வலிக்காமல் மறையும் காற்று
கண்களின் மாயைக்கு
மரங்கள் நகரும் பின்னால்
உருமும் சத்தங்களிலும்
ஒரு லயம் இருக்கும்
சந்தத்திற்கு வார்த்தை போடும் மனது
எதையும் ரசிக்காது
தூங்கச் சாய்வர்
எப்போதும் சிலர்
பார்வைக்குத் தீனி
திகட்டாது கிட்டும்
பஸ்ஸில் ஜன்னலோரம் கிடைத்து
முழுமையாக ரசிப்பதற்குள்
இறங்குமிடம் வந்து விடுகிறது
மனித வாழ்வைப் போலவே!

 

மாறாதிருக்கக் கடவது

நசுங்கிய கொலுசுமணி
நசுங்காத கிணற்றுவாளி
கைப்பிடி அகலாத ஆட்டுக்கல் குழவி
சத்தம் போடாத காலை நேர மிக்ஸி
விள்ளல் இல்லாத அம்மா தோசை
காதல் வயப்படாத மனசு
சில்லறை சரியாய் தரும் கண்டக்டர்
போரடிக்காத டிவி
..............
மாற்றங்கள் சுவாரஸ்யமாய் இருந்தாலும்
மாறாமல் இருப்பதற்குள்ளும்
இருக்கிறது அழகு!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.