தொடர்புடைய படைப்புகள்

ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்கள்:

குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்தை வழங்கும் மாட்டிறைச்சி உணவை கேரள மக்கள் விரும்பி உண்பது போல, தமிழர்களும் தங்கள் உணவுப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி உணவை முன் வைத்து நடக்கும் பொது நிகழ்வுகளுக்கு தமிழக அரசின் காவல்துறை தடைவிதிப்பதற்கும், கெடுபிடி காட்டுவதற்கும் வன்மையான கண்டனத்தை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

பீகார் மக்களுக்குப் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியும் பாஜக பரிவாரங்களும் மதவாத வெறுப்புக் கருத்துக்களை முன் வைத்து வெற்றி பெற்று விடலாம் என திட்டமிட்ட முயற்சிகளை முறியடித்து, நிதிஷ்குமார் தலைமையிலான சமூகநீதி சக்திகளுக்கு பெறும் வெற்றியை குவித்துள்ள பீகார் மக்களுக்கு வாழ்த்துக்களை யும், மகிழ்ச்சிகளையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

கவுரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம்

கவுரவக் கொலை என்ற பெயரால் ஜாதிவெறி சக்திகள் நடத்தும் குடும்பப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டு அனுப்பி வைத்த சட்ட வரைவுக்கு அண்டை மாநிலங்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு கருத்து தெரிவிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, இதில் உரிய கவனம் செலுத்தி செயல்பட வலியுறுத்துகிறது.

மாநில உரிமைகளைப் பறிக்கிறது நீதித்துறை பரிந்துரை

உயர்நீதிமன்ற பாதுகாப்பை மத்திய காவல்துறைக்கு பரிந்துரைப்பதை, மாநில அரசின் உரிமைப் பட்டியலில் உள்ள காவல்துறை உரிமையைப் பறிப்பதாகவே இம்மாநாடு கருதுகிறது. ஏற்கனவே தமிழ் நாட்டில் இயங்கும் விமான நிலையங்களின் பாதுகாப்பு மாநில காவல்துறையிடம் இருந்து மத்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இப்போது உயர்நீதிமன்ற பாதுகாப்பும், மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இவ்வாறான மாநில உரிமைப் பறிப்புக்கு எதிராகக் கட்சி அரசியல் கண்ணோட்டமின்றி, தமிழக அரசியல் கட்சிகள் அனைவரும் உரிமைக் குரல் கொடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Comments

1 comment

1
rnகுமார்
திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3 ன் crmp number :1017/2015 நாள் 11-05-2015 ன் படி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கடந்த 07-07-2015 அன்று இந்திய தண்டனை சட்டம் 417 மற்றும் 495 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை எண் 301/2015 ன் charge sheet ( குற்ற விசாரணை அறிக்கை நகல்) கேட்டு சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு மனு அனுப்பியும் இது நாள் வரை குற்ற விசாரணை இறுதி அறிக்கை நகல் தரவில்லை. இது என்னுடை வாழ்வுரிமை சம்மந்தப்பட்ட பிரச்சினை ஆதலால் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005. ன் சட்டப்பிரிவு 7 ன் உட்பிரிவு 1 ன் கீழ் குற்ற விசாரணை இறுதி அறிக்கை நகல் கேட்டு விண்ணப்பித்தும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல் படும் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளரைக் கண்டித்தும் குற்ற விசாரணை இறுதி அறிக்கை நகல் வழங்க உத்தரவிடாத மாவட்ட காவல்துறை மேலதிகாரிகளை கண்டித்தும் வரும் 30-11-2015 அன்று கண்டண சுவரொட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஒட்டப்படும். அப்போதும் தரவில்லை என்றால் 02-12-2015 அன்று நீதி வேண்டி திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ...........இவன்.. காவல் நிலை மனித உரிமை மீறலுக்கு உள்ளான. இரா.பழனிக்குமார் செல்:9944171521

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.