தளர்ந்துபோன 
கழுத்துப் பட்டையை
சரி செய்து
காலை வெயிலை
புறங்கையில் ஒதுக்கியபடி
கையில் கனக்கும்
கைப் பெட்டியுடன்
நகரத்தின்
ஒவ்வொரு தெருவிலிருந்தும்
புகுந்து
புறப்பட்டபடி இருக்கின்றனர்

வார்த்தைகள்
ஒவ்வொரு படிக்கட்டாக
ஏறிக்கொண்டிருக்கின்றன

சந்தோசத்தை
முகம் முழுக்க பரப்பிக்கொண்டு
பேசத் தொடங்குகின்றனர்

இவன் இறங்கிக் கொண்டிருக்க
அவன்
கடந்து சென்று கொண்டிருக்க
வாசல்
அழைப்பு மணி
ஓயாது
ஒலித்துக் கொண்டிருக்கிறது.

- முத்துச்செல்வன்

More articles by முத்துச்செல்வன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.