அந்த வண்ணத்துப்பூச்சி
தொட்டு மீண்ட
பூக்களும்
தொடாமல் கடந்த
பாதைகளும்
எண்ணிக்கையற்றவை

வலிமையற்ற
தனது
மென் சிறகசைப்பில்
காற்றையூடுருவிப் பறக்கிறது

கான்கிரீட் வனங்களில்
தேனைத் துழாவி
வழி தடுமாறி
தார்ச் சாலைகளில்
அல்லாடி

கண்ணாடித் திரையிட்ட
நெகிழிப் பூக்களை
ஸ்பரிசிக்க முயன்று

கட்டிடப் புதர்களில்
வழிகளற்று
முட்டி மோதி

எதிர்படும்
வாகனம் சிக்கிச் சிதறுண்டு
சிறகுகள் பிய்ந்து
தேனுன்னும் குழல் நீண்டு

மரித்துக் கிடக்கிறது
அவ்வண்ணத்துப்பூச்சி

- அ.இரா.கிருஷ்ணன்

More articles by அ.இரா.கிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.