தர்மம்

கையிலும்செல்லிலும்
பாலன்சு  இல்லாத போதும்
தருவதாய் சொல்கிறார்கள்
கடன் அட்டை

0
வசந்த அழைப்புகள்

எஸ் எம் எஸ் பரிமாறல் களுக்காய்
செல் போன் வைத்திருக்கும்
கேட்க, பேச முடியாத
மாற்றுத் திறனாளிகளிடமும்
பிடித்த பாடலை கேட்க
விதிவிலக் கில்லாமல் வருகிறது
விளம்பர அழைப்புகள்
0000

அகம் புறம்

புற அழகின்
தேக வனப் பிற்காக உன்னையும்
அக வனப்பிற்காக என்னையும்
அழகாய் இருப்பதாய்
விமர்சிக்கப் படுகையில்
நீ இதழ்களாலும்
நான் கண்களாலும்
பதிலுக்கு புன்னகைக்கிறோம்  !

-  ஸ்ரீநிவாஸ் பிரபு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.