தொடர்புடைய படைப்புகள்

periyarr 350இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என்மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும் கூட, நான் அதற்கு அஞ்சவில்லை.  இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மானவாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள்.

சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் மனக்குறையின்றி, நிறைமனதுடன் அனுபவிப்பேன் - சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகின்றேன்.

- ‘குடிஅரசு’ (தமிழர் தலைவர் நூலிலிருந்து)

                            ***

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தோழர்களுக்கு வேண்டுகோள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ், கொரனா கால நெருக்கடிகளால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வெளிவரவில்லை. அக்டோபர் முதல் வாரத்திலிருந்து இதழ் மீண்டும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, சென்னை மாவட்ட தோழர்கள் மட்டும் கடந்த ஜனவரி மாதத்துக்கான சந்தாக்களை சேகரித்து அனுப்பியிருந்தனர். அந்த சந்தாக்களுக்கு ஓராண்டுகளுக்கான இதழ்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். 2021ஆம் ஆண்டுக்கான சந்தாக்களை சேர்க்கும் முயற்சிகளைத் தோழர்கள்  உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.    

- நிர்வாகி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.