தமிழீழ விடுதலையில் தனது ஊடக பலத்தை முழுமையாக தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய Hindu குழுமம் வழக்கம் போல தற்போது முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலிலும் தமது தமிழின விரோதப் போக்கை பார்ப்பனத்திமிருடன் வெளிப்படுத்தியிருக்கிறது. தமது குழுமத்தின் சார்பில் வரும் ஃபிரண்ட்லைன், டிசம்பர் 30, 2011 இதழில் "1886 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமே தவறானது என்றும் முல்லைப்பெரியாறு அணை கட்டியதே தவறு, அதற்குப் பதிலாக புதிய அணையும் கட்டக்கூடாது, அந்தத் தண்ணீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக்கொள்ள வேண்டும்” என்றும் ஒரு நேர்காணல் வெளியாகி உள்ளது. அந்தக் கருத்துக்களை வெளியிட்டவர், மத்திய அரசின் முன்னாள் நீர்வளத்துறையின் தலைமைச்செயலாளரும், இந்தியாவின் முதல் தேசிய நீர் திட்டத்தின் வரைவினைக் கொடுத்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியுமான பி.இராமசாமி அய்யர் ஆவார். இவரைப்போலவே மனித உரிமை விசயங்களில் குரல் கொடுக்கும் கிருஷ்ண அய்யரும் கேரளாவில் அச்சுதானந்தன் நடத்திய கண்டனப் பேரணியில் பங்கேற்றுள்ளார்.

Hindu_Ram1மேற்கண்ட இரு பார்ப்பனர்களும் கேரளத்தில் இருப்பவர்கள். ஆனால் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பார்ப்பான் இந்து ராமும் கேரள பார்ப்பனர்களுடன் இணைந்து மலையாளிகளுக்கு ஆதரவாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். இராமசாம அய்யரின் நேர்காணல் வெளியாகி இருக்கும் அதே ஃப்ரண்ட்லைன் இதழில் ஆர்.கிருஷ்ணகுமார் என்பவர் முல்லைப்பெரியாறு அணையில் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். http://frontlineonnet.com/stories/20111230282612200.htm

அதையும் சிறப்பாக வெளியிட்டு மகிழ்கிறது ஃப்ரண்ட்லைன். 1886இல் தங்களுக்கு முழுஉரிமை இல்லாத, சொந்தமில்லாத நிலம் என்று தெரிந்தும் வெள்ளையரையும் ஏமாற்றி திருவாங்கூர் சமஸ்தானத்தால் போடப்பட்ட ஒப்பந்தத்தில் திருவாங்கூர் சார்பாக கையொப்பமிட்டவன் திவான் இராமையங்கார் என்ற பார்ப்பான் தான்.

மத்திய அரசின் மத்திய நீர்வழி ஆணையத்தின் தலைவராக இருந்த மலையாளியான கே.சி.தாமஸ் அண்மையில் 2011 நவம்பர் 27 அன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, "பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது. அதன் உறுதியைப் பற்றி யாரும் கவலைப்படவேண்டியதில்லை. கேரள அரசின் கூற்றுகளில் உள்நோக்கம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரை நீர் தேக்கினாலும் எந்த ஆபத்தும் இல்லை" என்று கூறியுள்ளார். http://expressbuzz.com/states/tamilnadu/cwc-ex-chief%C3%A2??s-remark-a-shot-in-arm-for-tn/339500.html

1980இல் அணை தொடர்பாக கேரள - தமிழ்நாடு இருமாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. அப்பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்து தலைமை தாங்கியவர் இதே கே.சி தாமஸ் தான். அப்போது மத்திய நீர் வழி ஆணையத்தின் தலைவராக இருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவாக, அணை பாதுகாப்பாக இல்லை என்றுகூறி அதைப் பலப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னார். அதன்படி அணை பலப்படுத்தப்பட்டது. அதைத் தான் மீண்டும் கே.சி தாமஸ், 1981க்குப் பிறகு அணையின் பாதுகாப்புப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை எனக் கூறுகிறார். மேலும் இராஜஸ்தான் மாநிலத்தில் 1730ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு அணையே இன்றுவரை உறுதியாக இருக்கிறது என்றும் கூறுகிறார். ஆனால் பார்ப்பன இராமசாமியோ எந்த அணையும் 100 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பானது அல்ல என்கிறார். இந்த பார்ப்பான்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேசிய நீர்க் கொள்கையை வடிவமைத்தவராம். தமிழர்களின் ஒட்டுமொத்த ஆற்றுநீர் உரிமை இழப்புகளுக்கு இவர்தான் காரணம் என்பது தெளிவாகிவிட்டது.

அதேபோல 1979 ஆம் ஆண்டு "முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்து எஞ்சியுள்ள நீரை இடுக்கி அணைக்குத் திருப்பி அங்கு மின்சாரம் தயாரிக்கலாம்" என்ற கருத்தை முதன்முதலில் ஒரு அறிக்கையாக தயாரித்து கேரள அரசுக்குக் கொடுத்து மோதலுக்கு முன்முயற்சி எடுத்தவர் எம்.கே.பரமேசுவரன் நாயர் ஆவார். அவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் அணை உடைந்தாலும் அந்த நீரை இடுக்கி அணை முழுமையாகத் தாங்கிக் கொள்ளும், அணை பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். http://www.ndtv.com/article/kerala/a-water-bomb-from-experts-156134

ஆனால், பி.இராமசாமி அய்யர் நேர்மாறாகப் பேசுகிறார். அவரின் நேர்காணல் இதோ:-

116 ஆண்டுகாலமான ஒரு அணையை நாம் படிப்படியாக பயன்பாட்டினின்று விலக்கவேண்டும். படிப்படியாக விலக்குதல் என்பது அதை நம்பி வாழும் மக்கள் மாற்று வாழ்வாதாரங்களுக்கு தங்களை பழக்கிக்கொள்ள நேரம் வழங்குதல் ஆகும்.

முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தமானது கேரளாவிற்கு துரோகம் செய்துவிட்டதால் மக்களிடையே ஆழமான எதிர்ப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சிக்கலுக்கு இதுவே ஆணிவேர். இது இந்தியா கோசி மற்றும் காண்டக் நதி ஒப்பந்தத்தில் நேபாளின் எதிர்ப்புணர்வுக்கு சமமானது.

1886இல் திருவாங்கூர் சமஸ்தானம் ஏன் இப்படிப்பட்ட அநியாயமான ஒப்பந்தத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்? 1970-யில் ஏன் கேரள அரசு பெரிய திருத்தத்தை முன்வைக்கவில்லை? ஏன் ஆழியாறு பரம்பிக்குளம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று தெரியவில்லை.

பொதுவாக மக்கள் சொல்கிறார்கள் எந்த அணைக்கும் 100 ஆண்டுகள் தான் ஆயுள் என்று. இந்த அணையும் அதைக் கடந்துவிட்டது. பொறியியல் நுட்பம் மூலம் கூடுதலாக ஒரு 10 ஆண்டுகள் நகர்த்தலாம். அதற்கு மேல் வாய்ப்பு இல்லை. சாசுவதமாக இது இருக்க முடியாது. எனவே இதிலிருந்து தமிழ்நாடு படிப்படியாக விலகிக்கொள்ள வேண்டும். அதற்காக நான் இதை நாளையே மூடவேண்டும் என்று சொல்லவில்லை. படிப்படியாக இதிலிருந்து விலக ஆயத்தமாக வேண்டும்.

அணையில் முழு அளவு 142 அடி. கேரளா 136 அடிக்கு மேல் விரும்பவில்லை. தமிழகத்தால் இதை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாதா? அது என்ன முழு தண்ணீரையுமா பயன்படுத்துகிறது?

முதலாவதாக இந்த அணை கட்டியிருக்கப்படக்கூடாத அணை. இயற்கையை அத்துமீறி வழிமறித்து கட்டப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத காலத்தில் கட்டப்பட்டது. இந்தக்காலம் என்றால் இப்படிப்பட்ட அணைகட்ட ஒப்புதல் வழங்கப்பட்டிருக்காது. ஆனால் இது நடந்துவிட்டது. வரலாற்றை நாம் திருத்தியமைக்க முடியாது. இந்த அணைக்கு வயது இப்பொழுது 116 ஆண்டுகள். இனியேனும் இதனிலிருந்து படிப்படியாக விலகிக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த மக்கள் மாற்று பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பழகிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றது. நதிநீரின் இயற்கை போக்கைக் காக்க வேண்டி நிறைய போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இங்கே என்ன செய்யவேண்டுமென்றால் இருக்கும் நீர் அளவில் பராமரித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாடிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

என்னுடைய பதில் என்னவென்றால், எந்த தொழில்நுட்பக் குழு அணையின் பாதுகாப்பு பற்றி என்ன அறிக்கை கொடுத்தாலும் நாம் மக்களுடைய பாதுகாப்பில் ரிஸ்க் எடுக்கக்கூடாது. மக்கள் பயந்தது பயந்தது தான். அதை மாற்றமுடியாது. அரசியல்வாதிகள் வேண்டுமானால் அரசியல்படுத்தலாம்; ஆனால் மக்களின் பயம் என்பது உண்மையானது. பூகம்ப அளவு சிறியதாக இருக்கலாம். ஆனால் மக்களின் பீதி உருவானது உருவானது தான். ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். அணை நிரந்தரமானது அல்ல என்னும் பொழுது எத்தனை ஆண்டு என்ற கணக்கு எல்லாம் பார்க்கவேண்டியது இல்லை, மாற்று என்ன என்று பார்க்கவேண்டியது தான்.

காவிரி நீர் பிரச்சனையைப் பாருங்கள். 670 டி.எம்.சி நீரில் 480 டி.எம்.சி நீரை தமிழகம் பயன்படுத்தி வந்தது. ஆனால் அதுவே எப்பொழுதும் சாசுவதமானது என்று இல்லை. பின், கர்நாடகம் காவிரி நீரை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தபொழுது தமிழகம் குறைந்த அளவு நீருக்குப் பழகிக்கொண்டது. அது போலத்தான், மாறிவரும் சூழலுக்குத் தகுந்தது போல தமிழகம்- வைகை அணையை நம்பியிருக்கும் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

புதிய அணை தொடர்பாக சொல்லவேண்டுமென்றால், நாங்கள் 100 ஆண்டுகளுக்கு முன் தவறு செய்துவிட்டோம். மீண்டும் அதை செய்யத்தயாராக இல்லை. ஆறு என்பது இயற்கை அமைப்பு. அதைத் தடுப்பது அணை கட்டுவது என்பது தவறு. ஆற்றை வளைப்பது, மறிப்பது சுற்றுச்சூழலை கெடுப்பது என்பது தவறு. கேரளாவின் கருத்துப்படி புதிய அணையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 999 ஆண்டு ஒப்பந்தமே மோசடியானது. கேரள அரசு தமிழகத்திற்கு நீர் தர மறுக்கவில்லை என்று சொல்லக்கூடாது. ஆழியாறு பரம்பிக்குளம் திட்டமே தவறானது. மக்கள் தமிழகத்திற்கு நீர் தர விரும்பவில்லை.

என்னதான் ரிப்பேர் செய்தாலும் அணையின் வயதைக் கூட்டினாலும், அப்படி செய்வது சரியா? அது தவறு. தமிழகம் இந்த ரிப்பேர் செய்வதற்கு செலவு செய்வது என்பது எல்லாம் விசயம் அல்ல. மேற்காக செல்லும் ஆற்றை கிழக்கு நோக்கி திருப்பி விடுவதே தவறான கொள்கை. சுப்ரீம் கோர்ட்டில் எல்லாம் இதைத் தீர்மானிக்க முடியாது. அதனுடைய பாதுகாப்பிற்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. - ஃப்ரண்ட்லைன் 30.12.2011

பிறப்பால் மலையாளிகளான, மலையாள தேசிய இனத்தைச் சேர்ந்த கே.சி.தாமஸ், எம்.கே.பரமேசுவரன் நாயர், அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி ஆகிய நீர் மேலாண்மை வல்லுனர்களும், சட்ட வல்லுநர்களும் அணைபற்றி அச்சப்படத் தேவையில்லை என்று நேர்மையுடன் அறிவிக்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில், தமிழர்களின் உழைப்பால் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் இந்து ராம், கேரளாவின் இராமசாமி அய்யர் போன்ற தமிழ்த் தேசிய இனத்திலோ, மலையாள தேசிய இனத்திலோ இந்தியத் துணைக்கண்டத்தின் எந்த தேசிய இனத்திலோ சேர்க்க முடியாத - எந்த தேசிய இனத்துக்கும் உண்மையாக, நேர்மையாக இருந்திராத - வரலாற்றுக் காலம் முதல் இன்று வரை பலநூற்றாண்டுகளாக துரோகக் கும்பலாகவும், சுரண்டல் கூட்டமாகவும், ஆதிக்க இனமாகவும், இந்தியர் என்ற இல்லாத தேசியஇனத்துக்கு அடையாளமாகவும் வாழ்ந்துவரும் பார்ப்பனக்கும்பலானது - அறிவும், மனிதாபிமானமும், நேர்மையும் இன்றி “இந்த அணை கட்டியிருக்கவே கூடாத அணை, இந்த அணை நீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக்கொள்ள வேண்டும்” என்று நெஞ்சை நிமிர்த்தி நேர்காணல் அளிக்கிறது, அச்சிட்டுப் பரப்புகிறது என்றால், அதைத் தமிழர்களும் அனுமதிக்கிறோம் என்றால் தமிழர்களைவிட, திராவிடர்களைவிட சொரணையற்ற இனம் ஒன்று உலகில் இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது.

இதுபோன்ற நிலையை எண்ணித்தான் பெரியார் அன்றே சொன்னார்,

"பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு தனியாகப் பிரியாவிடில், சுதந்திரம் இல்லை, சோறு இல்லை, மான வாழ்வு இல்லை. இது உறுதி, உறுதி, உறுதி." - விடுதலை 25.02.1949

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

34 comments

34
இராமியா
இக்கட்டுரையாளர் சுட்டிக் காட்டியுள்ள இந்து நேர்காணல் கட்டுரையில் முட்டாள்களும் ஒப்புக் கொள்ள முடியாத மூன்று அம்சங்கள் உள்ளன.

இயற்கையை அத்துமீறி ஆற்றின் வழிப் போக்கைத் தடுத்து அணையைக் கட்டியது தவறு என்று பி.இராமசாமி ஐயர் கூறி இருக்கிறார். அணை என்றாலே இயற்கையை அத்துமீறி ஆற்றின் வழிப் போக்கைத் தடுத்துக் கட்டுவது தான். உலகில் உள்ள அணைகளை எல்லாம் உடைத்து விட வேண்டும் என்று அவர் கூறுகிறாரா?

அணைகளின் ஆயுள் அதிக பட்சம் 100 ஆண்டுகள் என்று கூறுகிறாரே! தொழில் நுட்பம் முளைவிடாத காலத்தில் கட்டப்பட்ட கல்லணையே 1000 ஆண்டுகளாகியும் பாதுகாப்பாக இருக்கும் பொழுது தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் கட்டப்பட்ட அணைகளின் ஆயுள் 100 ஆண்டுகள் என்று கூறினால் பிறந்த குழந்தை அல்ல; கருவில் உள்ள குழந்தையே கூட கை கொட்டிச் சிரிக்கும்.

காவிரி நீர்ப் பிரச்சினையில் கர்நாடகமும் மைய அரசும் செய்துள்ள துரோகத்தினால் உரிமை பறிக்கப் பட்டுள்ள தமிழக மக்கள், அதை ஒப்புக் கொண்டு பழகி விட்டார்கள் என்று கூறுவது கொடூரனமான ஆதிக்க மனோபாவம். கொடுங்கோலர்களின் சிந்தனை இப்படியும் இருக்குமா?
ம பொன்ராஜ்
தமிழர்கள் நாங்கள் முல்லை பெரியாறு அணையின் நீர் இல்லாமல் வாழ பழகி கொள்கிறோம். பதிலுக்கு மலையாளிகள் கீல்கண்டவற்றிற்கு தம்மை பழக்கி கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-------
1 . தண்ணீர் இல்லாததால் பயிரோ,விலங்கினங்களோ இருக்க போவதில்லை. எனவே மலையாளிகள் இறப்பரையும்,தேங்காயையும் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ பழகி கொள்ள வேண்டும்.
-------
2 . மின்சார கம்பிகளின் ஆயுள் சில வருடங்கள் தான். எனவே தமிழ்நாட்டில் இருந்து, குறிப்பாக கேரளாவிற்கு செல்லும் மின்சார கம்பிகள் அனைத்தும் பழுதாகும் வாய்ப்பு கண்டிப்பாக இருக்கிறது. எனவே அந்த கம்பிகள் விரைவில் அறுத்து எறியப்பட்டு நீக்கப் படுவதால், இனி மலையாளிகள் இருளில் வாழ பழகி கொள்ள வேண்டும்.
-------
3 . தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் இன்னும் சில காலத்தில் பழுதடையும் வாய்ப்பு இருப்பதாலும் , அப்படி ஏற்படும் பழுதினால் கேரளா வாகனங்கள் தலை குப்புற பள்ளத்தில் விழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் கேரள மக்களின் நலன் கருதி ,இனி வரும் காலங்களில் நாயர் டீ கடை உட்பட,சிறு குழந்தைகளுக்கும் தமிழ்நாடு பால் பொருகளை அனுப்ப இயலாததால் மலையாளிகள் இனி வெறும் கட்டன் சாயா மட்டும் குடித்து பழகுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
--------
4 . தமிழகத்திலே போதுமான திறமைசாலிகள்,நடிக நடிகைகள் இருப்பதால் இனி எதிர்காலத்தில் கேரளா நடிக,நடிகைகள் கனவில் கூட தமிழ்நாட்டை நினைத்து பார்க்காதவாறு பழகி கொள்ள வேண்டும்.
-------
5 . தமிழக கேரளா எல்லையில் உள்ள இரயில்வே தண்டவாளங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் பழுதடையும் வாய்ப்பு இருப்பதால் அந்த தண்ட வாளங்கள் விரைவில் அகற்றப் படும். எனவே மலையாளிகள் நடக்க பழகி கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
-------
6 . நகைகள் வாங்கினாலும் சரி,விற்றாலும் சரி.. ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் மட்டுமே அணுகுவது என்று முடிவு செய்யப் பட்டு விட்டதால், இனி கேரளா தங்க நகை ஆட்கள் தமிழகத்தில் கடை திறப்பது பற்றி எந்த காலத்திலும் நினைக்காது பழகி கொள்ள வேண்டும்.
-------
7 . நிலமோ,வீடோ ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு மட்டுமே வாங்கவோ,விற்கவோ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால், இது வரை மலையாளிகள் வாங்கிய அணைத்து தமிழக நிலத்தயும் அவனிடம் ஒப்படைத்து விடுமாறும், மேற்கொண்டு அவ்வாறு வாங்க நினைக்கதவாறு பழக கொள்ள வேண்டும்.
---------
8 .கேரளாவில் வீடு கட்ட மணல்,செங்கல் போன்ற கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் கேரள எல்லைக்குள் நுழைந்து அதன் சாலைகளையும்,சுற்று சூழலையும் மாசு படுத்துகிறது.எனவே கரள மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு கட்டுமான பொருட்களை கேரளாவுக்கு இனி அனுப்ப போவதில்லை என்று முடிவு செய்துள்ளதால், இனி மலையாளிகள் தென்னம் கீற்றால் வேயப் பட்ட குடிசையில் வாழ பழகி கொள்ளவேண்டும்.
---------
9 . "தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்" என்று விளம்பரப் படுத்திவிட்டு, இறுதியில் ஒரு மலையாள பெண்ணுக்கு பரிசு கொடுத்து ஏமாற்றும் தொலை காட்சியை தமிழன் தெளிவாக அடையாளம் கண்டு விட்டதால், அந்த தொலைக் காட்சியை நிருத்திகொல்வதோடு அல்லாமல், இனி அது போன்ற நிகழ்ச்சியை தமிழ் நாட்டில் நடத்தாமல் மலையாளிகள் பழகி கொள்ள வேண்டும்.
---------
10 . தமிழ்நாட்டில் பத்திரிகை நடத்தினாலும், கேரளாவின் நலனுக்காக செயல்படும் ஊடகங்களை தமிழன் அடையாளம் கண்டு கொண்டதால்,இனி அது போன்ற ஊடங்கங்களை தமிழ்நாட்டில் நடத்தாமல் மலையாளி பழகி கொள்ள வேண்டும்.
--------
கதிரோன்
அதே இதழில் தமிழக நிலையை விளக்கும் கட்டுரையும் உள்ளது.இந்துவின் தலையங்கத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக எழுதவில்லை.ராமசாமி ஐயர் தில்லியில் இருப்பவர்.அவர் இது போன்ற கருத்தை 2007ல் முன் வைத்துள்ளார். ராமசாமி அய்யரின் கட்டுரை எக்கான்மிக்&பொலிடிகல் வீக்லியிலும் வந்துள்ளதே.அதிஅசுரன்கள் அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள். இடதுசாரிகள் அதில் எழுதுகிறார்கள். அவர்களையும் குறை சொல்வீர்களா. ஒரு பிரச்சினையில்
பல கருத்துக்கள் இருக்கும். அதை ஊடகங்கள் வெளியிடுவது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அவை இல்லாமல் போகாது என்பதுதான் உண்மை. பிரண்ட்லைனில் ஒரு பிரச்சினை குறித்து பல கட்டுரைகள்,பல நிலைப்பாடுகளுடன் வருவது புதிதல்ல.கேரள தரப்பு வாதம் தொலைக்காட்சிகளில்,செய்தித்தாள்களிலும் இடம் பெறுகிறதே.அது போல்தான் இதுவும். இந்துவில் வெளியானதை வைத்து பக்கத்தை நிரப்பும் பெரியார் முழக்க பிழைப்புவாதிகள் இந்து ராமை குறை கூறுவது வேடிக்கை.இவர்களால் சிந்தித்து எழுத முடியாது என்பதால் இந்துவின் தலையங்கம், தலையங்கப்ப் பக்க கட்டுரைகளைக் கொண்டு பெரியார் முழக்கத்தில் முழங்குவார்கள்.அப்படியெ இந்து ராமையும் திட்டுவார்கள்.
என்னே வேடிக்கை.
சாய்நாத் கட்டுரை இந்துவில்தானே வெளியாகிறது, நீங்கள் செய்திகளை இந்துவிலிருந்து எடுத்து போடுகிறீர்கள்.சொந்தமாக எழுதாமல் இந்துவில் வெளியாகும் கட்டுரைகளையும் சார்ந்தே எழுதுகிறீர்களே.
ஒராண்டிற்கு இந்துவில்,பிரண்ட்லைனில் வெளியாகும் கட்டுரைகளை பயன்படுத்தாமல் பெரியார் முழக்கத்தை நடத்துங்கள்.
ம பொன்ராஜ்
கதிரோன் அண்ணே.... புலிகளுக்கு இந்தியா பயிற்சி கொடுத்த காலத்தில் இருந்து, கடைசியாக வீழ்த்தப் பட்டவரையிலும் 'இந்து ராம்' அவர்கள் நடுநிலை(?) தவறாமல் அவர் பத்திரிகை தர்மத்தை கடை பிடித்தவர் என்று ஊர் உலகத்துக்கே தெரியும் அண்ணே...அப்படிப்பட்ட அவரின் நடுநிலைமைக்காக 'லங்கா ரத்னா' விருது பெற்றதும் அனைவருக்கும் தெரியும் அண்ணே.... அப்பேற்பட்ட நடுநிலை நாயகாரன் 'இந்து' ராம், முல்லை பெரியாறு பிரச்சனையிலும் நடுநிலை தவறிவிடகூடது என்ற ஒரே காரணத்துக்கத் தான் மேற்சொன்ன கட்டுரையை அவர் 'இந்து'வில் வெளியிட்டார் என்று அனைத்து தமிழர்களும் நம்ப வேண்டும்..... இதை தானே சொல்ல வறீங்க?.... ஆனா பாருங்க கதிரோன் அண்ணே.... இந்த தமிழ் ஆளுங்க எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க... இதுல அப்ப அப்ப இவங்களுக்கு 'செல்போன் சிக்னல்' மாதிரி 'இன உணர்வு' வேற வந்து வந்துட்டு போகுது... அதனால உங்க பருப்பு இங்க வேகாது அண்ணே....!!! 'பெரியார் முழக்கம்' ஐடியா ஒர்க் அவுட் ஆகல... வேற ஏதாவது பெட்டரா டிரை பண்ணுங்க... வேணும்னான் நானே லீடு எடுத்து தரட்டுமா? 'பிராமணர்களின் மீதான (அதி)அசுரர்களின் காழ்ப்புணர்ச்சி'.....!!!
ஏகாந்தநம்பி
‘தமிழ்த் தேசிய இனத்திலோ, மலையாள தேசிய இனத்திலோ ” ....தமிழகளை தனி தேசிய இனமாக ஒப்புக்கொண்டதற்கு கட்டுரையாளர் திரு.அதிஅசுரன் அவர்களுக்கு நன்றி.இனியாவது இல்லாத திராவிட இனத்தை தூக்கிப்பிடிக்கவேண்டாம்.
பேனாமனோகரன்
அதி அசுரனையும், பொன்ராஜையும் வழிமொழிகிறேன்."இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று பாடத்தான் தோன்றுகிறது.
iniyan
சமஸ்க்ருதத்தை தங்கள் சாதி மொழியாகக் கொண்ட - தமிழ் மொழியை "நீச" பாஷை என்று இழிவாக நோக்கும் - தமிழர்களை "சூத்திரர்கள்" - "பஞ்சமர்கள்" என்ற குறியீடுகளின் கீழ் பல சாதிகளால் பிரித்து - தங்களை மிக்க உயர்ந்த சாதியாகக் கருதி "பூதேவர்களாக" வலம் வரும் பார்ப்பனர்கள் என்ற ஆரியர்கள் அல்லாத தமிழர்கள் அனைவரையும் "திராவிடர்கள்" என்று பெரியார் அழைத்தார். இந்தியா முழுதும் வாழும் சாதியால் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - மக்கள் அனைவரும் ஆரியர் வருகைக்கு முன் தமிழ் பேசிய திராவிடத் தொல்குடி மக்களே என்று அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார். ஆகவே "இல்லாத திராவிட இனம்" என்று கூறுவது அறியாமை. தமிழர்களை வீழ்த்தியது சாதி பிரிவினையையும் - சாதி இழிவையும் - சாதி தொழிலையும் புகுத்திய ஆரிய பார்ப்பனர்களின் மதமான இந்து மதமே அன்றி - "திராவிட" என்ற சொல் அல்ல. சங்க கால தமிழர் வாழ்வில் சாதிப் பிரிவினை மற்றும் இந்து மதம் முற்றிலும் இல்லை. மேலும் தமிழ் மொழியோடு வட மொழியை கலந்து புது மொழிகளை உருவாக்கி இந்தியா முழுதும் சிந்து சம வெளி தொடங்கி பேசப் பட்ட தமிழ் மொழியை ஒழித்து - தமிழ் பேசப்படும் நிலத்தை குறுகச் செய்ததும் ஆரியப் பார்ப்பனர்கள்தான். "திராவிடர்" என்ற சொல் "தமிழர்" என்ற சொல்லின் வடமொழி வடிவம். பார்ப்பனரல்லாத அனைத்து தமிழரையும் குறிக்கவே திராவிடர் என்ற சொல்லை பெரியார் பயன்படுத்தினார். தமிழர்களை சாதிகளால் பிரித்து அடிமைப்படுத்திய பார்ப்பன எதிர்ப்பு - இந்து மத எதிர்ப்பு - சாதி ஒழிப்பு இன்றி தமிழ்த் தேசியம் ஒன்றும் சாதிக்க முடியாது. பார்ப்பனர்களையும் - சாதியையும் - சுயச் சாதிப் பற்றாளர்களையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியத்தால் யாதொரு பயனுமில்லை.
suseela
அய்யா இன்னும் எத்தனை காலம்தான் பார்ப்பனர், பார்ப்பனர் என்று கதைத்துக்கொண்டிருக்கப்போகிறீர்கள்? கே. சி.தாமஸ், பரமேஸ்வரன் மட்டுமா மலையாளி தேசிய இனத்தவர்கள்? அச்சுதானந்தன், உம்மன் சாண்டி எல்லாம் கூட மலையாள தேசிய இனம்தானே? இவர்கள் சொல்வது பார்ப்பனியமா அல்லது வேறு எந்த ஈயம்? உங்களுக்கு எதிராகச் சொல்லிவிட்டால் அவன் பார்ப்பானா இல்லையா என்று பார்த்து இப்படி அறிவியலுக்கு விரோதமாக இனவாதம் பேசுவோரே... ஆழியார், பரம்பிக்குளம் கால்வாய்களை, கம்பம் லோயர் கேம்ப் மின் திட்டத்தை நமக்கு கொடுத்த இ.எம். எஸ். கூட பிறப்பால் பார்ப்பனர் தான் தெரியுமா நண்பர்களே? நெய்வேலி எனும் மாபெரும் கொடை நமக்குக் கிடைத்ததே பி. ராமமூர்த்தி எனும் சாதி உணர்வே சிறிதும் இல்லாத ஆனால் பிறப்பால் பார்ப்பனரால் தான் என்பதும் உங்களுக்கு தெரியுமா தோழர்களே? இரண்டகம் செய்பவன் எந்தப் பிரிவிலும் இருப்பான். வீணான இந்தப் பார்ப்பனர் எதிர்ப்பில் குளிர் காயும் அரசியலை அறிவார்ந்த சமூகம் இனியேனும் நிறுத்திக்கொண்டு ஆக்கப்பூர்வப் பணிகளை நாம் எல்லோரும் இணைந்து மேற்கொள்வோம். நியாயம் என்றால் அனைவரும் கூடிடுவோம். அதேநேரம் மாற்றுக் கருத்துக்கும் மதிப்பளிப்பதே ஜனநாயகம்.
R Nagaraj
///இரண்டகம் செய்பவன் எந்தப் பிரிவிலும் இருப்பான். வீணான இந்தப் பார்ப்பனர் எதிர்ப்பில் குளிர் காயும் அரசியலை அறிவார்ந்த சமூகம் இனியேனும் நிறுத்திக்கொண்டு ஆக்கப்பூர்வப் பணிகளை நாம் எல்லோரும் இணைந்து மேற்கொள்வோம்.////
ஏங்க... அதெல்லாம் தமிழ்நாட்டில் முடியாதுங்க.. இப்படிப் பேசித்தான ஒரு அரசியல்..... அதுவும் முற்போககு அரசியல் நடந்துட்டு இருக்கு... அந்த ” சந்தை”யை எப்படி விட முடியும் ...விசயம் புரியாம பேசாதிங்க....
இராமியா
சுசீலா அம்மையீர் அவர்களே! இராஜாஜி குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த போது அவரைத் தனது ஜன்ம விரோதியாகச் சித்தரித்துக் கொண்ட, சாதி உணர்வு இல்லாத, பி.இராமமூர்த்தி அத்திட்டத்தை எதிர்க்காமல் மௌனம் சாதித்தார். நீங்கள் கூறுவது போல ஒவ்வவொரு பிரச்சினையின் போதும் பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றி உரசி ஆராய்வது சரியான அணுகுமுறை அல்ல. அதற்கு சரியான உரைகல் இது தான். மிக அதிகமான அறிவுத் திறன் முதல் மிகக் குறைந்த அறிவுத் திறன் வரை உடையவர்கள் பார்ப்பனர்களிலும், சூத்திரர்களிலும், பஞ்சமர்களிலும், கிருத்தவர்களிலும், இஸ்லாமியர்களிலும் இன்னும் மனிதர்களை எந்தப் பிரிவாகப பிரித்தாலும் அத்தனைப் பிரிவுகளிலும் உண்டு. பொதுவாக அறிவுத் திறன் அதிகம் உடையவர்கள் அதிகாரம் உள்ள, ஊதியம் மிகுந்த, உடலுழைப்பு தேவைப் படாத வேலைகளில் அமர்த்தப் படுவார்கள். மிகக் குறைந்த அறிவுத் திறன் கொண்டோர் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடுபட வேண்டி யிருக்கும். ஆனால் பார்ப்பனர்களில் உள்ள அறிவுத் திறன் மிகக் குறைந்தோரும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளையே செய்கிறார்கள். இதனால் அப்படிப்பட்ட கீழ் நிலை வேலைகளை ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள அறிவுத் திறன் மிகுந்தோர் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள அறிவுத் திறன் மிகுந்தோர் கீழ் நிலை வேலைகளைச் செய்ய நேரிடுவதால் மனித வளம் வீணாகிறது. அறிவுத் திறன் மிகக் குறைந்த பார்ப்பனர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளையே செய்வதால் நிர்வாகம் சீர்கெட்டு தேச முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. இது கொடூரமான தேசத் துரோகம். இப்படிப்பட்ட தேசத் துரோகச் செயல்கள் நடைபெறாமல் தடுத்து அறிவுத் திறன் குறைந்த பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப முடியாத படியான செயல் திட்டங்க‌ளைக் கொண்டு வருவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அப்படிப் பட்ட செயல் திட்டத்தை ஆதரிக்காதவர்களைத் தேசத் துரோகிகள் என்று எளிதாக அடையாளம் காணவும் முடியும். அப்படிப்பட்ட தேசத் துரோகிகள் உயர்நிலை வேலைகள் மறுக்கப்படுவது மட்டுமன்றி தேசத் துரோகச் செயலுக்காக மிகக் கடுமையான தண்டனைகளும் அளிக்கப்பட வேண்டும்.சரி தானே சுசீலா அம்மையீர் அவர்களே.
ம பொன்ராஜ்
தோழி சுசீலா சொல்வது உண்மை தான்... அது 'பார்ப்பனியம்' என்ற சொல்லாடலில் வந்திருக்க வேண்டும். பெரும்பாலான அதிகார பீடங்களில் அமர்ந்திருப்பவர்கள் பார்பனர்களே (அவர்கள் எப்படி அந்த நிலையை அடைந்தார்கள் என்ற தர்க்கம் இப்போது வேண்டாம்). எனவே இங்கு 'பார்ப்பனியத்துக்கு' எதிரான கருத்து என்பது பொதுவாக 'பார்ப்பனர்களுக்கு' எதிராகவே பார்க்கபடுவதன் தோற்றப் பிழையை தோழி சுசீலாவின் கருத்தின் மூலம் அறியலாம். இருப்பினும் அது தவறு தான்...!!! நிற்க. தோழி சுசீலா. Exceptions are not examples. இப்போது நீங்களே சொல்லுங்கள்...!!! இந்து ராமின் தமிழர்களின் மீதான வன்மத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்? அந்த பதத்தையே இனி வரும் காலத்தில் பயன் படுத்தி கொள்கிறேன்...!!!
குமார்
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஒட்டுண்ணிகளை சகிப்பது ? தமிழா உனக்கு ரோஷமே இல்லையா ?
குமார்
suseela
இந்து ராம் கருத்து பார்ப்பனத் திமிர் என்றால் சமூகத்திலுள்ள பார்ப்பனர்களில் எத்தனையோ பேர் தமிழகத்தின் நியாயமான உரிமை சரியானதுதான் என எண்ணுபவர்கள் இருக்கவே செய்வர். அவர்களின் உணர்வை ஏன் பார்ப்பன உயர்மதி எனச் சொல்லவதில்லை? நிற்க.. இப்படித்தான் தனி ஈழம் தீர்வல்ல என நீண்ட காலம் முதலாகச் சொல்லிவரும் மார்க்சிஸ்ட் கட்சியினரை பார்ப்பனத் தலைமைக்கு அடிமையான தமிழ் துரோகிகள் என்றனர். இன்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை பார்ப்பனர் வசம் இல்லை. இப்போதும் தனி ஈழம் தீர்வல்ல என்றுதான் சொல்கிறார்கள். இப்போது இதனைப் பார்ப்பனச் சாயம் பூசி பழி கூறுவது நின்றிருக்கிறது. அதாவது, ஒரே கருத்தை பிறப்பால் பார்பனர் சொன்னால் அது பார்ப்பனத் திமிர். அதையே வேறொருவர் சொன்னால் அதற்கு வேறு வியாக்கியானம். இந்த இரட்டை அணுகுமுறைதான் அறிவுடைமை ஆகாது என்கிறேன். சமஸ்கிருதம் தான் சிறந்த மொழி, தேவ பாசை என்று ஒரு பார்ப்பனர் சொன்னால் அது பார்ப்பனத்தனம். நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பார்ப்பனர் எனும் இனக்குழு மக்கள் அவர்களின் நலம் சாராத பிற பொது விடயங்களில் மாற்றுக்கருத்து சொன்னால் அதற்கு ஜனநாயகத்தில் உரிமை இருந்தும், அந்தக் கருத்தோடு முரண்படுவோர் அறிவுப்பூர்வமாக விவாதம் நடத்த முயலாமல் சட்டென்று அதற்கு பார்ப்பன முத்திரை குத்தி அத்தோடு முடித்துக்கொள்வது எப்படி சரியாகும்? விவாதிக்க திராணி இல்லாதவர்கள் செயலல்லவா? நம்மிடம் அறிவார்ந்த பதில் இருக்கும் பட்சத்தில் எதற்கு சாதியைப் பேசி அத்தோடு ஊத்தி மூடவேண்டும்? கருத்தால் மோதுவதே நம்மையும் வளர்க்கும், பார்ப்பனர்களின் பழமைக் கருத்துக்களை அவர்களும் உணரச் செய்யும். மனித இனம் ஒரே புள்ளியில்தான் தோன்றி இருக்கிறது. அது காலகாலமாக பல்வேறு திசைகளில் நகர்ந்து சூழல், தட்ப-வெப்பம் காரணமாக நிறங்கள் மாறி, இனங்களாக பிரிந்திருக்கிறது. இந்த அறிவியல் உண்மையும் இன்றைய மனிதனின் எல்லா அணுகுமுறைக்கும் வழிகாட்ட வேண்டும். வரலாற்றின் தவறுகளுக்கு நிச்சயமாக நாம் பரிகாரம் செய்யவேண்டும். அதே சமயம், புதிய அறிவார்ந்த திசையிலும் நாம் பயணம் தொடங்க வேண்டும். இதில் முதலாவது பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினரால் இந்த சமூகத்தில் உண்டாகிவிட்ட ஏற்றத் தாழ்வுகளைச் சரிசெய்வது. பின்னது, பார்ப்பனர் உள்ளிட்ட மனித சாதியினருடைய ஒற்றுமையைக் கட்டி உலக வாழ்வை அறிவார்ந்த திசையில் நகர்த்துவது. நம் எல்லோருக்கும் இந்த இரண்டு கடமை உண்டு. அறிவோமா?
பெரியார் தி க
இது மிக நீண்ட சுமார் 2000 ஆண்டு காலத்து வரலாறு. மிக மிக மேலோட்டமாக சுசீலா அவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளருக்கோ, அல்லது வேறெந்த மாநில மார்க்ஸிஸ்ட் செயலாளருக்கோ தனிப்பட்ட முறையில் என்ன அதிகாரம் இருக்கிறது? அகில இந்திய பொலிட் பீரோதானே அங்கு அனைத்தையும் முடிவு செய்யும்? அந்த பொலிட் பீரோவில் இன்னும் பார்ப்பன ஆதிக்கம்தான் உள்ளது. வேறு எந்த சிக்கலிலும், வேறு எந்த சாதியையும் எப்போதும் நாங்கள் ஜாதியைச் சொல்லி அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் ஆரியப் பார்ப்பனர்களை மட்டும் அவர்களது ஆதிக்கநிலை கருதி அவர்களை அம்பலப்படுத்துகிறோம். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு புரட்சியிலும் அந்த நாட்டின் ஆதிக்க சக்திகளை அடையாளப்படுத்தித்தான் புரட்சிகள் தொடங்கும். இந்தியாவுக்கு தற்போது தேவை ஒரு ஆரிய எதிர்ப்பு திராவிடர் பண்பாட்டுப் புரட்சி. திராவிடர்களுக்கு எதிரான ஆரியப் பார்ப்பனர்களை அம்பலப்படுத்துவதையும் வேறுபடுத்திக் காட்டுவதையும் எங்கள் கடமையாகவும், உழைக்கும் மக்களின் விடுதலைக்கு உரிய முக்கியப் பணியாகவும் செய்கிறோம். இது புத்தர் காலத்திலிருந்து நடந்துவரும் ஆரிய எதிர்ப்புப் பணி. இது வீணான வேலை என்றால் புத்தர், ஜோதிபாபூலே, அம்பேத்கார், சாகுமகராஜ், பெரியார் போன்ற எங்கள் இனத் தலைவர்கள் அனைவரும் செய்த பணிகள் வீணானவையா? என்ன செய்வது இது போன்ற வீணான வேலைகளால்தான் குலத்தொழில்களை பார்த்துக்கொண்டிருந்த எமது இனம் அவற்றை விட்டொழித்து கணினியிலும், நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளிலும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றது.

தமிழர்களின் எதிர் இனம் பார்ப்பன இனம். எங்களுக்கும் மலையாளிகளுக்கும் உள்ள மோதல் நட்புமுரண்பாடு. பார்ப்பானுக்கும் தமிழர்களுக்கும் உள்ள சிக்கல் பகைமுரண்பாடு. மலையாளிகளும் நாங்களும், கன்னடர்களும் நாங்களும், வங்காளிகளும் நாங்களும், மராட்டியர்களும் நாங்களும் மோதிக்கொள்ளலாம். முரண்பட்டுக்கொள்ளலாம். இது அண்ணன் தம்பி சண்டை போன்றதுதான். இந்த சண்டைகளை உருவாக்கி குளிர்காய்ந்து அதனால் பலன் பெறும் இனம் பார்ப்பன இனம். தமிழ்நாட்டில் அய்யர், அய்யங்கார், சாஸ்த்திரி, கேரளாவில் நம்பூதிரி, வங்காளத்தில் முகர்ஜி, டெல்லியில் சர்மா, ஆந்திராவில் ராவ், மராட்டியத்தில் சித்பவன், காஷ்மீரில் பண்டிட் என ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு வடிவங்களில் அவதாரம் எடுத்து ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் சுரண்டிக்கொழுக்கும் இனம் ஆரியப் பார்ப்பன இனம். ஒட்டு மொத்த இந்தியா முழுவதிலுமுள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் எதிரி ஆரிய பார்ப்பன இனம். அவர்களை அம்பலப்படுத்தும் பணியை அனைவரும் தொடருவோம்.
இராமியா
சுசீலா அம்மையார் "இந்த சமூகத்தில் உண்டாகிவிட்ட ஏற்றத் தாழ்வுகளைச் சரிசெய்வது. பின்னது, பார்ப்பனர் உள்ளிட்ட மனித சாதியினருடைய ஒற்றுமையைக் கட்டி உலக வாழ்வை அறிவார்ந்த திசையில் நகர்த்துவது. நம் எல்லோருக்கும் இந்த இரண்டு கடமை உண்டு. அறிவோமா?" என்று கூறியுள்ளார். சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைச் சரி செய்ய, பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைத் தடுக்கும் முறையை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்வதால் காலியாகும் உயர்நிலைப் பணிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகளை அமர்த்த வேண்டும். இதற்கான வழிமுறைகளைப் பற்றிப் பேசாமல் வேறு எதை எதையோ பேசுகிறீர்களே! திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர்களை உயர்நிலைக்கும், திறமை இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலைக்கும் கொண்டு செல்லும் இன்றைய முறையை ஒழித்துக் கட்டி விட்டு அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலைகளிலும் இருக்க முடியும் படியான வழி முறைகளைச் சொல்லுங்கள். பார்ப்பனர், பாரப்பனர் அல்லாதார் என்ற பிரச்சினை முடிவுக்கு வந்து விடும். இப்பொழுது திறமையில்லாத பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளச் செய்வதால் ஏற்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மறைந்து விடும்.
suseela
சகோதரர் சொல்லும் கருத்தில் எனக்கு ஒரு வகையில் உடன்பாடு உண்டு. அதாவது பார்ப்பன ஆதிக்கம் என்பதுதான் சாதியத்தை இங்கே வேரூன்றச் செய்தது என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனால் அது எந்தச் சமூக அமைப்பில் சாத்தியமாகிற்று? நிலஉடைமைச் சமூகத்தில். அதாவது பேரரசுகளின் எழுச்சிக்கு இசைவாய் பிராமணிய தத்துவம் இருந்ததால். அதாவது, பேரரசுகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்த அதற்கு ஒரு தத்துவார்த்த ஆயுதம் தேவைப்பட்டபோது ஏற்கனவே இங்கு இருந்த சிந்தனைகளின் போதாமை அதற்கு உதவவில்லை. அதாவது, இன்றைய உலகமய சூழலில் அந்நிய முதலீடுகளின் வருகைக்கு இங்கிருக்கும் பழைய குறுகிய சாலைகளின் போதாமை காரணமாக நால் வழி, ஆறு வழிச் சாலைகள் தேவைப்படுவதுபோல. இன்று, நில உடைமைச் சமூகம் முற்றிலும் ஒரு அழிவைச் சந்திக்காமலேயே முதலாளித்துவ சமூகம் எழுந்துவரும் நிலைதான் இன்றைய இந்திய நிலை. அதனாலேயும் இன்றைய முதளித்துவத்துக்கு பிராமணிய கருத்தியல் தேவைப்படுகிறது. அதனாலேயே அது இன்றளவும் ஜீவித்திருக்கிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட சில பல பிராமணர்கள் பயனடையலாம். ஆனால் இதன் காரணமாகவே ஒட்டுமொத்த பிராமண சமூகத்தையும் எதிரியாகப் பாவிக்கவேண்டிய அவசியம் என்ன? நான் ஏற்கனவே சொன்ன இரண்டு அணுகுமுறைகளை வேறு விதமாகவும் சொல்ல முயற்சிக்கிறேன். தந்தை பெரியார் நேசித்த ஒரு அபூர்வ ஆளுமை ராஜாஜி. கொள்கை என்று வரும்போது நேர் எதிரிடையாக இருந்த பெரியார் எதற்காக ராஜாஜியின் மரணத்தின்போது கதறி அழவேண்டும்? இவர்கள் இருவரிடையே நிலவிய நட்பை இவ்விருவர் தவிர வேறு எவரால் முழுமையாக விளக்கிட முடியும்? "உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" எனும் மொழி இத்தகைய நடப்புக்குச் சொன்னதுதானே? இல்லை என்று உங்கள் வசதிக்கு இந்த நட்பைக் குறைத்துச் சொல்வீர்கள் ஆயின் பெரியார் எதற்காக ராஜாஜி மீது இத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார்? வர்ணாசிரமத்தில் நம்பிக்கை வைத்திருந்த ஒரு பார்ப்பனரே வேறு விதத்தில் நம்பிக்கைக்கு உரிய ஒருவராக வெளிப்பட இயலும் என்று பெரியாரின் வாழ்வியலே நிரூபித்துவிட்ட பின்னர் அவர் பெயரில் இயங்கும் மற்றவர்க்கு இது புரியாமல் போனதெப்படி? இந்த விடயத்தில் பெரியாரின்மீதே உங்களுக்கு அய்யமிருக்குமோ? இல்லையேல் இதுகுறித்த உங்கள் விளக்கம் என்ன? பாட்டாளிவர்க்கம் என்னைத் தன்வீட்டுப் பிள்ளையாக தத்தெடுத்துக்கொண்டு விட்டது எனப் பெருமையாக அறிவித்த ஈ.எம்.எஸ். எப்படி இன்னமும் பார்ப்பன எதிரி ஆவார்? பிறப்பின் அடிப்படையில் நீங்கள் இதைச் சொல்வதற்கும், வர்ணாசிரம அநீதிக்கும் என்ன வேறுபாடு? இரண்டுமே அறிவியலுக்குப் புறம்பானதல்லவா? மார்க்சிஸ்ட் கட்சியின் உயர் தலைமையில் பார்ப்பனர் இன்னமும் இருப்பதால் அது பார்ப்பனீய தன்மையுடன்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்வது வெறும் ஆரூடம் அன்றி வேறென்ன? உங்கள் கருத்துக்கள் எல்லாமே இந்த தேசத்து வர்க்க விரோதிகளுக்குத் தான் சாதகமாகும் என்பதை அறிவீர்களா? வர்க்க விரோதிகள் எனப்பட்டோர் தானே இங்கே வறுமையை நிலைப் பெறச் செய்பவர்கள்? அறியாமையை அகற்றத் தடையாக இருப்பவர்கள்? சாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகள் நீங்காமலிருப்பதால் பயனடைபவர்கள்? அடிப்படையில் பொருளாதார சமமின்மைதானே அத்துணை அசமத்துவங்களுக்கும் அடிப்படைக் காரணம்? (இல்லையென்றால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நாம் எதற்காக இட ஒதிக்கீடு கோரவேண்டும்?) இந்த சமமின்மைகளுக்கு பார்ப்பனீய சிந்தனைகள் தத்துவ பலத்தைக் கொடுப்பதால் மட்டுமே அது இங்கே நிலைபெற்று இருக்கிறது. வெறும் பார்ப்பனர்களால் மட்டுமே இதனை சாதித்துவிட இயலாது. மாறாக, ஆளும் வர்க்கத்துக்கு இந்த சிந்தனை பேருதவி புரிவதைத் தோழர்கள் உணர்க. இந்தப் புரிதலோடு பணியாற்றுகிற மார்க்சிஸ்ட்களை நீங்கள் எவ்வளவு அவதூறு செய்தாலும் பரவாயில்லை. ஆனால், அவர்களிடம் இருப்பது மார்க்சியம் எனும் அறிவியல் ஆயுதம். அதனைப் பிறப்பால் பார்ப்பனர் உள்ளிட்ட எந்த மனிதரும் தலைமை தாங்குவதால் மாற்றிவிட இயலாது. மேலும் அது ஒரு கூட்டுத் தலைமை. தனி ஒரு மனிதராக ஒன்றிரண்டு பார்ப்பனரோ அல்லது வேறொருவரோ தமக்குச் சாதகமான முடிவினை விவாதமின்றி எடுத்துவிட முடியாது. (பகுத்தறிவு பேசும் இயக்கத் தலைமைதான் பாரதீய ஜனதாவோடு பதவிக்காக சோரம் போனது. சமூக நீதி காத்த வீராங்கனை என்று புகழ்ந்த வாயாலேயே பாப்பாத்தி என்றும் சொன்னது. இவற்றுக்கு என்ன விளக்கம் அளித்தாலும் என்ன பயன்?) ஆனால், பிறப்பால் பார்ப்பனரே ஆனாலும் வேறு எவரானாலும் மார்க்சிஸ்ட் தலைமைதான் இந்த நாட்டின் ஏழை எளிய, சிறுபான்மை சமூக மக்களின் நலனுக்காக, பெண் சமத்துவத்துக்காக, மொழிகளின் சமத்துவத்துக்காக, தலித் மற்றும் மலைவாழ் மக்களின் நலனுக்காக, உள்நாட்டுத் தொழில் வளத்துக்காக, ஏகாதிபத்திய அச்சுறுத்தலுக்கு எதிராக... என்று பல்வேறு அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக களத்தில் நின்று சமர் செய்யும் இயக்கமாக முன்னிற்கிறது. பழம் பெருமை பேசி கனவுலகில் சஞ்சரிக்கும் இயக்கமல்ல அது. தனது கை விளக்காக அது முழுமையான அறிவியல் தத்துவமான மார்க்சியத்தைக் கொண்டிருக்கிறது. உலகின் வேறு எந்த இயக்கத்துக்கும் இதற்கு ஒப்பான தத்துவ வழித்துணை கிடையாது. இந்த உண்மைதான் எல்லோருக்கும் கசக்கிறது... என்ன செய்ய?
Ramea
"ஈஃப் யொஉ சன் நொட் சொன்வின்செ, தென் சொன்ஃபுசெ" என்று ஒரு ஆங்கில வாசகம் உண்டு. சுசீலா அம்மையார் அதைத் தான் செய்திருக்கிறார். 'பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைத் தடுக்கும் முறையை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்வதால் காலியாகும் உயர் நிலைப் பணிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகளை அமர்த்த வேண்டும்.' என்று கூறினால் அதற்கான செயல் திட்டத்தை வகுப்பது எப்படி என்பதைப் பற்றியும், அப்படிப்பட்ட செயல் திட்டத்தை ஆதரிக்காமல், திறமையற்றவர்கள் உயர் நிலைக்குச் செல்ல முடியக் கூடிய இன்றைய அமைப்பே தொடர மறைமுகமாகவோ நேரடியாகவோ வேலை செய்யும் தேசத் துரோகிகளைக் களையெடுப்பது பற்றியும் விவாதிக்காமல் வேறு எதை எதையோ பேசி இருக்கிறார்.

மார்க்ஸியத்தைப் பற்றியும் சமூக மாற்றத்தைப் பற்றியும் பேசும் அவர், பாரிஸ் கம்யூன் தோல்விக்கான காரணங்களில் மிக முக்கியமானது புரட்சியின் போது அ‌ரசுப் பொறியமைவு தகர்க்கப்படாமல் இருந்தது என்பதை நினைவில் கொள்வது நல்லது. இந்தியாவில் பார்ப்பன அதிக்கத்தை (பார்ப்பன அரசுப் பொறியமைவை) ஆணிவேர், பக்க வேர், சல்லி வேருடன் மட்டுமல்ல; தண்டு கிளை இலையோடு அழித்து ஒழிக்காமல் புரட்சி என்பது சாத்தியம் இல்லை. மீறி வலுக்கட்டாயமாகப் (மக்களை மூளை வெளுப்பு செய்து) புரட்சி திணிக்கப்பட்டால், பாரிஸ் கம்யூனை விட வெகு வேகமாக விழுந்து விடும். இதைத் தான் அண்ணல் அம்பேத்கர் சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது ‌என்று இரத்தினச் சுருக்மாகக் கூறினார்.

பெரியார் - இராஜாஜி நட்பைப் பற்றிப் பேசி இருக்கிறார். நாம் இங்கு சமூகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம். தனிப்பட்ட நடபைப் பற்றிப் பேசவில்லை. பெரியார் காந்தியாருடன் பார்ப்பனர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இராஜாஜியும் உடன் இருந்தார். அவர்களுடைய நட்பைப் பற்றிக் காந்தியார் குறிப்பிட்ட போது சமூக நலன் பற்றிய விஷயத்தில் இராஜாஜியை நம்ப முடியாது என்று இராஜாஜியின் முன்னிலையிலேயே பெரியார் தெளிவாகக் கூறிவிட்டார். இது போன்ற தனிப்பட்ட விஷயங்களை, சமூக விஷயங்களுடன் சேர்த்துக் குழப்ப வேண்டாம்.

பார்ப்பன அரசுப் அரசுப் பொறியமைவைத் தகர்க்காமல் புரட்சியை நகர்த்திச் செல்வது, தொண்டர்களை அநியாயமாகக் காவு வாங்கி விடும் எனும் போது, அதைப் பற்றிய செயல் திட்டம் மார்க்ஸிஸ்ட் கட்சியிடம் இல்லை என்றால் அக்கட்சி பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பில் தான் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

"பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைத் தடுக்கும் முறையை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்வதால் காலியாகும் உயர்நிலைப் பணிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகளை அமர்த்த வேண்டும்" எனும் சிந்தனை நிச்சயமாக முதலாளி வர்க்கத்திற்கு எதிரானது தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் நிலைப் பணிகளில் வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை எற்படுத்தினால் அவர்களுக்குக் கல்வியைக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும். அவ்விதம் செய்யும் பொழுது அது இலவசக் கல்வியால் தான் முடியும். அப்பொழுது முதலாளிகளின் முதலீடு தளம் சுருங்கும். அதாவது முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி மேலும் இறுகும். வேறு வழி இன்றி நாடு சோஷலிசத்தின் பக்கம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இது எடுத்துக் காட்டிற்கு மட்டுமே. பார்ப்பன ஆதிக்கத்தை ஈவு இரக்கமின்றி ஒழித்தே தீருவது என்ற திசையில் நாம் பயணித்தாலே போதும். அதன் சங்கிலித் தொடராக இறுதியில் சோஷலிச சமூக மாற்றத்திற்குச் சென்று விடும். இவ்வழியில் அம்மையார் சுட்டிக் காட்டும் திராவிட இயக்கப் போர்வையில் மறைந்து கொண்டுள்ள துரோகிகளும் வெந்து சாம்பலாகி விடுவார்கள்.
அதி அசுரன்
சசீலா அவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பனர்களுக்காகவும், மார்க்ஸியத்திற்காகவும் வாதாடுகிறார். இது தான் இந்தியாவில் மார்க்சியத்தின் நிலை. தனிப்பட்ட முறையில் நாங்கள் எந்தப் பார்ப்பனருக்கும் எதிரிகள் அல்ல. இந்த இனத்தின் ஒட்டுமொத்த எதிரிகள் பார்ப்பனர்கள். அது கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருந்தாலும் நம்பூதிரிபாட் என்ற தன் ஜாதி அடையாளத்தைக்கூட தூக்கி எறிய முடியாத புரட்சியாளர்களாகத்தான் இருந்துள்ளார்கள். இராமமுர்த்தி அவர்கள் கூட இடஒதுக்கீட்டுக கொள்கையில் எதிராக இருந்தது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மார்க்சிஸிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதால்தான் அக்கட்சியின் நிலைப்பாடுகளும் பார்ப்பனியத்தை வழிமொழிகின்றன. கடந்த சில வருடங்களாகத்தான் மார்க்சிஸ்ட்கள் சாதி வாரி இடஒதுக்கீட்டையே ஒத்துக்கொள்கிறார்கள். 1980 களில் இடஒதுக்கீட்டை எதிர்த்து பூணூலிஸ்ட்டுகள் எழுதிய கட்டுரைகளம் அதற்கான பெரியார் பார்வையிலான பதில்களும் தனிப் புத்தகமாகவே வெளிவந்துள்ளன. அதன் பெயர் மார்க்சியமா? பெரியாரியமா? திருச்சி பெரியார் மையம் இந்த நூலைவெளியிட்டது. அதில் மார்க்சிஸ்ட்களின் பார்ப்பனப் பார்வை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திண்டுக்கல் அறிவுப்பண்ணை அந்தப் புத்தகத்தை மறுபதிப்பு செய்துள்ளது. உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை ஆயுதம் மார்க்சியம் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த மார்க்சியம் இந்தியாவில் பார்ப்பனர் பிடியில் இருப்பதால்தான் சரியான இலக்குநோக்கி பயணிக்காமல் இருக்கிறது.

தீண்டாமைஒழிப்பு என்ற தளத்தில் தற்போது மார்க்சிஸ்ட்டுகளுடன் இணைந்து நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். அதற்காக சி.பி.எம் மைப் பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அதே சி.பி.எம் ஜாதி ஒழிப்புக்காக அதற்கு அடிப்படைக் காரணமான இந்து மதத்தையும், பகவத் கீதையையும், மனு தர்மத்தையும் எதிர்கக வேண்டும். அவற்றையும் அழிக்கும் நிலைக்கு வர வேண்டும். ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்? பார்ப்பனர் பிடியில் இருப்பதால்தான் பெரியாரைப் போல, அம்பேத்காரைப் போல மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவிக்க முடியாமல் உள்ளது.

மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் முதற்கட்டமாக பெரியாரியம் இங்கு வெற்றிபெற வேண்டும். அதன்பிறகு தான் மார்சியத்துக்கு வேலை. பொது உரிமைக் களத்தில் மக்கள் வென்ற பிறகே பொது உடைமைப் போராட்டம் வெல்லும்.

இந்து மதத்திற்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான புத்த மதத்திலேயே இணைந்து அந்த மதத்தையே அழித்த நாகார்ச்சுனா, சங்கமித்திரர், ஆச்சாரிய புத்ததத்தர், கணதாசர், வேணுதாசர், போதி தருமர், தருமபாலர், ஆச்சாரிய திக்நாகர், ஆச்சாரிய தருமபாலர், தம்மபாலர் போன்ற பார்ப்பனர்களையும் நாங்கள் அறிவோம்.

எவ்வளவுதான் புரட்சி, தத்துவங்கள் பேசினாலும் நடைமுறையில் ஆதிக்கக் காரியத்தில் கண் வைக்கும் ஆரியப் பார்வை பார்ப்பனர்களுக்கு மாறியதே இல்லை.

இராஜாஜியுடன் ஆழ்ந்த நட்புகொண்டிருந்த பெரியார், அந்தப் பார்ப்பானுக்காக கண்ணீர் விட்ட பெரியார், அவரைத் தன் இயக்கத்திலோ தனிப்பட்ட அறக்கட்டளையிலோ எதிலும் இணைத்துக்கொள்ளவில்லை. தன் இயக்கத்தில் பார்ப்பனர்களை இணைத்துக்கொள்ளவே இல்லை.

தமிழர்கள் அனைவரும் அவரவர் குலத் தொழிலையே பார்க்கவேண்டும். படிக்கக்கூடாது என்று குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தார் அந்த பார்ப்பான் இராஜாஜி. அந்தத் திட்டத்தை ஒழிப்பதற்காக அக்கிரகாரத்தைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். பெரியாரின் போராட்டத்துக்குப் பயந்து தனது முதலமைச்சர் பதவியிலிருந்தே ஓடியவர் பார்ப்பன இராஜகோபாலாச்சாரி. எந்த நட்புக்காக கண்ணீர் விட்டாரோ அதே பார்ப்பானைத்தான் பதவியிலிருந்தே விரட்டி, கல்விக்கண் திறக்க, பச்சைத் தமிழன் காமராசர் முதலமைச்சராக வழிவைத்தார் பெரியார்.

பார்ப்பனர்களை இன எதிரியாகத்தான் இறுதிவரை பெரியார் வைத்திருந்தார். அந்தப் பார்வையில்தான் எந்தப் பார்ப்பனரையும் நாங்கள் பார்க்கமுடியும். இது சரியா தவறா என்றால், எங்களைப் பொறுத்தவரை இந்த அணுகுமுறைதான் எங்களுக்கு வெற்றிகளைக் கொடுத்துள்ளது. எனவே சரி அல்லது தவறு என்ற விவாதத்திற்குள் நாங்கள் வரவில்லை. பார்ப்பனர்களை அடையாளப்படுத்தி இனங்கண்டு எதிர்க்கும் முறையே எமது தேவை. அதுவே எமது ஆயுதம்.
நரேந்திரன்
@சுசீலா: உங்கள் மார்க்கிசியக் கட்சி அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்படுகிறது என்றால், முல்லைப் பெரியாறு சிக்கலில் ஏன் கேரள‌ மார்க்சியக் கட்சியின் நிலைப்பாட்டை ஏன் உங்கள் போலிட் பீரோ கண்டிக்கவில்லை? இது இரட்டை வேடமல்லவா? அறிவியல் பூர்வமாக அணையை ஆராய்ந்தவர்களின் முடிவை ஏற்க உங்கள் கட்சி தயங்குவதேன்?கேரளாவில் நீங்கள் அறிவுபூர்வமாக செயல்படுவதென்றால் உச்சநீதிமன்றத் தீர்ப்பையல்லவா செயல்படுத்த வேண்டும்? முல்லைப் பெரியாறு சிக்கலில் ஒரு தேசியக் கட்சியாக மார்க்சியக் கட்சியின் நிலைப்பாடு என்ன? இந்த விடயத்தில் காங்கிரஸ், பாசகவிற்கும் மார்க்சியக் கட்சிக்கும் என்ன வேறுபாடு?
இராமியா
அதி அசுரன் அவர்களே! மார்க்ஸிஸ்ட் கட்சியினரை அவர்களுடைய தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்காக, பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளீர்கள். இங்கு நாம் சறுக்கி விழுகிறோம். பார்ப்பன ஆதிக்கப் பி‌டிப்பைத் தகர்க்காமல் தீண்டாமை ஒழிப்பு சாத்தியமே இல்லை எனும் போது மாரக்ஸிஸ்ட் கட்சியினரின் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம், திசை திருப்பும் செயலே. முரண்பாடுகளின் மோதல்களினால் வளர்ச்சி ஏற்படுகிறது என்று கூறும் மார்க்ஸிய தத்துவத்தில், முரண்பாடுகளின் முதன்மையான அம்சத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டு உள்ளது. சாதியக் கொடுமைகளைப் பொறுத்த மட்டில் பார்ப்பன ஆதிக்கம் தான் முதல் அம்சம். பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் ஆக்கிரமித்து உள்ள உயர் நிலை வேலைகளில் இருந்து அவர்களை நீக்கி விட்டு, அவ்வேலைகளைப் பிற்படுத்தப் பட்டோருக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் பகிர்ந்து கொடுத்தால் அவர்களிடையே உள்ள மோதல்களின் கூர்மை மழுங்க ஆரம்பித்து விடும். தொடர்ந்து அப்படிப்பட்ட நவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பிற்படுத்தப் பட்டோருக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் இடையே உள்ள மோதல்கள் மறையவும் செய்யும். மேலும் பார்ப்பனர்கள் ஒற்றுமையாக இருந்து கொண்டு மற்றவர்களைச் சுரண்டும் வாய்ப்பு குறைந்து அவர்களுக்குள்ளும் மோதல்கள் ஏற்படும். அதாவது இப்போது சாதிப் பகைமைகள் முன்னணியில் இருக்கும் நிலை மாறி வர்க்கப் பகைமைகள் முன்னணிக்கு வரும். வர்க்கப் பகைமைகள் முன்னணிக்கு வந்தால் தான் வர்க்கப் புரட்சிக்கான போரை முன்னெடுக்க முடியும். முதலாளித்துவத்திற்கு இச்சமூகத்தில் செய்து முடிக்க வேண்டிய பணி இன்னும் இருக்கிறது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மார்க்ஸிஸ்ட் கட்சி எப்படி வர்க்கப் போரை முன்னணிக்குக் கொண்டு வரும் வேலையைச் செய்யும்? அதுவும் தங்கள் உயிரினும் மேலான பார்ப்பன நலன்களுக்கு எதிராக, தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முயலும்? அவர்கள் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதே, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பை நிரந்தரப் படுத்துவதற்கும் அதன் மூலம் இந்திய முதலாளிகளுக்குச் சேவை செய்வதற்கும் தான். ஆகவே அதை நாம் பாராட்ட வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல; உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் நமது கடமையாகும். இங்கு "இந்திய கம்யூனிஸ்டுகள் இந்திய முதலாளிகளின் சரியான ஏவல் நாய்கள்" என்று மாவோ கூறியதை நினைவு கூர்வதும் சாலப் பொருந்தும்
suseela
இப்படி அரைகுறை அறிதலோடும், புரிதலோடும் முதலாளித்துவம் எனும் வலிமை வாய்ந்த கல்மலையை எவராலும் லேசாக அசைக்கக்கூட இயலாது. அதற்கு நில உடைமைச் சமூகத்தின் அறநெறி விழுமியங்களும் இன்னமும் தோள் கொடுக்கின்றன. இந்த நில உடைமை விழுமியங்களைத்தான் பார்ப்பனியம் என்கிறீர்கள்... இந்த தேசத்தில் வர்ணாசிரம-பிராமணிய சிந்தனைதான் நில உடைமை விழுமியமாகும். நன்றாக கவனித்தால் அதுவே நமது ஒரே எதிரி அல்ல என்பது விளங்கும். நம் வர்க்க எதிரியின் தத்துவ ஆயுதமே அது. நில உடைமையும், அதன் அடுத்த கட்டமான முதலாளித்துவமும் தன் சுவடினைக்கூடப் பதிக்காத ஆதி நாளில் நம் தமிழ் நிலத்தில் கடவுள் நம்பிக்கை, நிறுவனமயமான மதம், அது பரப்பிடும் (மூட) நம்பிக்கைகள் என எதுவுமே இல்லை என்பதில் எந்தவித வியப்போ, பெருமையோ இல்லை. இது தமிழனின் சிறப்பு என்பதில்லை. உலகம் முழுவதும் இந்த அனுபவக் காலக் கட்டத்தைக் கடந்துதான் வந்திருக்கிறது. இதுதான் அறிவியல். நீங்கள் பேசுவது வெறும் உணர்ச்சி. தயை கூர்ந்து மார்க்சியத்தை கருத்தூன்றிப் பயிலுங்கள். அதையும் கூட நீங்கள் வெறுமென மதிப்பதாகக் கூறிக்கொள்வது ஒருவகை பக்திதான். அது கவைக்கு உதவாது. இந்தத் தமிழ் பக்தி, பெரியார் பக்தி, (நீங்கள் காட்டும்) மார்க்சிய பக்தி இவை எதுவும் இங்கே எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடாது. மார்க்சியத்தை ஆழ்ந்து படித்துப் புரிந்துகொள்ளாத தன்மைதான் உங்களிடம் வெளிப்படுகிறது. என்னை மன்னியுங்கள், என் நேரத்தை வீணடிக்க இணயும் என்னால் இயலாது. வணக்கம்.
Nellai Kumaran
தமிழத்தில் பயன் அற்ற சில கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை கேரளா மாநிலத்திற்கு நாடு கடத்துவோம். அதனால் இவர்களின் ஆதரவோடு கேரளா எதிர்க்கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

கூட்டாட்சி தத்துவம் மற்றும் சமஷ்டி ஆட்சி முறையை பழக்கும் "தோழர்கள்" இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். இந்த "தோழர்கள்" (MLAs ) அங்கு அமைச்சர் ஆவதற்கும் வாய்ப்பு உண்டு.
இராமியா
வணக்கம் கூறிச் சென்று விட்ட சுசீலா அம்மையாருக்காக, இப்பின்னூட்டத்தை எழுதவில்லை. பிரச்சினைகளின் வேர்களை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாமல், பார்ப்பனர்கள் தந்திரமாக நம்மை இழுத்துக் கொண்டு போகும் திசையிலேயே வழி தவறிச் செல்லும் நம் மக்களுக்காக எழுதுகிறேன். இப்படைப்பின் பின்னூட்டங்களைக் கவனித்துப் பாருங்கள். எந்த ஒரு சாதியினரிலும் திறமைக் குறைவானவர்கள் இருப்பது போல பார்ப்பனர்களிலும் திறமைக் குறைவானவர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரக் கூடாது என்பதில் பார்ப்பனர்கள் மிக மிக.....மிக உறுதியான கவனத்துடன் இருப்பது தெரியும். அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளைச் செய்வதைப் பற்றி நாம் ‌எவ்வித வினாவை எழுப்புவதையும் அவர்கள் விரும்பவில்லை என்பதும் தெரியும். அப்படிப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வருமானால் அதற்கு விகிதாசார இடப் பங்கீடு முறை தான் சரியான தீர்வாக அமையும் என்பதும் தெரியும். அப்படி விகிதாசார இடப் பங்கீடு முறை நடைமுறைக்கு வந்து அது கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டால் பார்ப்பனர்கள் அவர்களுக்கு உரிய பங்கை மட்டும் தான் பெற முடியுமே ஒழிய, இப்பொழுது அனுபவிப்பது போல் கொள்ளை மடங்கு சுகங்களை அனுபவிக்க முடியாது. ஆகவே இப்பிரச்சினையைப் பற்றிப் பேசாமல் இருப்பது தான் பார்ப்பனர்களுக்கு நல்லது என்று வணக்கம் கூறி விடை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். 'பார்ப்பான் கிழக்கே போ என்று சொன்னால் நீ மேற்கே போ' என்ற பெரியாரின் அறிவுரையிலிருந்து, பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைச் செய்வதைத் தடுக்க வேண்டிய பணிகளைச் செய்வதே நம்முடைய தலையாய பணி என்று புரிந்து கொள்ள வேண்டும். இவ்வழியில் சென்றால் சுசீலா அம்மையார் சுட்டிக் காட்டியுள்ள நம்மிடையே உள்ள துரோகிகளின் சாயமும் வெளுத்து விடும். இவ்விஷயத்தபை் புரிந்து கொள்வதற்குச் சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமானது. மார்க்கசியம் போன்ற மிக உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டால், திறமைக் குறைவான பார்ப்பனர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைச் செய்வதைப் பாதுகாத்து அரவணைக்கும் பார்ப்னர்களைத் தேசத் துரோகிகள் என்று பிரகடனம் செய்து கொடூரமான தண்டனைகள் அளிக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றும். முதலில் சாதாரண மக்க‌ளே ஒன்று கூடுங்கள். திறமை அற்ற பார்ப்பனர்கள் உயர்நிலக்குச் செல்வதைத் தடுங்கள். மார்க்சியமும் கற்றுக் கொள்ளுங்கள். தேசத் துரோகப் பார்ப்பனர்களுக்குக் கொடூரமான தண்டனைகள் வழங்கவும் ஆயத்தமாகுங்கள்.‌
velan
அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு மிகுந்த வேலை என்று இவர் எதைக் குறிப்பிடுகிறார்? இந்தியாவில் தலித் மக்கள் பார்க்கும் வேலைகள் கீழ்தரமானவையாக ஒட்டுமொத்த சமூகத்தாலும் பார்க்கப்படுகிறது. (நண்பர் ஒரு தலித் அல்ல என்பது இவரது சொற்களிலிருந்து தெளிவாகிறது...) பார்ப்பனர்களை விடுங்கள். உயர் சாதித் தமிழர்களில் ஒரு வெள்ளாளரோ, செட்டியாரோ, முதலியாரோ குப்பை கூட்டவும், சாக்கடை அள்ளவும் வருவார்களா? ஏன், நண்பர் (ஆணா, பெண்ணை தெரியவில்லை) இராமியா வீட்டில் யாராவது இதற்க்கு தயாரா? சாதியத்தை எதிர்த்துப் பேச தலித்களுக்குத் தான் உரிமை உண்டு... மற்றெல்லாரும் பார்ப்பனீயவாதிகளே.... கொஞ்சம் வாயை அடையுங்கள்.
ravanan
dear velan,
what do you mean by dalits? paryar or pallar or arunthaiyar?
today, parayar intellectuals are in honeymoon with brahmins, and say that arunthathiyars are from telugu and not fit be equal to parayars.. because once upon time parayars were ruling class like brahmins. therefore they feel they are superior! make it clear.
இராமியா
வேலன் என்ற பெயரில் யாரோ ஒரு பார்ப்பனர் தன்னுடைய கோபத்தை இங்கு வெளிப்படுத்தி இருக்கிறார் என்று ஊகிக்க முடிகிறது. இதற்கு விளக்கம் கூறுவதன் மூலம் பார்ப்பனர்களின் மனதை மாற்றி விட முடியாது. ஏனெனில் இவ்விஷயங்கள் பார்ப்பனர்களுக்கு நன்றாகவே தெரியும். தங்கள் நலன்களைக் காத்துக் கொள்ளத்தான் மற்றவர்களைக் குழப்பும் விதத்தில் கருத்துக்களைப் பரப்புகிறார்கள். இருப்பினும் இது போன்ற நச்சுக் கருத்துக்கள் நம் மக்களிடையே பரவி இருப்பதால் இதற்கு விளக்கம் தருவது நல்லது தான்.

சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலை ஆதி ஆந்திரர்களுக்கும், உழவுத் தொழிலைத் தேவேந்திர வேளாளர்களுக்கும், செருப்பு தைக்கும் தொழிலை அருந்ததியர்களுக்கும் நெசவுத் தொழிலைத் தேவாங்கர்களுக்கும், செங்குந்தர்களுக்கும் இன்னும் ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒவ்வொரு தொழிலை நிர்ணயித்த பார்ப்பனர்கள் அதிகாரம் உடைய, மிகுந்த ஊதியம் கொண்ட, உடலுழைப்பு இல்லாத தொழில்களைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையேயே ‌தொழில்களை மாற்றிக் கொள்ள முடியாத படி உறுதியான கட்டுக்கோப்புடன் சமூத்தைக் கட்டி விட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே தொழில்களை மாற்றச் சொல்லி, கருத்துக்களைப் பரப்புவது, பார்ப்பனச் சுரண்டல்களுக்கு எதிரான விசை, வலுவற்ற நிலையில் கூட ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவாகி விடக் கூடாது என்ற அதீத முன்னெச்சரிக்கையில் தான்.

அப்படி என்றால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் களைவதைப் பற்றி பேசக் கூடாது என்று பொருள் இல்லை. கடுகு போன இடத்தைத் தேடிக் கொண்டு பூசணிக் காய் உருண்டு போவதைக் காணாமல் இருந்து விடக் கூடாது. உண்மையான சமூக மாற்றம் வேண்டும் என்றால் முதலில் பார்ப்பன அதிக்கத்தை உருத் தெரியாமல் அழித்து ஒழிக்க வேண்டும். அப்படி பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, நாட்டு நடவடிக்ககைள் அனைத்தையும் எல்லா நிலைகளிலும் (எல்லா நிலைகளிலும் என்பதை நன்றாக கவனிக்கவும்) முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத சிறுபான்மை மக்கள் அவரவர்களுடைய மக்கள் தொகை விகிதப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் விகிதாசரா இடப் பங்கீட்டு முறையின் தத்துவம். அவ்வாறு ஒவ்வொரு வகுப்பினரும் தங்கள் மக்கட்தொகைக்கு ஏற்ற விகிதத்தில் எல்லா நிலைகளிலும் இருந்தால் எல்லோருடைய நலன்களும் பாதுகாக்கப்படுவது கண்காணிக்கப்படும். ஒரு வகுப்பார் இன்னொரு வகுப்பாருடைய உரிமைகளில் தலையிட முடியாது என்பதால் வகுப்புகளி‌‌‌ட‌ை‌‌ய‌ே‌ ‌ே‌மாதல்கள் இருக்காது. எல்லா வகுப்புகளிலும் எல்லா நி‌ல‌ை‌களிலும் மக்கள் இருப்பார்களாதலால் வர்க்க முரண்பாடு முன்னணிக்கு வரும்.
velan
அதிகாரம் குறைந்த, உடல் உழைப்பு மிகுந்த, ஊதியம் குறைந்த வேலையை பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாகவாவது எங்களை இன்னும் நசுக்கிவரும் வெள்ளாளர்களுக்குத் தரக்கூடாதோ? அப்படியென்றால் இராமியா யார் என்பது புரிந்துவிட்டது. செங்குந்தரெல்லாம் வாங்க. நீங்க நெசவு நெய்யுங்க, செட்டியாரெல்லாம் வாங்க, போய் வட்டிக்கு குடுத்து சுரண்டுங்க என்று எங்கேயும் யாரும் சாதி பிரிக்கவில்லை. சாதி பிரிக்கும் முன்னர் ஆதி திராவிடர், தேவேந்திர வேளாளர், சக்கிலியர் என்றெல்லாம் பெயர் வந்திருந்தால் நீங்கள் சொல்லும் பார்ப்பான் பிரிப்பதுக்கு முன்னமே சாதி இருந்ததாக ஆகுமே? பிறகு பார்ப்பனை நீங்கள் எப்படி பழித்துவிட்டு எங்களோடு மோத முடியும்? அது உங்க அரை குறை அறிவுக்கு புரியவில்லையே. போரில் தோற்ற எதிரி நாட்டு வீரர்கள், மக்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். நீங்கள் பேசும் மன்னராட்சிப் பெருமிதம் தந்த இழிவு இது. தொழில்கள் பெருகப் பெருக தொழில் சார் பிரிவினையும் பெருகி, அவை புதிய புதிய சாதிகளாக விரிந்தன. இதுதான் வரலாறு. இங்கே பார்ப்பான் வேலை இந்தப் பிரிவினைகளை விதி என்று தத்துவ நம்பிக்கையை மதத்தின் பெயரால், பூர்வ ஜென்மத்து பாவ புண்ணியத்தின் பெயரால் நிலை நிறுத்தவேண்டும் என்பதே. இதுவும் வர்க்க சமுதாயம் தான். இங்கே பார்ப்பனுடன் கை கோர்த்து ஆளும் வர்க்கமாக இருந்த சத்திரிய அரசர்களும், வைசிய பிரிவினரும். இதில் இம்மூன்று வர்ணமும் எஞ்சிய சூத்திர, பஞ்சம வர்ணங்களைச் சுரண்டின. இதுதான் இந்தியாவில் வர்க்க சமூகமாக நிலப் பிரபுத்துவ காலத்தில் கோலோச்சியது. தொழில் நசிவு வந்துவிடக் கூடாது என்று இவர்கள் கண்டுபிடித்த குறுக்கு வழி தான் சாதி கலப்பைத் தடுத்தது. இன்று பார்ப்பானோ, அரசனோ, படைத் தளபதியோ வைத்ததுதான் சட்டம் இல்லை. சுதந்திர நாட்டில் வாழுகிறோம். விழிப்புணர்வு மிக்கவர்களாக இருக்கிறோம். பெரியார் முன்மொழிந்தது தான் விகிதாசார முறை. அது சிறந்த தீர்வு தான். தலித்துகளாகிய நாங்களும் சட்டக் கல்வி பெற்றிருக்கிறோம். கொஞ்சம் தர்க்க ரீதியாக உங்களுக்கு சமமாகப் பேசினாலே இது பார்ப்பனர் குரல் என்கிறீர்களே? அறிவு உங்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மட்டும் தான் சொந்தமோ அய்யா? தவிரவும் பரமக்குடியில் எம்மவர் செத்தபோது எங்கே தொலைந்து போனீர்கள்? அட, எங்களை கொன்றதே ஆதிக்க சாதியாகிய நீங்கள் தானே? எங்கள் வாயில் மலத்தை திணித்துவிட்டு, எங்களை மூத்திரத்தை குடிக்க சொல்லிவிட்டு, எங்கள் பெண்களின் வயித்தில் உங்கள் பிள்ளைகளை சுமக்கவிட்டு, இதையெல்லாம் எங்கேயாவது உங்கள் சாதிக்காரனிடம் எங்களுக்காக கேள்வி கேட்டதுண்டா? எதுக்கய்யா வெட்டி பேச்சு? இப்பவும் இதை பார்ப்பனின் குரல் என்பீர்கள் என்றால் எங்களை பீ திங்க வைத்த செயலுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் இந்த முரண் தீராது, புரிந்துகொள்ளுங்கள். (இப்போது தான் நாங்கள் மாயாவதி செய்தது எத்தனை அறிவான ராஜ தந்திரம் என்பதை உணர்கிறோம். இந்தியாவிலேயே அங்கே தான் ஒரு தலித் பெண்ணின் ஆட்சி சாத்தியமாகியது. அங்கே பார்ப்பானும் எங்களுக்கு கீழே, நீங்களும் எங்களை மலம் தின்ன வைக்க முடியாது. புரியுதா உங்களுடையது வெறும் கபட நாடகம் என்று? )
rajan
பார்ப்பானை அடியாள படுதுத்தலில் ஏற்பட்ட (திராவிட)மடை மாற்றதினை முத்லில் சரி செய்வதிலிருதே
துவங்குகின்றது தமிழ் தேசிய எழுச்சியும் இந்து- இந்தியம் என்ற பார்பன சுரண்டல் எதிர்ப்பும்!!!!
இதை விட்டுவிட்டு பார்பானை நேரடியாக எதிர்க்கும்போது திராவிட கும்பல் நிச்சயம் காட்டிகொடுக்கும் வேலையை மட்டுமே செய்யும் தோழர்களே!!!
Ramea
Unavoidably I am on leave for one week. I will reply to the above points after one week. Thank you.
இராமியா
ஐயா வேலன் அவர்களே, பார்ப்பனர்கள் தொழில் அடிப்படையில் தான் வருணத்தைப் பிரித்தார்கள். வருணத்திற்குள் சாதிகள் பிரிக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குள்ளும் ஐயர், ஐயங்கார், மாத்வர் என சாதிகள் உண்டு. ஆனால் பாரப்பனர்களில் உள்ள எந்த சாதியினருமே திறமைக் குறைவாக இருந்தாலும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைப் பெற முடிகிறது. நீங்கள் குறிப்பிடும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எந்த சாதியிலும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். சிலர் உயர்நிலைப் பணிகளில் செல்ல முடிந்து இருக்கிறது என்றால், அதற்கு அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற மாபெரும் தலைவர்களின் தொண்டு தான் காரணம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் கொடுமைப் படுத்துவதற்கு எதிரான தங்களுடைய கோபம் முற்றிலும் நியாயமானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களும் மோதிக் கொள்வதானது இரு வகுப்பாருக்கும் தீமை பயக்கும். இது பார்ப்பனர்களின் மௌனமான சதிச் செயலே. பார்ப்பனர்களின் இச்சதித் திட்டத்திற்கு ஆளாகாமல் இருப்பது இரு வகுப்பாருக்கும் நல்லது. இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அடக்கி ஆள்வதாக நினைத்துக் கொள்ளும் மனோ நிலை அவர்களைப் பார்ப்பனர்களிடம் விரட்டி விடும். இது பார்ப்பனர்களின் பிரித்து ஆளும் சூழ்ச்சிக்கு இரையாவதில் தான் முடியும். திரு.வேலன், மாயாவதி அம்மையாரின் இராஜ தந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கீழ் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அவர் தயவு செய்து இச்செய்தியைப் படித்துப் பார்க்க வேண்டும். உத்தரப் பிரதேச மாநிலம் பிண்டகி கிராமத்தில் 5.2.2011 அன்று சிவம், ஹரிசங்கம், பவான் என்ற ஆதிக்க சாதியைச் (பார்ப்பனர்களா பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அயோக்கிய அறிவிலிகளா என்ற விவரம் தெரியவில்லை) சேர்ந்த இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பதினாறு வயதுப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதை எதிர்த்து அப்பெண் வலுவாகப் போராடி உள்ளார். அதனால் கோபம் அடைந்த அந்த மூன்று இளைஞர்களும் அப்பெண்ணின் காதையும் மூக்கையும் அறுத்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடக்கும் தாக்குதல்களைக் காவல் துறை அவ்வளவாகக் கண்டு கொள்ளாதாம். ஆனால் இச்சம்பவம் அதிகமான மக்களின் கவனத்தைக் கவர்ந்து விடவே, வேறு வழியின்றி இரண்டு நாட்கள் கழித்து 7.2.2011 அன்று அவ்விளைஞர்களைக் கைது செய்தார்களாம். கைது செய்யப்பட்ட உடன் அவர்களில் ஒருவன் தான் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் அவள் மறுத்ததால் கோபம் கொண்டு இவ்விதம் நடந்து கொண்டதாகவும் கூற, தாழ்தப்பட்ட பெண்ணின் மீது தாக்குதல் என்ற வழக்கு ஒருதலைக் காதல் வழக்காக மாற்றப்பட்டு விட்டதாம். செல்வி மாயவதி அவர்களால் இவ்வளவு நுணுக்கமாகக் கீழே இறங்கி இதில் நியாயம் வழங்க நேரம் இருக்குமா? காவல் நிலையங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் போதுமான அளவில் முக்கியமாக உயர்நிலைகளில் இடம் பெற்றிருந்தால் இத்தகைய அநியாயம் நடக்குமா? அதனால் தான் விகிதாசாரப் பங்கீட்டினால் தான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும் என்று கூறுகிறேன். அதற்கு மிக அவசியமான முந்தேவை பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் மட்டுமே இடம் பெறும் தற்போதைய சூழலை ஒழித்துக் கட்டி விட்டு விகிதாசாரப் பங்கீட்டு முறையைக் கொண்டு வருவது தான்.
Renjit Kumar Marthandam
Mr. Ravanan **** ****** ****** ******? It shows your wealthy given by Government under reservation policy. Another side Its a pathetic condition for Bramin. Even today Most of the Bramins are struggling to get one time food. Remember Every action there is always an equal reaction.
Ramea
Mr.Renjit Kumar, It is false propaganda that brahmins are struggling for one time food. If it is true why do those brahmins not come forward to undertake a work without power, with meagre wage and involving heavy physical lbour, while other community people are? How is it possible for 3% of the people to occupy more than 90% of the higher level jobs? Also please note that the reservation policy has not been implemented in its spirit.
ஆரியபவன் சரக்கு மாஸ்டர்
//அதனால் தான் விகிதாசாரப் பங்கீட்டினால் தான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும் என்று கூறுகிறேன்.//

3% பார்ப்பனர்களை 'சொகுசு' பதவிகளிலிருந்து விரட்டிவிட்டு 60% சாதி இந்துக்களை அங்கே உட்காரவைத்து 20% தலித்துகளுக்கு நியாயத்தை நிலை நிறுத்தப் போறீங்க.. செய்ங்க.. செய்ங்க..
Ramea
விகிதாசரப் பங்கீடு என்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பங்கு இல்லை என்று எப்படி நினைக்க முடிகிறது? இந்த சிண்டு முடியும் வேலை வேண்டாம் திருவாளர் ஆரியபவன் சரக்கு மாஸ்டர் அவர்களே. அதென்ன, பார்ப்பனர்கள் அவர்களுக்கு உரிய பங்கை விட அதிகமாகப் பெறக் கூடாது என்றால் அப்படி பற்றிக் கொண்டு வருகிறது?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.