periyar 550கல்லடியும் சொல்லடியும் பட்டு மூன்று மணிநேரம் தொண்டைகிழியப் பேசியும் எவ்வளவு பேர் என் கருத்தை ஏற்றார்கள் எனத் தெரியாமல் போகிறது. அதையே என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாவில் சொல்கிறார்.

மக்கள் காசு கொடுத்துச் சினிமா பார்த்து மகிழ்ச்சியாக இந்தக் கருத்துகளையெல்லாம் நன்கு தெரிந்து கொள்கிறார்கள். நான் நூறு கூட்டங்களுக்குப் போய் செய்யக் கூடியதை என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தின் மூலம் சாதித்து விடுகிறார்!

இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் நாடகத்துறையிலும், கலைத்துறையிலும், இசைத் துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தி இருக்கிறார்.

கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி ‘அன்னக் காவடி கிருஷ்ணன்’ ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும்!  (‘குடிஅரசு’ 11.11.1944)

வாழ்க கலைவாணர்! (கலைவாணர் பிறந்தநாள்: நவ-29)

‘விடுதலை’ 17.5.1957

- தந்தை பெரியார்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.