ஏப்ரல் 19  நம்மிடமிருந்து இரு பெரும் மனிதர்களைப் பிரித்து விட்டது. தொ.மு.ச. பேரவையின் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ. குப்புசாமி, தினத்தந்தி நாளேட்டின் ஆசிரியர் சிவந்தி ஆதித்தன் ஆகிய இருவரின் மறைவு, நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது!

தொடர்வண்டித் துறைத் தொழிலாளியாகத் தன் வாழ்வைத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து, தொழிற்சங்கத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்ந்து நின்றவர், பெரியவர் செ. குப்புசாமி. அனைவரிடமும் அன்பு காட்டும், பண்புடன் பழகும் பாங்கறிந்தவர்.

உழைக்கும் மக்களின் வரிசையில் கடைக்கோடியில் இருக்கும் மனிதனையும் பத்திரிகை படித்த வைத்த மாமனிதர் ஆதித்தனார். அவருடைய இளைய மகன், தந்தையின் பணியைத் தன் வாழ் நாளெல்லாம் தொடர்ந்தவர். விளையாட்டுத் துறைக்குத் தோன்றாத் துணையாக நின்றவர் சிவந்தி ஆதித்தன்.

இருவரின் மறைவாலும் ஏற்பட்டுள்ள துயரத்தை, எல்லோரோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.