உணவகம் என்று மார்தட்டிச் சொல்லப்படுகின்றது. ஆனால் அரசின் பணம் வேறு வழியில் வீணாகின்றது. இட்லி விலை ஒரு ரூபாய்தான். ஆனால் அதற்குச் செய்யப்படும் விளம்பரத் தொகையோ பல லட்சங்களைத் தொடுகின்றது.

காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஒரகடம் என்னும் ஓர் ஊருக்கு முதலமைச்சர் யஹலிகாப்டரில் பயணம் செய்கின்றார். மீனம்பாக்கம் வரை தன் மகிழுந்தில் வரும் அவர், அங்கிருந்து 20 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ள ஒரகடத்திற்கு வான் பயணத்தை மேற்கொள்கின்றார். இப்படி அரசுப் பணம் விரயமாகின்றது.

ஆனால், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணைக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றது. ரே­ன் கடைகளில், எட்டு லிட்டருக்குப் பதிலாக, இனிமேல் நான்கு லிட்டர்தான் வழங்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது.

மாணவர்கள் தேர்வுகளில் எழுதிய விடைத்தாள்கள் சில தண்டவாளத்திற்கு அருகில் சிதைந்த நிலையில் கிடக்கின்றன. இன்னும் பல விடைத்தாள்கள் எங்கே போயின என்றே தெரியவில்லை.

ஒரு மருத்துவமனைக்குள் நுழையும் போது செருப்புகளைக் கழற்றிவிட்டு வருமாறு கோரிக்கை வைத்த மருத்துவர் ஒருவர், பொய்யான குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார். அந்த மருத்துவரின் பெயர் கருணாநிதி. ஒரு வேளை அந்தப் பெயரே கூட, இந்த ஆட்சியில் தண்டனைக்கு உரியதாக இருக்கிறதோ என்னவோ?

மின்வெட்டு மேலும் மேலும் மோசமாகிக் கொண்டுள்ளது. கொலைகளும், கொள்ளைகளும் அன்றாடக் காட்சிகள் ஆகிவிட்டன.

தமிழ்நாட்டில் ஓர் அரசு இருக்கிறதா, அது இயங்குகிறதா என்பதே உறுதியாய்த் தெரியவில்லை.

Comments

13 comments

13
sanjay
மாமல்லபுரத்து கோபுரங்களின் மீது அதன் சிற்பத்திறமைகள் குறித்து எந்த அக்கறையும் படாமல் ஏறி விளையாடி கொடிகளை நட்டு அலப்பரை செய்த கூட்டங்கள் ஒருபுறம் தமிழகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது... அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் காணோம்... ஆனால் கூட்டம் நடத்துவதற்கே விடுதலைச் சிறுத்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெறுவதற்கு ஜெ. அரசு முழு அனுமதி அளித்து வருகிறது.
சட்டமன்ற நடவடிக்கைகள் ஒரே திரைப்படத்தை திரும்பத் திரும்ப பார்ப்பது போல் உள்ளது. தொடர்ச்சியான பிரச்சனைகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.
நாம் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது...
செயல்படாமல் உள்ள அரசாங்கமாக ஜெ அரசாங்கம் உள்ளது என்று நீங்கள் சொல்வதை அதிமுக காரர்களும் கனத்த இதயத்தோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்... அதுதான் உண்மை...
Periyasamy
திராவிட அரசியல் இல்லாத பிற தென் மாநிலங்களில், குறிப்பாக கர்நாடகத்திலும் கேரளத்திலும், இன உணர்வும் மாநில உணர்வும் கொடி கட்டி பறக்கின்றன. மலையாளிகளின் இன உணர்வையும் மாநில வெறியையும் பற்றி சொல்லவே தேவையில்லை. கர்நாடகத்தில் ஊருக்கு ஊர் கன்னடக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு கால திராவிட இயக்க அரசியல் மற்றும் திராவிட கட்சிகளின் ஆட்சி ஆகியவற்றால் தமிழகத்தில் தமிழ் உணர்வு வளரவில்லை. மாறாக சாதி வெறியும் (குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம்) கலவரங்களும் தான் வளர்ந்துள்ளன. இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு தமிழர் என்னும் வார்த்தை வேடிக்கையான ஒரு வார்த்தையாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு மாநில உணர்வும் இன உணர்வும் அற்ற கழிசடை உயிர்களாக தமிழகத்து மக்கள் திராவிட அரசியலால் மாறிப்போய் விட்டார்கள். இந்த திராவிட அரசியல்வாதிகளால் ”பார்ப்பான், பார்ப்பான்” என தூற்றப்பட்ட தமிழக பார்ப்பனர்கள் அழிந்தா போய்விட்டார்கள்? உலகளவில் நோபெல் பரிசு வாங்கும் அளவுக்கு அவர்கள் உயர்ந்து இருக்கிறார்கள். அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருக்கும் பல கணிப்பொறி நிறுவனங்கள் தமிழக பார்ப்பனர்களால் நடத்தப்படுபவை. இந்த நிறுவனங்களின் மூலம் இவர்கள் மாளாத பொருள் குவித்து செல்வாக்குடன் மிக உன்னதமான இடத்தில் உள்ளார்கள். சென்னைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பறக்கும் விமானங்களில் பார்ப்பனர்கள் தான் அதிகம் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மாநில அரசுகளை ஒப்பிடும் போது மத்திய அரசு சர்வ வல்லமையும் அதிகாரங்களையும் கொண்டது. மத்திய அரசு நிறுவனங்களில், அதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரக்கண்ணிகளில், நிறைய தமிழக பார்ப்பனர்கள் வீற்றிருக்கிறார்கள். ஆகையால் தான் இவர்கள் நினைப்பது இந்த நாட்டில் நடக்கிறது. தமிழகத்திலே கூட தனியார் நிறுவனங்களில் குறிப்பாக பண்ணாட்டு நிறுவனங்களில், முக்கியமான அதிகாரம் மிகுந்த பொறுப்புகளில், பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள். தமிழ் நாடு வெளியுலகில் இருப்பவர்களால் அடையாளம் காணப்படும் போது புகழ் பெற்ற தமிழக பார்ப்பனர்களை கொண்டே அடையாளம் காணப்படுகிறது. திராவிடம் என்னும் போலி அரசியலால் தமிழக அரசியல் மற்றும் சமுதாய வாழ்விலிருந்து (மட்டும்) பார்ப்பனர்கள் ஓரம் கட்டப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் தமிழகத்தில் அறிவுஜீவி வர்க்கம் என்றால் அவர்கள் தான். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமானால் கூட பார்ப்பன அறிஞர்களை தான் பெரும்பாலும் அணுகுகிறார்கள். திராவிட இயக்கத்தால் தமிழகத்தின் அறிவுஜீவி தளத்தில் இருந்து பார்ப்பனர்களை அகற்றவே முடியவில்லை. திராவிட இயக்கத்தால் தமிழர்கள் வளர்ந்தார்களா அல்லது பார்ப்பனர்கள் தேய்ந்தார்களா என்பது மிகப்பெரிய விவாதத்துக்குரிய விடயம். இப்போது தமிழகத்தில் இருக்கும் அறிவுஜீவிகள் பெரும்பாலும் பார்ப்பன அல்லது கம்யூனிச பின்புலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சில அறிவுஜீவிகள் மலையாள பின்புலம் கொண்டவர்கள். தமிழ் பின்புலம் கொண்ட அறிவுஜீவிகள் தமிழ் நாட்டிலேயே மிகவும் குறைவு. இதற்கு காரணம் தமிழகம் கல்வித்துறையில் தேங்கிய குட்டையாக இருப்பது தான். இங்கு இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் திராவிட அரசியல்வாதிகளின் எடுபிடிகளும் கைத்தடிகளும் தான் நிறைந்திருக்கிறார்கள். அதனால் தான் இங்கு கல்வி சூழ்நிலை (பள்ளிக்கல்வி ஆனாலும் உயர்கல்வி ஆனாலும்) தரமற்றதாகவே இருக்கிறது. இந்த தரமற்ற கல்வி சூழ்நிலையின் காரணமாக இந்திய அளவிலும் உலகளவிலும் போட்டி போடக்கூடிய மாணவர்களும் அறிஞர்களும் தமிழகத்தில் உருவாகவே இல்லை. தேசிய அளவிலான IIT, IIM, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்ப் பின்புலம் கொண்ட மாணவர்கள் மிகவும் சொற்பம். IAS அதிகாரி போன்ற பதவிகளிலும் இதே நிலை தான். மத்திய அரசு நிறுவனங்களில் (அவை தமிழகத்தில் இருந்தாலும்) இதே லட்சணம் தான். இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்களாம்!. மருத்துவ மற்றும் இஞ்சினியரிங் பட்டதாரிகள் வேண்டுமானால் வதவதவென்று கறிக்கோழிகளை போல் உருவாக்கப்பட்டு வெளியே வருகிறார்கள். இந்த இட ஒதுக்கீட்டு அரசியல் காரணமாக துறை சார்ந்த நுண்ணறிவு, அந்த துறையில் வேலை செய்ய தேவைப்படும் தகுதி ஆகியன பின் தள்ளப்பட்டு ””என் சாதியினர் இத்தனை சதவீதம் இருக்கிறார்கள். அதனால் இத்தனை சதவீதம் ஒதுக்கீடு செய்”” என்று வெட்கமே இல்லாமல் கேட்கும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது. உலக அளவில் பேர் சொல்லும்படியான ஒரு அறிஞர் கூட இந்த இடஒதுக்கீட்டு அரசியலால் உருவாகவில்லை. இன்றைய உலகம் அறிவு சார்ந்த சமூகமாக மாறிவிட்டது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் மேற்கொண்ட கண்டுபிடிப்புகளை விட பல மடங்கு அதிக கண்டுபிடிப்புகளை கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் மனித இனம் செய்துள்ளது. இன்றைய உலகில் அறிவு சார்ந்த துறைகளுக்கு பங்களிப்பு செய்யும் சமூகங்கள் மட்டும் புகழ் பெற முடியும். பிழைத்திருக்கவும் தழைக்கவும் முடியும். உலக அளவில் யூதர்கள் இத்தகைய மேம்பட்ட சமூகம் ஆவார்கள். இந்திய அளவில் அநாதி காலம் தொட்டு இன்றைக்கு வரை பார்ப்பனர்கள் தான் அறிவு சார்ந்த துறைகளுக்கு பங்களிப்பு செய்து வருகிறார்கள் (அதுவும் மற்ற சாதிகளை முடிந்த வரை ஓரம் கட்டிவிட்டு!). ஓரளவுக்கு இப்போது உயர் சாதி வட இந்தியர்களும் மலையாளிகளும் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள்! தமிழகத்தின் மாநில அரசு உயர் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை பார்த்தாலே லட்சணம் தெரிந்துவிடும். இட ஒதுக்கீட்டின் மூலமோ அல்லது லஞ்ச லாவன்யத்தின் மூலமோ பதவிக்கு வருவது. பின்னர் கணக்கு வழக்கில்லாமல் ஊழலிலும் அதிகார துஷ்பிரயோகத்திலும் திளைப்பது. தான் சார்ந்த அறிவுத்துறைக்கு பங்களிப்பு செய்யவேண்டும் என முயற்சி செய்பவர்கள் வெகு சிலர் தான்.
திராவிட இயக்கத்தில் எல்லாம் பாமரத்தனம் (மேடை நாடகத்துக்கும் சினிமாவுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசம் தெரியாமல் கதை வசனம் எழுதியது மட்டுமல்லாமல் இன்றளவும் அதை நினைத்து புளகாங்கிதம் வேறு). வீதிக்கு நான்கு பிராந்திக்கடை. கூட்டத்துக்கு ஆள்சேர்க்க குவார்ட்டரும் பிரியாணியும். அனைத்தும் இலவச மயம். ஈ.வே. ராமசாமி தொடங்கிய திராவிட இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு அதன் பின்னால் போன தமிழ் மக்கள் மிகவும் மோசம் போயிருக்கிறார்கள். காவிரி பிரச்சினை, ஒகெனக்கல் எல்லை தகராறு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர்கள் நாள் தோறும் தாக்கப்பட்டு சொத்துக்களுக்கும் உயிருக்கும் சேதம் உண்டாக்கப்படுவது, ஈழத்தமிழரின் பேரழிவு ஆகிய எல்லா பிரச்சினைகளும் இந்த திராவிட இயக்கத்தினரின் கொடுப்பினை. சுற்றியுள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களை எட்டி எட்டி உதைப்பதற்கும் ஏளனப்படுத்துவதற்கும் இந்த திராவிட இயக்கத்தினரின் அறுபது ஆண்டு கால அரசியலே காரணம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பார்ப்பனர்கள் செய்த தீமைகளை விட அதிக தீமைகளை இந்த திராவிடம் அறுபது ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்களுக்கு செய்திருக்கிறது.
இலங்கை அரசின் அரசிதழ் (Gazette) வழங்கும் தகவலின் படி 2008-ம் ஆண்டில் வன்னி பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை நான்கு லட்சத்து இருபத்தொன்பதாயிரத்து ஐம்பத்தொன்பது. 2009-ல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து முன்னூற்றி என்பது மட்டுமே. ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரம் தமிழர்கள் வெறும் நான்கு மாதம் பதினெட்டு நாட்களில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரம் மக்களில் ஒரு லட்சம் பேர் சாதாரண பொது மக்கள். இத்தனை அநியாயம் நடந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் எழுச்சி இல்லை. பல ஆயிரம் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக மாண்டு கிடந்த போதிலும் தமிழ் நாட்டு மக்கள் தங்கள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தான் ஓட்டு போட்டார்கள். அந்த நேரத்தில் திராவிடம் தில்லியில் தன் குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு பேரம் பேசிக்கொண்டு இருந்தது. இப்போது இத்தனை லட்சம் பேர் செத்தது கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்பட்டால் தான் அந்த மக்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது அரசியல் உரிமையை பெற்று கொடுக்க வழி ஏற்படும். ஆனால் இங்கே அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. டெசோ மாநாடு மாதிரியான பித்தலாட்டம் தான் நடந்து வருகிறது.
தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாநிலம். இந்த மாநிலத்தில் பாயக்கூடிய பெரும்பாலான ஆறுகளின் தோற்றுவாய் சுற்றியுள்ள மாநிலங்களில் அமைந்து இருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்துக்கு வரவேண்டிய பல பகுதிகள் திராவிட கட்சிகளின் பாராமுகம் காரணமாக கைவிட்டு போனதால் தான் இந்த நிலை. இதை சாக்காக வைத்து அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செய்ய முயற்சிக்கின்றன. சுற்றியுள்ள மாநிலங்களின் அடாவடித்தனத்தால் தமிழகம் நீர் முற்றுகைக்குள் சிக்கி தவிக்கிறது. அண்டை மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் அவ்வப்போது தாக்கவும் படுகிறார்கள். இது இப்படி இருக்கையில் தமிழகத்தில் இருக்கும் குறைந்தபட்ச நீராதாரங்கள் எந்த லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன என்பது இன்னொரு கேள்வி. கர்நாடகம் நீர் மிகை மாநிலம் என்றாலும் அங்கிருக்கும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் ஆகியன அம்மாநில பொதுப்பணித்துறையால் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இங்கே எல்லாம் ஊழல் மயம். தாமிரபரணி ஆறு தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே ஓடக்கூடிய ஆறு. இன்று அதன் கதியை பார்ப்பவர்கள் ரத்தக்கண்ணீர் வடிப்பார்கள். இருக்கக்கூடிய நீர்நிலைகளில் சாயப்பட்டறை உள்ளிட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் குற்றவுணர்வே இல்லாமல் கலக்கப்பட்டு விளைநிலங்கள் மலடாக்கப்படுகின்றன. திராவிட அரசியல்வாதிகளின் புண்ணியத்தாலும் அரசு இயந்திரத்தின் அலட்சியத்தாலும் நீர்நிலைகள் தூர்க்கப்பட்டு ரியல் எஸ்டேட்கள் முளைக்கின்றன. கேரளாவிலும் ஓரளவுக்கு கர்நாடகத்திலும் ஆற்று மணலை அள்ளுவதற்கு தடை உண்டு. ஆனால் தமிழ்நாட்டின் ஆறுகளில் இருந்து கடுமையான முறையில் சுரண்டப்படும் மணல் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இங்கே இருக்கும் கல், மண் எல்லாவற்றுக்கும் இதே கதி தான். இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பிறகான தமிழகத்தின் நிலையையும் தமிழர்களின் கதியையும் நினைத்தால் குலை நடுக்கம் தான் ஏற்படும்.
செம்மொழி தமிழ் மாநாடு என்னும் கூத்தின் போது நடந்த அராஜகத்தையும் மோசடியையும் கண்டு வெம்பிய ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் கரஷிமா அவர்கள் வெளிப்படையாகவே “Tamil Nadu is suffering from intellectual vacuum” என சொன்னார். அகில இந்தியாவிலேயே, உலக அளவில் மதிக்கப்படும் படித்தவர்களையும் அறிவுஜீவிகளையும் அதிகம் கொண்ட மாநிலங்கள் மேற்கு வங்காளமும் கேரளாவும். வறுமையும் பிற்போக்குத்தனமும் மலிந்த இந்தி பேசும் மக்களும் அறிவுஜீவிகளை அதிகம் கொண்டிருப்பதில் பின் தங்கியவர்கள் அல்லர். தத்தம் மாநிலங்களின் மீதும் மக்களின் மீதும் பற்றும் பாசமும் வைத்துள்ள இந்த புத்திஜீவிகள் வெளியிடும் கருத்து உலகளவில் எடுபடுவதில் வியப்பில்லை. இந்த முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். இந்த விவகாரம் வெடித்த போது இந்திய மற்றும் சர்வதேசிய ஊடகங்களில் கேரளத்துக்கு ஆதரவான செய்திகளும் விமர்சனங்களுமே வெளிவந்தன. சென்னையில் இருந்து வெளியாகும் “த ஹிண்டு” மற்றும் “டைம்ஸ் ஆஃப் இண்டியா” ஆகிய நாளேடுகளில் கூட இதே நிலைமை தான். தமிழகத்தின் பக்கம் நியாயமும் தர்மமும் இருந்தாலும் அதன் தலைநகரத்தில் செயல்படும் ஆங்கில ஊடகங்களே அவற்றை கண்டு கொள்ளாததற்கு என்ன காரணம்?. அது மிக எளிமையானது. சென்னையில் செயல்படும் ஆங்கில ஊடகங்களில் கூட மலையாளிகள் தான் (பார்ப்பனர்களுக்கு அப்புறம்) செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஐம்பது ஆண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்ல. சென்னையில் “ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்” என்னும் இதழியல் கல்லூரி சசிகுமார் என்னும் கேரளத்தவரால் தொடங்கப்பட்டு “த ஹிண்டு” வகையாறாக்களால் பராமரிக்கபடுகிறது. சர்வதேச தரம் வாய்ந்த இந்த கல்லூரியில் மலையாளிகளும் பார்ப்பனர்களுமே படிக்கிறார்கள். (தமிழர்கள் ஏன் இந்த கல்லூரியில் படிக்கவில்லை என கேட்காதீர்கள், அது இன்னொரு திராவிட இயக்க சாதனை!). இந்த கல்லூரியில் படித்து வெளிவருபவர்கள் உள்ளூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை பணிக்கு சேர்கிறார்கள். திராவிட இயக்கத்தினரின் இடஒதுக்கீட்டு அரசியல் தேசிய மற்றும் சர்வதேசிய அரங்குகள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்காகவும் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவும் வாதாடவும் தகுந்த புத்திஜீவிகளை உருவாக்கவேயில்லை. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பற்றி ஜப்பானிய மொழி அல்லது சீன மொழி பத்திரிக்கைகளில் கூட கட்டுரை எழுதி ஆதரவு தேட கேரளத்தில் ஆட்கள் உண்டு. இங்கே தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள்?.
தமிழர்கள் எப்போதுமே “Labour Class People” ஆகவே இருகிறார்கள் (கூலிக்கார பசங்க!). அந்தக்காலத்தில் இங்கிருந்து இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கூலி வேலை செய்ய அடிமைகளாக போனார்கள். இப்போது தகவல் தொழில்நுட்ப துறை கூலிகளாக உள்ளார்கள். நிறைய பேர் படித்துள்ளார்கள். எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். பலர் கார் வைத்திருக்கிறார்கள். சிலர் நேர்த்தியான வீடுகளை கட்டியுள்ளார்கள். அவ்வளவு தான். மும்பை தாராவி சேரியில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். மலேசியாவில் கோலாலம்பூர் விமானநிலையத்தில் பெரும்பாலான கக்கூசுகளை நடத்தி பராமரிப்பவர்கள் தமிழர்கள். இலங்கையில் தோட்ட வேலை செய்வது படிப்பறிவு இல்லாத மொடாக்குடி தமிழர்கள். தில்லியில் வீட்டு வேலை செய்வது தமிழ்ப்பெண்கள். எல்லாம் “Unskilled Labour”. மலையாளிகள் என்ன தான் வறுமையான பின்னணியில் இருந்து வந்தாலும் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பாவது தேறி தட்டச்சு போன்ற எதையாவது கற்று வைத்திருப்பார்கள் (skilled labour). கேரளத்தில் ரயில்களிலும் மற்ற பொது இடங்களிலும் பிச்சை எடுப்பவர்கள், எஸ்டேட்களில் கூலி வேலை செய்பவர்கள், வீடு வீடாக போய் கக்கூசு கழுகுபவர்கள், அங்கு பொது இடங்களில் மலஜலம் கழிப்பவர்கள் யாவரும் தமிழர்களே.
அதிகாரத்திலோ அதிகாரத்துக்கு நெருக்கமாகவோ தமிழர்கள் எப்போதும் இருந்ததில்லை. இப்போதும் அப்படியே. அறிவு சார்ந்த துறைகளுக்கு பங்களிப்பு செய்திலும் இப்போது மிகவும் பின் தங்கிய சமூகமாகவே தமிழர்கள் இருக்கிறார்கள். “திராவிடம்” , “திராவிடர்”, “சமூக நீதி”, “இட ஒதுக்கீடு”, “பார்ப்பனர் சூழ்ச்சி”, “ஆரியர் ஆதிக்கம்”” ஆகிய வார்த்தை ஜாலங்களை வைத்து கடந்த அறுபது ஆண்டு காலமாக தமிழ் பேசும் மக்களை காட்டியும் கூட்டியும் கொடுத்து அவர்களின் வாழ்வு, வளம் ஆகியவற்றை ஒரு கும்பல் சூறையாடி வருகிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழ் மக்களின் தலையில் இந்த கும்பல் மிளகாய் அரைக்குமோ தெரியவில்லை.
Natarajan
பெரியசாமி அவர்கள் சுபவீயின் கட்டுரைக்கு பதில் கூறாமால் பார்ப்பனர் மலையாளீகள் பெருமை பற்றி எழுதி உள்ளார். கொந்தளித்து எழுதி உள்ளார். வாந்திப் படிப்பில் திறமை காட்டுவது பார்ப்பனர்களே. இப்போதைய வாந்திப் படிப்பில் பார்ப்பனர்கள் எத்தனை நோபல் பரிசு வாங்கி குவித்து விட்டார்கள்.? இதுவரை பத்தைக் கூட தாண்டவில்லை. இவர் கூறும் அறிவு ஜீவிகள் ஆண்டு தோறும் நோபல் பரிசுகளை வாங்கி குவித்திருக்க வேண்டாமா? அடுத்தது அமெரிக்க நாட்டில் இவர்கள் இல்லை என்றால் நாடு ஸ்தம்பித்து விடுவது போல எழுதி உள்ளார்கள். பல பத்தாண்டுகளுக்கு முன் குமாஸ்தாக்களாக அடிமை வேலை செய்தனர், அதுவும் வேறு யாரையும் கற்க விடவில்லை. மலையாளத்தில் " மூக்கில்லாத ராஜ்யத்தில் முறி மூக்கன் ராஜா" என்பார்கள். முறி மூக்கனாக இருந்து கொண்டு அறிவு ஜீவிகள் போன்று தோற்றமளித்தனர்.இப்பொழுது பெரும்பாலான பார்ப்பனர்கள் அமெரிக்க நாட்டில் டெச்னிசல் சோலிஎச் ஆக பணியாற்றுகின்றனர். இவர்கள் இல்லை என்றால் மாற்றாக சீனர்கள் உள்ளனர். அவர்கள் ஆங்கிலம் கற்று வருகின்றனர். ஆங்கிலத் திறன் இந்தியர்களை விட சிறப்பாக கற்கும் தருணத்தில் இந்த பார்ப்பனர்களையும் அவர்கள் விழுங்கி விடுவர். இந்தியாவிலேயே தமிழ் நாடு தான் ரொம்ப பின் தங்கி உள்ளது போல எழுதி உள்ளார். தனது உள்ளக் குமுறலை கொட்டியுள்ளார். கல்வி என்பது யாருடைய சொத்தும் இல்லை.சம வாய்ப்பு அளித்தால் எல்லோரும் திறமையை காண்பிக்க இயலும். ஒரு தமிழ்நாட்டு மாணவி தான் சி எ தேர்வில் இந்தியாவில் முதன்மை. இது போன்று பல்லாயிரக் கணக்கானவர்கள் உள்ளனர். மதிப்பெண் மட்டுமே திறன் அல்ல. எடுத்துக் காட்டாக -- டெ௯டிலெ டெச்னொலொக்ய் படிக்கும் மாணவர்களிடையே நடந்த ஒரு மதிப்பீடு. ஒரு இயந்திரம் பழுதடைந்தது. 90/95 வாங்கிய மாணவர்கள் செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்தனர். 55% வாங்கிய மாணவன் ஆசிரியர் மற்று மாணவர்கள் வியக்கும்படி அதனை பிரித்து பின்பு கோர்த்து எல்லோருக்கும் வகுப்பு எடுத்தான். ஏட்டுச் சுரைக் காய்கள் முழித்துக் கொண்டு நின்றன. அமெரிக்கர்கள் வேலைக்கு மதிப் பெண்களை பார்ப்பதில்லை. உனக்கு இந்த வேலை செய்யும் திறன் உள்ளதா, உள்ளே வா இல்லையேல் கல்தா. அமெரிக்க சென்ற பார்ப்பனர்கள் எல்லாம் இந்தியா திரும்பும் போது பெட்டி நிறைய நோபல் பரிசோடு வருகின்றனர். இதுவரையில் 9 இந்தியர்கள் மட்டுமே நோபல் பரிசு பெற்றுள்ளனர். யூதர்களுடன் பார்ப்பனர்களை ஒப்பிட்டு பார்க்க ஒரு நப்பாசை. ஜெர்மனியின் ஆரியப் பற்று தேவை இல்லையா? யூதர்கள் முன் யாருமே நிற்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் 40% நோபல் பரிசை யூதர்களே பெறுகின்றனர். இன்னும் விரிவாக்கலாம். நிறுத்திக் கொள்கிறேன்.
Periyasamy
நடராஜன்!

"அமெரிக்க நாட்டில் இவர்கள் இல்லை என்றால் நாடு ஸ்தம்பித்து விடுவது போல எழுதி உள்ளார்கள்"

இந்த மாதிரி எங்கே நான் எழுதினேன். எனக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று சும்மா எதையாவது பிதற்ற கூடாது.

வாந்திப்படிப்பில் திறமை காட்டுவது தமிழக மாணவ மாணவிகள் தான். தமிழக பள்ளி மற்றும் கல்லூரி பாட திட்டங்கள் அப்படி. பார்ப்பனர்கள் பெரும்பாலும் சி.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் தான் படிக்கிறார்கள். அந்தத்திட்டத்தில் வாந்திப்படிப்புக்கு வழி இல்லை. விவரம் தெரிந்தவர்களுக்கு இது தெரியும். சும்மா எதையாவது பிதற்றி உங்கள் குறைஅறிவை வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டாம்.
Natarajan
அய்யா பெரியசாமி அவர்களே, " ஸ்தம்பித்துவிடும்" என்று தாங்கள் கூறவில்லை. ஆனால் நான் பலர் கூறக் கேட்டுள்ளேன், ஆதலால் அதனை எழுதினேன். அப்படி நான் எழுதினது பிடிக்கவில்லை என்றால் " பிதற்றும்" இந்த சின்னசாமியை மன்னித்து விடுங்கள். வாந்திப் படிப்பு தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல இந்தியா முழுவதும் பரவலாக உள்ளது. சி பி எஸ் இ படிப்பிலும் இந்த நிலை உள்ளது. ஆனால் சிறிது குறைவாக இருக்கலாம். புள்ளி விவரங்கள் கைவசமில்லை. பொதுவாக எந்த பாடத் திட்டமாக இருந்தாலும் மனப் பாடம் செய்து தான் நம் இந்திய மாணவர்கள் கற்கிறார்கள். பிசா என்னும் உலக கல்வி அமைப்பு நடத்திய தேர்வில் நம் இந்திய மாணவர்கள் 73 ஆவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. அமெரிக்க மாணவர்களே 10 ஆவது இடத்தைத் தான் பிடித்தார்கள்.
(Project for International Student Assessment -PISA)
எழுத்தாளர் ஜோ. தமிழ்ச் செல்வன்
கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என எல்லோரும் நடிக்கிறார்கள். இதில் ஜெயலலிதா நடிப்பு மட்டும் நல்லாயில்லை என சுப. வீரபாண்டியன் புலம்ப வேண்டியத் தேவையில்லை. ஏனெனில் அவரும் ஒரு நடிகரை ஆதரிக்கிறார். இவர்களில் யார் பெரிய நடிகர் என்றால் சுப.வீரபாண்டியனைப் பொறுத்தளவில் ஜெயலலிதா பெரிய நடிகை. ஜெயலலிதாவுக்கு கருணாநிதி நடிப்பதைவிட மேலாக நடிக்கத் தெரியவில்லை என்பதுதான் இக்கட்டுரை மூலம் நான் அறிகிறேன்.
Nallayen
I have a strong feeling whether he accepts the concept called INDIA, which is known for its Unity in Diversity. There are close to 12 percent of other language speaking population also live in TN. If any body has read the history of Dravidian movement, it never crossed beyond TN region, except for Vaikom movement by Periyar. Every state has got its is advantages and disadvantages. Kerala, industrially backward. What happened to all its educative masses. THey are all employed as salaried out of India. Also they migrated to Gulf countries. TN has a mix of everything. WE have entrepreneurs, THe same silicon valley.
Glimpse of Industries: Over 11.2 per cent of the S&P CNX 500 conglomerates have corporate offices in Tamil Nadu. Many heavy engineering and manufacturing companies are located in and around the suburbs of Chennai. Because of the condusive culture we have (fruit of Dravidian movement). Electronics manufacturing is a growing industry in Tamil Nadu, with many telecommunications giants like Nokia, Flextronics, Motorola, Sony-Ericsson, Foxconn, Samsung, Cisco, Moser Baer and Dell having chosen Chennai as their south Asian manufacturing hub.

Infosys campus at Mahindra World City, near Chennai.
Tamil Nadu is the second largest software exporter by value in India, second only to Karnataka. Software exports from Tamil Nadu grew from 76 billion ($1.6 billion) in 2003–04 to 207 billion {$5 billion} by 2006–07 according to NASSCOM[104] and to 366 billion in 2008–09 which shows 29 per cent growth in software exports according to STPI. Major national and global IT Companies such as Syntel, Infosys, Wipro, HCL, Tata Consultancy Services, Mahindra Satyam, Verizon, Hewlett-Packard,Amazon.com, Paypal, IBM, Accenture, Ramco Systems, Computer Sciences Corporation, Cognizant Technology solutions, Tech Mahindra, Polaris, Aricent, MphasiS, MindTree, BBM info 24/7 Customers, and many others have offices in Tamil Nadu.

Who knows Mr Perityasamy's descendants might also be enjoying the fruits of such growth in the state. Its quiet natural that the ladder is always left behind after we reach the top.

The reason why TN is ignored in many places while it comes to cauvery or Mullai periyar is nothing but the double standards by the national parties. Any our confidence on the national interest. Why not a single word against them. Now the natinoal parties know how to armtwist
Would like to ask what was Mr Periyasamy doing while the Mullai periyar issue was handled lopsided by the media.

What is your say on the recent communal ryots instigated by a section of politician. If you endorse their views then we know as who you are.

Keep exposing
Natarajan
I endorse the views expressed by Thiru.Nallayen. Tamilian are known for their hard work. They are also very accomodative. They never discriminate other state people. This kind of accommodation, one can't see in any other state. Britishers during their regime took only Tamilians to South Africa Malaya, Maldives etc to develop the plantation crops. Sugarcane in other countries were developed with Tamilnadu farmers only. They were hard working and sincere. People belittle this kind of efforts made by Tamilians in 18th and 19th centuries. The farmers were experts in rice growing. They taught other state farmers how to raise paddy. Highest yield in sugarcane is held by a Tamilnadu farmer. Such records are overlooked. Those farmers were denied education till mid 20th century. Efforts of Dravidian Movement in the form of Justice party since 1912, Kamaraj, Anna and Karunanidhi helped Tamilians to acquire education. In 1900 only 1% of "Tamilians" had education. In 1947 it was 16% due to the efforts of Dravidian movement. In 2013 it is touching 90%. In 1937/38 and 1952-54 then PM/CM Rajaji closed nearly 6000 schools thus denying education to the masses. Rajaji was forced to resign CM post by Periyar. Kamaraj became CM in 1954. Periyar forced Kamaraj to become CM. Kamarajar not only reopened the closed schools but also added another 6000 schools. He was ably assisted by Thiru.N.D. Sundaravadivelu.

Karunanidhi made mistakes during his tenure 2006-2011 by opening new industries even though the power position was grim. However he made efforts to generate more power which will yield results in the coming years. He should not have opened so many industries and the electricity thus saved should have been used for domestic purpose. However the new industries provided employment to lakhs of Tamilians, Keralites AP, karnataka and northern states also. In construction activity we can see lot of Biharis,Assamese, Chattisgarh,Jharkand etc. People from other states flock to Tamilnadu in search of employment.Those Biharis are very happy to work here as there is no caste discrimination here. They enjoy working here as labourers even with low wages.

Many Tamilians who have come up in life used to raise the question " What the Dravidian movement has done to us? " 'A lot ' is the fitting answer.
Periyasamy
The so called "dravidian movement" has done more harm than good. Tamil Nadu and Bihar are the only two states in India where lumpen culture prevails. Due to mindless industrialization, TamilNadu suffers from extreme pollution and water scarcity. Agriculture is dwindling. Tamil Nadu has a bleak future. The education standard in this state is poor though many engineering colleges are there. Being good in manual labour will not make one ethnic group great or superior. In that sense, africans or negroes must be superior to white people or jews. Due to dravidian politics, tamilians have become stagnated and tend to think that they are world by themselves. Tamilians fail to understand that they are just part of a third world country. Inflated regional pride and superority complex inculcated by the dravidian outfits have caused enormous damage to tamilians. Dravidian parties are the most corrupt parties in the whole country. The tragedy of eelam tamils is some thing which a sound minded tamilian will feel difficult to digest.
Natarajan
ஒட்டுண்ணியாக வாழ்வதை விட, உழைத்து அரைவயிற்று கஞ்சி குடித்து மானமுடன் வாழ்வது சிறப்பு.
Arasan
Some on this site have disclosed their facade, which reveals that they belong to brahminical hegemony and network, but considering them as human beings, at least we have the equality sense and respect for others, please consider others views on humanity or fraternal or sororal basis. A friend has strongly accused Tamilnadu as a lumen state, but to his contentment, I would like to quote that Tamilnadu is a luminous state which is primarily due to the Dravidian movement. The friend has to travel to remote areas in the states like Orissa, Andhra Pradesh, Karnataka, Chattishgarh, Jharkhand, MP, UP, Gujarat, Rajasthan, Bihar, West Bengal and north eastern states (but please don’t ask for per diem) to observe the plight of the rural and tribal people, they live in abject and dismal states. These people struggle to access the resources and services of the State. Friend, please don’t take this message as a personal attack.
Periyasamy
காமராஜ் இருந்த வரைக்கும் தமிழக அரசியல் மீதும் தமிழக அரசியல்வாதிகள் மீதும் மற்ற மாநிலத்தவர்க்கு மரியாதை இருந்தது. அதற்கப்புறம் எல்லாம் கேவலம் ஆகிவிட்டது. இப்போதைய திராவிட அரசியல்வியாதிகளுக்கு தமிழகத்தின் எல்லைக்கு அப்பால் ஒரு மரியாதையும் இல்லை. அதுவும் கருநாநிதி போன்றோரின் பெயரை சொன்னால் தில்லியிலும் படித்தவர்கள் அதிகம் வாழும் கேரளத்திலும் காறித்துப்பாத குறை தான். இப்போது தமிழகம் வட மாநிலங்களை விடவும் பின்னடைந்து வருகிறது. விவசாயம் அதல பாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை மிகவும் அதிகரித்து வருகிறது. சுற்றியுள்ள மாநிலங்களிடம் கையேந்தினால் கூட தண்ணிரும் அரிசியும் கிடைக்காத நிலை மிக வேகமாக உருவாகிவருகிறது. மின்சார நிலையை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பொருளாதார நிலையில் மிகவும் பின்னடைந்த நிலையில் தமிழகம் தவிக்கிறது. இவற்றில் இருந்து தப்பிப்பதற்கு படிப்பின் மூலம் எங்கேயாவது ஒரு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளலாம் என்று பார்த்தால் கல்வித்தரம் மட்டம். தமிழகத்தை சேர்ந்த ஒரு சில மாணவர்கள் தான் தத்திதத்தி வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள முடிகிறது. உயர்நிலைக்கு போகமுடிகிறது. மற்றவர்கள் பாடு வேலையில்லா திண்டாட்டம் தான். இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழகம் வட இந்திய மாநிலங்களை விடவும் பின்னடைந்த ஒன்றாக இருக்கும். நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை விட சுற்றி இருப்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதும் முக்கியம். இந்த விடயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் தான் ஈழப்போராட்டம் தோற்றது. திராவிட இயக்கம் தமிழர்களுக்கு நன்மைகளை விட தீமைகளை தான் அதிகம் செய்துள்ளது.
matru karuthu
வெள்ளாளர், செட்டியர், நாயிடு, கன்னடர்,உருது முசுலிம்,மலையாலளி, மட்ற சிரியசாதிகளின் அரசியல் மேலன்மையை நிறுவியதே திரவிடத்தின் சாரம். இடஓதுக்கீடு, பெண் விடுதலை, நத்திகம் இவைகள் மேர்கூறியவர்கலளின் மேலன்மையை ஊயர்தியது, தமிழகதின் பெருவாரியான சமூக மக்களுக்கு பயண் அளிக்கவில்லை. அதன் காரனமகவே சாதிக்கு ஒரு கட்ச்சி தொன்றி இருக்காது. பிற மனிலஙளில் அப்படி இல்லை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.