பேனா மூடியைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் இடத்தை விட்டு நகரமுடியாது
நமது பழைய ஊரில் தொடுவானத்தில் காற்றாலைகள் சுழலும்
இங்கும் சுழல்கிறது
இரண்டு பெட்ரோல் நிலையங்களுக்கிடையிலிருக்கும் ஊரர் நாம்
இந்த இடத்தை விட்டு நகரமுடியாது
மூன்று வாயில்கள் கொண்ட சிற்றுண்டிச்சாலை இருக்கிறது இங்கு
விரும்பினால் நீலவிளக்கடியில் அமர தனியறை இருக்கிறது
நான்கு நாற்காலிகளுக்கு நடுவே வட்டமேஜை இருக்கிறது
மீண்டும் மீண்டும் ஒரே தவற்றைச் செய்ய இருக்கிறது
வீடு திரும்பும் பாதை.தரகர் உங்களிடம் ஒப்படைத்தார் ஒரு சாவிக்கொத்தை
அதில் ஒரு குளிர்ந்த குட்டியூண்டு இதயம் தொங்குகிறது
வாட்டர்கலர் நாட்களின் புழுதி படிய அவர் சொல்லிவிட்டுப் போனார்
‘இங்கும் தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள்’

எதிரே இருக்கும் சூப்பர்மார்க்கெட்டில் ஒரு குளியல் சோப்பை வாங்குகிறீர்கள்
பூத்துவாலையைத் தேடுகிறீர்கள்
தவறிய அழைப்பிடும் அறியாத எண்ணுக்கு ஹலோ சொல்கிறீர்கள்
சுடச்சுட வெந்நீரில் மோட்டோ-ஸ்லிம்மைத் தேய்த்துக் குளிக்கிறீர்கள்
உலர்ந்த உடல் போர்த்தி சட்டைப் பையில் சொருகுகிறீர்கள்
எலுமிச்சை மணங்கமழும் சோப்புக்கட்டியை.நடக்கிறீர்கள்
அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் திசையில் அல்லது
வேறு ஊருக்குச் செல்கிறீர்கள் அல்லது
அதே ஊரில் வாழ்கிறீர்கள்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.