kolathoor mani selva perunthakai

20.2.2016 அன்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழக முதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெற்றது.

“• சென்னையில் குதிரைப் பந்தயம், முதலாளிகளுக்கு கோல்ப் விளையாட பல ஏக்கர் அரசு நிலம். • சென்னையில் ஏழை எளிய குடிசை மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் இல்லையா? • தமிழக அரசே! ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களை துன்புறுத்தாதே!

• வாழ்வாதாரத்தை பறிக்காதே! கல்வி வேலை வாய்ப்பை முடக்காதே! • குடிசைப் பகுதி மக்களுக்கு அவர்கள் வாழ்விடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடு!

• உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட மக்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருப்பிடத்தை அமைத்து கொடு! • பார்ப்பன பனியா கும்பலுக்கு வெண்ணை! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுண்ணாம்பா?” - என்று முதல்வருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப் போராட்டத்தில் ஆர். நல்லகண்ணு (தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்) தலைமை வகித்தார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொ. லிங்கம் (தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் இயக்கம்), எஸ்.கே. மகேந்திரன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), கு. செல்வ பெருந்தகை (தமிழ்நாடு தலைவர்-எஸ்.சி./எஸ்.டி. காங்கிரஸ்) ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.