புரட்சியாளர் ஒருவர் வீட்டிலிருக்கிறார். வீதியில் தமிழின விரோதி களும், துரோகிகளும், போலிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மோதிக் கொள்கிறார்கள். மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இவர்களில் எல்லா வல்லமையும் படைத்த பெரிய எதிரியை பொது எதிரியை வீழ்த்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் வாருங்கள் எல் லோரும் சேர்ந்து முதலில் அந்தப் பொது எதிரியை வீழ்த்துவோம். பிறகு மற்ற எதிரிகள் துரோகிகளைப் பார்த் துக் கொள்வோம் என்கிறார்கள். புரட் சிக்காரரையும் வந்து அழைக்கிறார்கள்.

புரட்சியாளர் சொல்கிறார், ‘எல்லாருமே தமிழினத்துக்கு விரோதி கள் எதிரிகள்தாமே. எப்படியாவது சண்டையிட்டு மோதிக்கொண்டு அழியட்டுமே’ என்கிறார். ‘அப்படி அழிந்தால்தான் பரவாயில்லையே, ஆனால் நாம் இதில் கலந்து கொண் டாலும் கொள்ளாவிட்டாலும் யாரோ ஒருவர் வெல்லத்தானே போகிறார். அப்படி வெல்வது அந்தப் பெரிய எதிரி யாக பொது எதிரியாக அல்லாமலாவது பார்த்துக் கொள்ளலாமே, எழுந்திருங் கள்’ என்கிறார்கள்.

புரட்சியாளர் அசையவில்லை. ‘எனக்கு எல்லாமே எதிரிகள்தான். யாரையும் நான் ஆதரிக்கமாட்டேன், எதிர்க்கவும் மாட்டேன். எனக்கு புரட்சி மட்டுமே முக்கியம். ஆகவே புரட் சியை எதிர்பார்த்து வீட்டிலேயே உட்கார்ந்திருப்பேன். இல்லாவிட் டால் யாரையுமே ஆதரிக்காதீர்கள் என்று தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்வேன்’ என்கிறார்.

மக்கள், ‘சரி அதை வேறு ஒரு சந் தர்ப்பத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு அந்தப் பெரிய எதி ரியை பொது எதிரியை நாம் மண்ணில் வீழ்த்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைப் பயன் படுத்திக்கொள்ள வேண் டாமா, எழுந்திருங்கள்’ என்கிறார்கள்.

அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? புரட்சியின் புனிதம் காக்க வீட்டிலேயே சும்மா உட்கார்ந் திருப்பீர்களா அல்லது இந்தப் பெரிய எதிரியை நம் மண்ணில் வீழ்த்த கிடைத் திருக்கும் வாய்ப்பும் புரட்சியின் ஒரு அம்சம்தான் என்று உணர்ந்து மக்கள் குரலுக்கு செவி சாய்த்து அந்தப் பெரிய எதிரியை பொது எதிரியை வீழ்த்த உதவி செய்வீர்களா?

உதவி செய்வீர்கள் என்றால் வெளிவந்து வாக்களியுங்கள். உதவ மாட்டேன் என்றால் வீட்டிலேயே இருங்கள். ஆனால் இப்படி வீட்டி லேயே இருப்பதன்மூலம் நீங்கள் அறியாமலேயே அந்த பொது எதிரிக்கு மறைமுகமாக ஆதரவு தருகிறீர்கள். அந்த எதிரிக்கு சேவகம் செய்கிறீர்கள், அந்தப் பொது எதிரியை வீழ்த்தும் வாய்ப்பை வீணடிக்கிறீர்கள் அல்லது அவர் வெற்றி வாய்ப்புக்கு உதவு கிறீர்கள் என்பதை மட்டும் உணர்ந்தால் சரி.

இல்லாவிட்டால் இப்படி யோசித்துப்பாருங்கள். நாம் வீட்டில் உட்கார்ந்திருக்கிறோம். தெருவில் ஒரு சண்டை நடக்கிறது. ஒரு புறம் நமது குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வர்கள், கருவறுத்தவர்கள், எப்போதுமே நமக்கு எதிராகச் செயல்படுபவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகார பலத்தைக் கொண்டு நம்மை ஒடுக்கு பவர்கள். மறுபுறம் நமக்கு, நம் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டபோது ஒப்புக்காக உண்மையாகவோ, போலி யாகவோ குரல் எழுப்பியவர்கள். இதற்கு முன் பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு அற்பத் தீங்கு இழைத்தவர்கள். தற்போது அதிகாரத்தில் இல்லாத வர்கள். இந்த இரு தரப்பினருக்கும் சண்டை நடக்கிறது.

மக்கள் வந்து நம்மை அழைக்கிறார்கள். நமது குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்த அதிகாரத்தில் இருக்கும் கொலைகாரர்களுக்கும், நமக்கு அற்பத் தீங்கிழைத்த அதிகார மில்லாதவர்களுக்கும் சண்டை நடக் கிறது. வாருங்கள் இதுதான் நல்ல சம யம், எல்லோரும் சேர்ந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகாரத்தில் உள்ள கொலைகாரர்களை வீழ்த்து வோம். பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்வோம் என்கிறார்கள். அப்போது நாம் என்ன செய்வோம்? சரி என்று எழுந்துபோய் அந்தக் கொலை காரர்களை வீழ்த்த முயல்வோமா அல்லது, நாங்களெல்லாம் புரட்சிக்காரர்கள். எங்களுக்கு எல்லோரும் எதிரிதான். நாங்கள் எல்லோரையும் ஒரே மாதிரிதான் பார்ப்போம் என்று சும்மா வீட்டிலேயே உட்கார்ந்திருப் போமா?

எழுந்து வெளியே போய் நாமும் அதில் பங்கேற்றால் நம் கொலைகாரர்களை வீழ்த்த பழி வாங்க கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் அதற்குரிய பலன் கிட்டும்.

இல்லாவிட்டால் அது என்ன ஆகும்? கொலைகாரர்களுக்கு ஆதரவாக, மறைமுகமாக நாம் அவர்களுக்குத் துணை போனதாகவே ஆகும். அந்த பாவத்தை நாம் செய்யலாமா? யோசியுங்கள்.

Pin It