சாதித் திமிரின் சதி
உன்னையும் காதலையும்
ஒருசேர சாய்த்தது!

- அ.இல.சிந்தா

தேடுங்கள்....
இளவரசனைப்
புதைக்க
ஜாதிகள் இல்லாத
ஊரை !
அது வரை -
எப்போதும் போல்
நடை பிணமாகவே
இருக்கிறோம்
நாங்கள் !

- நெல்லை ஜெயந்தா

வீடுகளைக் கொளுத்தி
காதலைக் கொன்று பிழைக்கிறது
சாதி அரசியல்
மண்ணை மீறுதல்
விதையின் குணம்
சாதியை மீறுதல்
விடுதலை மனம்

- யாழன் ஆதி

நந்தன் முதல்
நத்தம் காலனி
இளவரசன் வரை
எரித்த சாதியை
வீழ்த்தும் ஆயுதம்
ஈரோட்டில் இருக்கிறது!

- ஆங்கரை பைரவி

மூளையைச் சாகடித்துவிட்டு
இதயத்தை வாழச் சொல்லும்
சாதிக்கு வேண்டும்
மூளைச்சாவு!
மனிதநீதிக்கு வேண்டும்
மறுவாழ்வு!

- ரத்திகா

Comments

2 comments

2
சாணக்கியன்
சாதி என்பது பாழுங்கிணறு. அதிலே உட்கார்ந்துகொண்டு வெளியேவராமல் சாதியை ஒழியென்றால் ஒழிக்கவே முடியாது. சாதியைவிட்டு வெளியேற இஸ்லாமொன்றே தீர்வு. இஸ்லாத்தைவிட சிறந்தவழியை மனித இனத்தால் 1400 வருடங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை.

நல்வழியை காட்டத்தான் முடியும். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையாய் ஜாதி ஜாதியென்று குட்டிச்சுவரில் முட்டிக்கொண்டால், யாரால் என்ன செய்யமுடியும்?.
Shame MahaMad
ஐயா சாணக்கியரே, உம்ம குண்டு கலாச்சாரத்துல, ஜாதிய என்ன, மனித இனத்தையே அழிச்சிடலாம்! நல்லா இருக்கறவங்கள நொண்டியா, குருடணா, செவிடா முடமா உம்ம மதம் ஆக்கிடும். டும், டும் டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.