[பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகள் வழிப் பெயர்த்தியும் திருக்குறள் மணி இறைக்குருவனாரின் மகளுமான ‘கயல்’ என அழைக்கப்படும் அங்கையற்கண்ணி இளங்கலை தமிழிலக்கியமும் பின்பு சட்டமும் பயின்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருபவர்.
தமிழ்த் தேசியப் பற்றாளரும், தமிழீழ விடுதலை ஆதரவாளருமான இவர், இதுசார்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டங்களில் முன்னணியில் இருந்து செயல்பட்டதுடன், இப்போராட்டம் ஒன்றில் காவல் துறையால் அடிபட்டு ஒரு வாரம் மருத்துவமனையிலும் இருந்தவர்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக காலவரையற்ற உண்ணாநோன்பு இருந்து நான்கு நாள்களுக்குப் பின் கைது செய்யப்பட்டு ஒருவாரம் புழல் சிறையில் அடைக்கப்பட்டவர்.
ராஜபக்ஷே படம் எரித்தமைக்காக கைது செய்யப்பட்டு ஒரு இரவு முழுக்க காவல் கைதில் இருந்தவர்.
தற்போது சிறையிலிருக்கும் பாவலரேறுவின் மகன் பொழிலனால் உருவாக்கப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக த.ஒ.வி.யிலும், பெண்ணுரிமை அமைப்பான தமிழகப் பெண்கள் செயல் களத்திலும் உறுப்பினராக இருந்து வருபவர்.
அடிப்படையில் அநீதிகளுக்கு எதிராக போராடும் மனோபாவம் கொண்ட இவர், மனித உரிமை மீது அக்கறை கொண்டு அது சார்ந்து குரல் கொடுப்பதுடன், மனித உரிமை சார்ந்த வழக்குகளையும் நடத்தி வருபவர். இதே அக்கறை, பற்று காரணமாக சமீபத்தில் போருக்குப் பிறகான தமிழீழ நிலைமைகளை அறிய, தமிழீழம் சென்று சிங்கள ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு மீண்டு திரும்பியதன் அனுபவங்களை இங்கு பதிவு செய்கிறார்.]
‘வாழ்நாள் சிறியது வாழ்க் கையோ பெரியது வீழ்நாள் வரினும் வீழாது நற் செயல்’ என்று இந்தச் செறிவு மிக்கத் தமி ழினத்தைத் தம் வாழ்நாள் முழுவதும் பேச்சாலும், கொள்கை உறுதியாலும் வாழ்க்கை நடைமுறை யாலும் வாழ்ந் துக்காட்டி எழுச்சியுறச் செய்த எம் அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் அடியற்றி உணர்வேந்தி வளர்ந்த நான், சிங்கள அரசிடமிருந்து தமிழீழ அரசை மீட்டெடுத்து நிறுவ நீண்ட நெடிய போராட்டக்களம் கண்ட தமிழீழத் தேசியத் தலைவர் எல்லாளன் என்கிற பிரபாகரன் அவர் களும் தமிழின மறவர் மறத்திகளும் வாழும் அந்த வீரஞ்செறிந்த தமிழ் மண்ணில் சிங்கள இராணுவத்தால் பாதிப்புற்று போர்க் காலத்திற்குப் பின் வாழும் எம் தமிழ்க் குடிமக்களின் தற்போதைய வாழ்வியல் நிலை மற்றும் மன உணர்வு களை நேரில் சென்று உள்வாங்கிக் கொள்ளும் இன மாந்தநேய உணர்வில் தமிழர் திருநாளாம் பொங்கலன்று செல்ல முடிவு எடுத்தேன்.
அதன்படி, நானும் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் வேலூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். திரு மலையும் சனவரி 13ஆம் நாள் விடியல் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 13ஆம் நாள் விடியற்காலை 3.00 மணியளவில் கொழும்புக்குச் சென் றடைந்தோம்.
சனவரி 13ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை தமிழர்கள் அதிகம் வாழும் தமிழீழப் பகுதிகளான மட்டக் களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, திருக்கோயில், கல்முனை போன்ற தெற்குப் பகுதிகளையும் வடகிழக்குப் பகுதிகளான வவுனியா, முருகண்டி, மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை போன்ற அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தனித்தனிக் குடும்பமாக வாழ் கின்ற மக்களையும் முகாம்களில் வாழ் கின்ற மக்களையும் சந்தித்தோம்.
உணவுப் பற்றாக்குறையில்..: வவுனியாவிற்கும் மன்னாருக்கும் இடையில் உள்ள கட்டைவிரியன் குளம் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் முகாமில் இருந்த மக்களை 14ஆம் நாள் நண்பகல் 3.00 மணி அளவில் சந்தித்தோம். 300 பேர் கொண்ட மக்களுக்கு 100 பேருக்கான உணவைத் தயாரித்து சிங்கள இரா ணுவம் வழங்கிக் கொண்டிருந்தது. உணவு கிடைக்காதவர்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் வடித்துக் கொடுத் தனர். குழம்பு கொதிக்காமல் பச்சை யாக இருந்தது. அதை வாங்கிச் செல் லும் மக்கள் உணவருந்தாமல் அதை இரவுக்கென எடுத்து வைத்துக்கொண் டனர்.
ஒரு 8 வயது குழந்தையிடம் ‘சாப் பிட்டாயா செல்லம்’ என்று கேட்ட போது ‘இல்லை அக்கா, நேற்று மாலை 5 மணிக்கு சாப்பிட்டேன்’ எனக் கூறியது இன்றும் கண்ணில் நிற்கிறது. அந்தக் குழந்தைக்கு அப்போது கொடுக்க பணத்தைத் தவிர எதுவும் இல்லாமல் கனத்த மனத்தோடு திரும்பினோம்.
அந்தப் பகுதியை ஒட்டியிருந்த பல பகுதிகளில் முகாமிட்ட மக்களுக்கு நண்பகல் உணவுகூட போய்ச் சேர வில்லை. சிங்கள அரசின் பொருளா தார வளத்தை நோக்கும்போது அது தமிழீழ மக்களுக்கு செய்யும் வாழ் வாதார வசதிகள் என்பது மிக மிகக் குறைவே. திட்டமிட்ட பட்டினிச் சாவையும், நோய்களையும் அந்த மாந்தநேயமற்ற அரசு உருவாக்குகிறது என்பதை அறிந்து கொண்டோம்.
அன்று இரவு அங்கு இருந்த மடு மாதா கோயில் சென்றபோது கிறித்துவ பாதிரியர்கள் 150 பேர்மீது சிங்கள இராணுவம் குண்டுபோட்டு அழித் திருக்கிறது என்ற செய்தியை அறிந்து கொண்டோம்.
நகரங்களின் நிலையும், மக் களின் வாழ்வியலும் : உயிர் குடிக்கும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு நடுவில் ஊரடங்கு உத்தரவு போன்று வன்னிப் பகுதி களையும் நாடு கடத்தப்பட்ட அகதி கள்போல் மக்கள் வாழும் நிலை யையும் உள்வாங்கினோம். வன்னிப் பகுதியின் தொடக்கமான ஏ9 நெடுஞ் சாலையின் இரு பக்கங்களிலும் சோலையாய் காணப்பட்ட நிலங் களின் நடுவே கண்ணி வெடிப் பகுதி கள் சரி செய்யப்படாமல் இருந்தது. தமிழீழ அரசாங்கம் கட்டி நடத்திய போர்த் தளவாடங்கள் அழிக்கப்பட் டிருந்தன. போர்க் காலத்தில் எறி கணை தாக்குதலில் பனை மரங்கள் மொட்டையாக்கப்பட்டுள்ளது. வேளாண்மை நிலங்கள், தோட்டப் பயிர்கள் அழிக்கப்பட்டிருந்தன. இத னால் தமிழீழத்தின் தேசியத் தொழில் களான பனைமரம் சார்ந்த உற்பத்தித் தொழில்கள் மற்றும் வேளாண்மைத் தொழில், மீன்பிடித் தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தமிழீழத்தின் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சி இன்று அடிப் படை வசதிகளை இழந்து ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் ஓரிரு குடும் பங்கள் உள்ளிருந்து வாழும் அவல நிலை. ஆங்காங்கே இராணுவக் குழுக்கள் பெண்கள் தனியாக வாழும் பகுதிகளுக்கு தமிழீழ மக்களைக் காக்க இந்திய அரசு கொடுத்த டிராக்டரில் செல்வதைக் கண்டு மன அழுத்தத் துடன் வந்தோம். போர்க் காலத்தில் மக்களால் உருவாக்கப்பட்ட பதுங்கு குழிகள் இன்றும் சிங்கள இராணுவத் தின் அச்சுறுத்தலில் வைக்கப்பட் டுள்ளது.
சன்னல், தாழ்வாரம் அகற்றப் பட்ட இடிந்த வீடுகளுக்குள்ளேயே மக்கள் வாழ்கிறார்கள். நுகர்வுப் பொருட்கள் இல்லாத அடிமட்ட வாழ்க்கையில் உள்ளனர். கல்விச் சாலைகள், மருத்துவ நிலையங்கள், உணவுப் பண்டகக் கடைகள் அதிகம் இல்லாத ஊர்களாக வன்னிப் பகுதிகள் காட்சியளிக்கின்றன.
ஒரு வீட்டில் 53 அகவை உள்ள தாயாரும், அதே வீட்டில் 13 வயதுள்ள பெண்ணும் சிங்கள இராணுவத்தினரால் கருவுற்று இருக்கின்றனர் என்பது மனதை மிகவும் அதிர வைத்த செய்தியாக இருந்தது. பெரும்பாலான குடும் பங்களில் ஆண்கள் இல்லை. இரு கண், இருகை இழந்த மக்கள் அதி கம் உள்ளனர். 60,000 கைம் பெண்கள் உள்ளனர்.
இந்த இழிநிலைக்கு மக்கள் தள்ளப்பட்ட போதும், நீண்ட நெடிய வீரம் செறிந்த வாழ்வி யலைக் கொண்டிருந்த தமிழினம் இன்று அந்த நிலையில் எள்ளளவும் மாறாமல் பல இன்னல்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் இடையிலும் தங்களைத் தமிழீழத் தேசிய உணர் வால் தக்க வைத்துக் கொண்டுள் ளது. இருப்பினும் நீண்ட நெடி யப் போர்த்தடத்தைக் கண்ட மக்கள் போர்க் காலத்திற்குப் பின் சொந்த மண்ணிலேயே அகதிக ளாகச் சிங்கள இராணுவக் கட்டுப் பாட்டில் வாழும் அவலம் உள்ளது.
தமிழீழத் தொழில் ஆதாரங்கள் இல்லாத வறுமை வாழ்க்கை சிங்கள அரசின் தமிழின விரோத, தமிழின அழிப்பு உத்திகளின் வெளிப்பாட்டை உணர்த்தியது.
மீள் குடியேற்றங்கள் - முள் வேலி, தடுப்பு, வதை முகாம்கள் : யாரெல்லாம் இனி போராடத் தகுதியில்லை என சிங்கள அரசின் இராணுவம் எண்ணுகிறதோ அதாவது இரு கண், இரு கை இழந்தவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்ற நிலையில் உள்ளவர்களை எல்லாம் மீள் குடியேற்றத்தில் வைக்கிறார்கள். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத வெற்றுப்புறப் பகுதிகளில் 12 தகடுகள் கொடுத்து வீட்டைத் தாங்களேக் கட்டிக்கொள்ள கட்டாயப் படுத்தும் நிலை பெரும்பான்மையாக நிலவு கிறது. எங்களிடம் அந்த மக்கள் பேசும் போது கொழும்பு அரசால் தொழில் ஆதாரம் மறுக்கப்படுவதால் பசுமாடு அல்லது தையல் எந்திரம் போன்ற உதவிகளையும் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற தேவைகளையும் கேட்கிறார்கள்.
இந்தப் போரில் ஈடுபட்ட போர்க்குணமிக்க ஆண்கள் - பெண்கள் சுமார் 1லு லட்சம் பேர் தற்போதும் முள்வேலி முகாமில் உள்ளனர். ஒமந்தை, நெல் குளம், மன்னார், வவுனியா, டெக்னிகல் காலேஜ், மட்டக்களப்பு, கிளி நொச்சி, புதுக்குடியிருப்பு என பல பகுதிகளிலும் முகாம்களில் அடைக்கப்பட்டுள் ளனர். மூன்று வேளைக்குத் தேவை யான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் இன்றி இவர்கள் அவதிப் படுகின்றனர்.
இது மட்டுமின்றி வதை முகாம் களில் கைகளைக் கட்டி பெட்ரோலை நுகரவைப்பது, சுத்தமில்லாத கழி வறைகளை வைத்திருப்பது, உணவு கொடுக்காமல் பட்டினிச் சாவுக்கு இரையாக்குவது, அடிப்பது என பல கொடுமைகள் நிகழ்கின்றன.
தடுப்பு முகாம்களில் 36 மாதம் உறவினர்கள் - வழக்கறிஞர் தொடர்பு இன்றி பயங்கரவாதத் தடைச் சட் டத்தில் போட்டு வதைப்பது என்கிற நிலை உள்ளது.
கண்காணிப்பு வன்கொடுமை பெயரில் ‘ஐயப்பாடு’ என்கிற பெயரில் இவர்களைக் கொடுமைப் படுத்தவோ, வேறு தொழில்கள் தேடி வெளியில் செல்பவர்களை விடுதலையாக வாழ விடாமல் கடத்திச் சென்று கொல் வதோ அல்லது தடுப்பு முகாம்களில் வைப்பது என்ற அடக்குமுறையை ஏவுவதோ ஆன நிலை உள்ளது. அங்கு சட்ட உதவிகள் மறுக்கப்படுகின்றன.
வீரத்தாய் பார்வதி அம்மா ளின் நிலை: யாழ்ப்பாணத்தில் உள்ள வல் வெட்டித் துறையில் அரசு மருத் துவமனையில் பொது பெண்கள் பிரிவில் தமிழீழத் தேசியத் தலைவரின் தாய் பார்வதி அம்மாள் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை அறிந்து அவரைச் சந்திக்கச் சென்றோம். சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட போதும் அங்கிருந்த தமிழ் செவிலியர்களின் உதவியுடன் சந்தித்தோம். ஒரு இரும்புக் கட்டிலில் சிறகுபோல மெலிதான உடலுடன் கொசு வலைக்குள் அவர்கள் கிடத்தப் பட்டு இருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் நாங்கள் ‘அம்மா, தமிழ்நாட்டிலிருந்து கயலும், திரு மலையும் வந்திருக்கிறோம்’ என்று கூறியவுடன் அவர்கள் கண்ணிலிருந்து கண்ணீர் சுரந்தது. ஒரு நிமிடம் குழந்தை நிலையில் அழுதார்கள். பிறகு நினைவின்றி இருந்தார்.
விசாரணை முறை : உரிய முறையில் கடவுச் சீட்டு, விசா மற்றும் கொழும்பு அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதிக் கடிதத் துடன் சனவரி 13ஆம் நாளிலிருந்து 18ஆம் நாள் நண்பகல் வரை பயணம் மேற்கொண்ட நாம் ஓமந்தை சோதனைச் சாவடியில் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு 21ஆம் நாள் நண்பகல் வரை விசா ரணை கைதிகளாக கொழும்பில் உள்ள 4வது மாடியில் வைக்கப்பட்டு இருந்தோம். உணவு முறை சரியில்லா மலும் தூக்கமின்றி தொடர்ந்து நான்கு நாள் விசாரணையிலும், இந்தியத் தூதரகம் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதியின்றியும், பெற்றோர் களுக்கு செய்தி சொல்ல அனுமதியின் றியும் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டோம். மேலும் திருமலை தோழரை அடித்துத் துன் புறுத்தினர். ஒரு மாதம் விசாரிக்க வேண்டும் என்றும் ஓராண்டு சிறை வைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அறிந்தோம்.
மக்களின் அவலநிலையை முகாம்களின் நிலையைப் புகைப்படங்களாக பதிவு செய்தும், செய்திகளாகப் பதிவு செய்தும் வைத்திருந்தோம். புகைப்படங்களை எல்லாம் அழித்து விட்டனர்.
எந்த வன்செயலிலும் இறங்காமல் எம் இன மக்களை மற்றும் பார்வதி அம்மாளை சந்தித்த நிலைக்கே இந்த கடுமையான விசாரணை என்று எண்ணிய நிலையில் 21-01-2011ஆம் நாள் நண்பகல் 3.00 மணியளவில் எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அனுமதி பெற்று, தமிழகத்திற்கு அனுப்புவதாகக் கூறினர். அதன்படி 21-03-2011 அன்று இரவு 10 மணி அளவிற்கு தமிழகம் வந்தடைந்தோம்.
தமிழகத்தில் போராட்டம் :
எங்களைக் கைது செய்ததை எதிர்த்து தமிழினத்தின் போர்த் தூண்களான வழக்கறிஞர்கள் மதுரை யிலும், சென்னையிலும் செய்த போராட்டமும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செய லாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடு மாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் கோவை இராம கிருட்டிணன், நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இந்தியப் பொது வுடைமைக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் மகேந்திரன், தமிழ் இன உணர்வாளர்கள் ஆகி யோரின் ஒன்றுபட்ட எழுச்சிக் குரல், சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எங்களை விடுவிக்கச் செய்தது. அவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.