இளம் பனி சூரியன்
மெல்ல கண்விழிக்கும்
தீயில் தணியும் இதயம்
தேகத் தீயில் பட்டு ஒளிரும்

சலனங்களில் அலைவுறும்
தேகபிம்பம்
உணர்கொம்புகளை
அசைத்துயிர்த்து
மேகத் துண்டுகளென
பெருவெளியில் மிதக்கும்
ககன வெளியில் நகரும் உயிர்
சுகமுயிரித்து
பல கனவுகள் சுமந்து திரியும்

கனவுகளைக் களைந்து
நினைவுகளில் அலைந்து
கரைசேரும் மனம்

நதிக்கரையின் விளிம்பில்
சுழித்தோடும் அன்பின்
வழிசலில் அலைவுறும்
தக்கையின் ஆன்மா

எந்த இழையின் நுனியில்
பற்றிக் கொண்டிருக்கிறது
அன்பின் தீற்றல்

More articles by முத்துச்செல்வன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.