1
சாதியெல்லாம் பார்ப்பதில்லை
யார் போனாலும்
சமமான மதிப்புதான்
பண்ணை வீட்டில்
யூஸ் அன்ட் த்ரோ டம்ளரில்
டீ குடித்து பெருமூச்சு விடுகிறான்
காலத்தின் அடிமையாய்
அப்பனுக்குப் பின் மகன்

2

பாட்டனுக்கு
தேங்காய்த் தொட்டியில்
அப்பனுக்கு
கண்ணாடி டம்ளரில்
மகனுக்கு
யூஸ் அன்ட் த்ரோ டம்ளரில்
விரல் ரேகை படிய
மறைந்திருக்கிறது
எல்லாக் காலங்களிலும் சாதி!

3

பெரிய கவுண்டச்சி
கட்டிக் கழித்த சேலை
பாட்டியின் இடுப்பிலிருந்தது.
சின்னக் கவுண்டச்சி
கட்டிக்கழித்த சுடிதார்
பேத்தியின் இடுப்பிலிருக்கிறது

Comments

1 comment

1
jaya sharma
மகனுக்கு
யூஸ் அன்ட் த்ரோ டம்ளரில்
விரல் ரேகை படிய
மறைந்திருக்கிறது
எல்லாக் காலங்களிலும் சாதி

ஏனொ சில முட்டால்லுக்கு இது புரியவில்லை
அதையிம் கவுரவமாகா
வாங்கி கொடித்துவிட்டு ஆன்டை வீட்டி கொடுத்தார்கல் என்ரு சொலுவார்கல் சில முட்டால்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.