சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளை விலைக்கு வாங்குவோர் முன் பணம் கட்டிப் பதிவு செய்யும் நிகழ்வு 8.4.2012 இல் தொடங்குகிறது என்று கூறும் அந்த விளம்பரம், முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் குடியிருப்பு “பிராமணர்களுக்கு மட்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்து’ நாளேடும் இந்த விளம்பரத்தை அப்படியே வெளியிட்டுள்ளது. சூத்திரர்களோ, பஞ்சமர்களோ, இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ பணம் கொடுத்து வாங்க முன் வந்தாலும் அவர்களுக்கு “ஆத்துகள்” (வீடுகள்) வழங்கப்படமாட்டாது என்று இந்த விளம்பரம் கூறுகிறது.

சென்னையைச் சேர்ந்த இனியன் இளங்கோ என்ற வாசகர் இது குறித்து எழுதியுள்ள ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை ‘இந்து’ நாளேடு  ஜூன் 22 இதழில் வெளியிட்டுள்ளது. (அதாவது இந்த விளம்பரம் வெளிவந்த சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு)

“சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசியல் சட்டப் பிரிவின் 15 மற்றும் 17வது பிரிவுகளுக்கு இந்த விளம்பரம் எதிரானது. இப்படி பாகுபாடு காட்டப்படும் வர்த்தகமும், விளம்பரமும் தண்டனைக்குட்பட்டவை” என்று அக்கடிதத்தில் இனியன் இளங்கோ சுட்டிக்காட்டியிருந்தார். அந்தக் கடிதத்தை வெளியிட்டுவிட்டு, அதன் கீழே ‘ஆசிரியர் பதில்’ என்ற குறிப்பையும் ‘இந்து’ ஏடு வெளியிட்டுள்ளது.

“பாகுபாடு மற்றும் ஒதுக்குதல் என்ற கொள்கைகளுக்கு ‘இந்து’ ஏடு எதிரானது என்றும், சில நேரங்களில் இத்தகைய வருந்தக்கூடிய சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகின்றன என்றும், வந்த விளம்பரம் வெளிவந்தது எதிர்பாராமல் நடந்துவிட்ட ஒன்று” என்றும் சமாதானம் கூறியுள்ளது.

வாசகர் இனியன் இளங்கோ கடிதத்தை ‘இந்து’ வெளியிட மறுத்து, பிறகு, பத்திரிகை கண்காணிப்புக் குழுவுக்கு இது குறித்து அவர் புகார் செய்யவே, அதனடிப்படையில் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கட்ஜ், ‘இந்து’விடம் விளக்கம் கேட்டுள்ளார். அதன் பிறகே ‘இந்து’ 3 மாதம் கழித்து இந்தக் கடிதத்தையும் விளக்கத்தையும்  வெளியிட்டுள்ளதாக அறிகிறோம்.

அடுக்குமாடி குடியிருப்புகளைக்கூட அவாள் ‘ஆத்துக்களாக்கி’ அக்கிரகாரமாக்கிடவே பார்ப்பனர்கள் இப்போதும் கருதுகிறார்கள். மனுதர்மம் கூறும் நான்கு வர்ணங்களை பார்ப்பான் கைவிடத் தயாராக இல்லை என்பதால்தான் இப்போதும் “பிராமணன்” என்ற வர்ண அடையாளத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ‘சூத்திர’ வர்ணம் சாதிகளாக கூறுபட்டு அவர்கள் சாதி அடையாளத்தை ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால், அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி என்று சாதிகளால் கூறுபட்டாலும், “பிராமணன்” என்ற வர்ண அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதற்கான ‘காயத்ரி’ ஓதி பூணூல் போடுவதை கைவிடவும் பார்ப்பனர்கள் தயாராக இல்லை. இதைத்தான் “பிராமணர்களுக்கு மட்டும்” என்ற அறிவிப்பு பறைசாற்றுகிறது. ‘மனுநீதியே எங்கள் நீதி’ என்பது தானே இந்த அறிவிப்பின் நோக்கம்?

Comments

5 comments

5
அஞ்ஞாநி
தீமைகள் யாவும் ஒரே இடத்தில தங்குவதால் மற்றவர்களுக்கு நன்மையே. பல பார்ப்பன சாதியினர் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளட்டும். மற்ற மக்களுக்கு நிம்மதி.
VSARATHI
பார்ப்பபனர்கல் எப்போதும் திருந்த்த மாட்டார்கல்
Thamizharuvi.
Can RAM declared that THE HINDU will be sold only to Bramins ? Thamizh Peaple should avoid THE HINDU.
THAMIZHARUVI.
Where is Veeramani ?. Now he becoms an American at the grace of Thanthai Periyaar. Veeramani doing trade in education.It is prime duty of the Self Respect Movement to move the court against the senstive add.The D.K. caders lives in fools paradise. This is a pathetic condition of the Great 'Non Bramin Movement'.Racial discremination is an offence as per the Law. Pity, the HINDU news paper have no idea of the law of the country. Everything is going on wrong ways. Where are the Left Parties? They may think that this is not their issue.The intrest and Self Respect of the Thamzh Naadu Peaple are destroyed due to the ignerence and irresponsible behavier of the Political Parties.
seyed muhammaed
உருவாகும் பார்ப்பன சேரிக்கு எனது வாழ்த்துக்கள்;திராவிட இயக்க எழுச்சியால் கலகலத்துப்போன அக்கிகாரங்கள் பிற மனிதர்களின் குடியிருப்புகளில் புகுந்து கொண்டு தங்களை மறைத்து கொண்டிருந்தார்கள்;நாங்கள் நல்லவர்கள் என பம்மத்து கூறி கொண்டிருக்கிறார்கள்.சினிமாவும் தொலைக்காட்சியும் பார்ப்பனர்களின் கலாச்சாரத்தை உயர தூக்கி உச்சி மோர்கிறது.
ஆனால் திராவிட இயக்கங்கள் தோன்றிய தமிழகத்தில் ஒரு வரலாற்று பதிவு உண்டு;அது அக்கிரகாரங்கள் தனித்து திமிறிய காலங்களில் பிராமண ஆத்துக்களும் வீதிகளும் திராவிட இயக்கங்களை வளர்க்க உதவும் கதை களமானது.
குமஸ்தாவின் பெண்,ஓர் இரவு,தசாவதாரம் போன்ற எண்ணற்ற பிராமண முகவரிகள் சாமான்யர்களின் பார்வைக்கு வந்தன;பிராமணர்களே அரங்கேற்றங்களையும் மன்மதலீலைகளயும் உருவாக்கினார்கள்.அவன் அவள் அது என பிராமணம் ஊர் வலம் வந்தது.தமிழகம் திராவிடமானது.
திராவிடம் நீர்த்து போயிருக்கும் இக்கால சூழலில் மிக மிக அவசியம் மக்கள் மன மயக்கம் தீர்க்கும் சரியான மருத்துவம்;அதை பார்ப்பன சேரிகளால் தான் வழங்க முடியும்.
ஆதலால் தனித்து தோன்றும் பார்ப்பன சேரிகளை நான் வரவேற்கிறேன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.