‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11)

1919 - இந்திய சீர்திருத்த விஷயமாக நாயர் கொடுக்கப் போகும் சாட்சியமானது, மிக முக்கியமானது என்று கருத்தறிவித்த, சர். தாமஸ் பார்கோ என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் தூண்டுதலின்படி படுக்கையிலிருந்த நாயரிடம் சாட்சியம் வாங்க ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டியார் ஒரு சிறப்புக் கமிஷனை நிய மித்தனர். அந்தக் கமிஷன ஜூலை 18 இல் மருத்துவமனைக்கே சென்று சாட்சியம் பெற முடிவு செய்திருந்தது. எனினும் நாயரின் உடல்நிலை காரணமாக அன்று சாட்சியம் பெற முடிய வில்லை. நீரிழிவு மற்றும் நிமோனியா நோய் கடுமையாகி ஜூலை 19 அன்று காலை 5 மணியளவில் நாயர்முடிவு எய்தினார்.

அவரது உடல் லண்டனில் ‘கோல்டெர்ஸ் கிரீன்’ என்ற இடத்தில் எரிக்கப்பட்டு  ‘அஸ்தி’ சென்னைக்கு டாக்டர் ஏ.ஆர். மேனன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. ‘அஸ்தி’யைக் கண்டு, பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக ஆதிதிராவிடர்கள் தங்கள் தள நாயகன் முடிவெய்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது புரண்டார்கள்! கண்ணீர் உகுத்தார்கள்! நாயர் மறைந்த செய்தி கேட்டு பார்ப்பனர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்! திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்தனர். காஸ்மாபாலிடன் கிளப்பில் பார்ப்பன உயர்நீதி மன்ற நீதிபதிகளும், மற்றும் பெரும் பார்ப்பனப் புள்ளிகளும் மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்! இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள்!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.