இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் போராட்டம் சரியானதே. ஆனால் இது எந்த விதத்திலும் போதுமானதல்ல. ஈழப் பிரச்சினையில் மிக மிக..........மிகப் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கும் விருப்பத்திற்கும் எதிராக இந்திய அரசும், தமிழக அரசும் செயல்பட முடிந்தது என்றால் முடிவெடுக்கும் இடங்களில் மிக மிக அதிகமாகப் பார்ப்பனர்களும், அவர்களை எதிர்க்கப் போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையிலும், பார்ப்பனர்களிடம் ஆசைக்காகவும், அச்சத்திலும் சோரம் போகும் நிலையில் மற்றவர்கள் இருந்ததும் தான் காரணம்.
இந்நிலை தான் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலை மாறாமல் எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளும் பாத்திரத்தில் உள்ள ஓட்டையை அடைக்காமல் பாத்திரத்தை நிரப்ப முயல்வது போலத்தான். ஆகவே முதலில் பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் மக்கட் தொகையில் தங்களுடைய விகிதத்தை விட அதிகமாகப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாத படியாகச் செய்ய வேண்டும். இதே போல் தாழ் நிலைகளில் குறைந்த பட்சம் அவர்களுடைய விகிதாசாரத்திற்குப் பிரதிநிதித்துவம் செய்வதில் இருந்து தப்ப முடியாத படியும் செய்ய வேண்டும். அதற்கான போராட்டத்தை முன்னெடுக்காமல், எடுக்கும் மற்ற நடவடிக்கைகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே முடியும்.