குடி உயரும் நாடு!

பீரெ வாங்க முடிஞ்ச
அரசாங்கத்தாலெ
நீரெ வாங்க
முடியிலெ...!

பீர் உயரும் நாட்டிலெ
வரப்பு உயரலெ
குடி உயரும் நாட்டிலெ
கோல் உயரலெ...!

பாக்கெட்டு தண்ணீரெ
பாத்த சந்தோசத்துலெ
கட்டிங்கே போட்டுட்டு
மிதக்குறாங்க தரையிலெ...!

உரிமையைப் பறிகொடுத்து
உசுரெ போக்கிக்கிறாங்க
தற்கொலையின்னு கணக்கெ
முடிக்குறாங்க அரசாங்கத்துலெ...!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.