ஒரு தனிமனிதனின் எதிர்காலத்திற்கு செய்யும் பெரிய பங்களிப்பு; புத்தகம் எழுதுவது, வாசிப்பது, வாங்கிச் சேர்ப்பது’ - மாக்ஸ் வெபர்

இப்போது மறுபடியும் கிளம்பியுள்ளது...’2012ல் உலகம் ஒரே நாளில் அழிந்து விடும்.ஆண்டவர் உலகைப் படைத்தது முதலே இத்தனாம் தேதி அழிந்து போக என தேதி குறிப்பிட்டுவிட்டார்.....கலி முத்தி விட்டது.: மதங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு மிகப் பெரிய பீதியை பற்றவைக்க - சகல அறிவியல் கண்டுபிடிப்பு - சாதனங்கள் வழியேயும் பிரசாரம் செய்கின்றன... உச்சக்கட்டமாக அழிவு முழு நீளப் படமாகி உள்ளது, தேசிய இனப்போர்... இலட்சியப் போராட்டங்கள், மக்கள் விடுதலை இயக்கங்கள் என அனைத்தையும் சேர்த்து கலி முத்திவிட்டது.... சாத்தான் கை ஓங்கி விட்டதுஎன புலம்புவது புதிதல்ல என்றாலும் தொழில்நுட்பம் இத்தனை உக்கிரமாக அரச அடக்குமுறையாளர்களால், மதவாதிகளால் இவ்வளவு தீவிரமாக பயன்படுத்தப்பட்டது கிடையாது... ராசிபலன் இணையதளங்கள் ஆயிரக்கணக்கானவர்களால் நிமிடந்தோறும் பயன்படுத்தப்படுகின்றன. கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் சாமி முன் செக்ஸ் லீலைகள் செய்துகொள்ள அப்பாவிப் பெண்கள் பலியாவது பராசக்திகாலத்திலிருந்தே தொடர்கிறது என்றாலும் அதை புளூடூத்தொழில்நுட்பம் வழியே பட்டித்தொட்டி தோறும் நேரடி ஒளிபரப்பு தரிசனம்செய்வது நமது கலாசார சீர்கேட்டின் உச்சக்கட்ட உதாரணம்.

இன்றைய இளைய சமுதாயத்தை மீட்டெடுக்கும் ஒரே வழி... சிந்தனையையும் பகுத்தறிவையும் தூண்டும் சிறந்த புத்தகங்களின் மீது அவர்களது கவனத்தை ஈர்ப்பது ஆகும்... அவர்களால் வாங்க முடிந்த ஒரு விலையில், அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் வாசிக்க முடிந்த ஒரு கையடக்க அளவில் புத்தகங்களால் ஒரு இயக்கம் நடத்தப்பட வேண்டியது அவசியம்.... புத்தகக் கண்காட்சி என்பது வெறும் வியாபாரம் அல்ல... மூடநம்பிக்கைகள், கலாசார சீரழிவு... என அழிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை தட்டியெழுப்பி அதன் அறிவியல், அரசியல் அடையாளத்தில் வலுவான எழுச்சிக்கு வழிகோலும் ஒரு முயற்சி. உலகம் அழியாதது.....மாற்றங்களுக்கு உட்படக்கூடியது என ஒளிமயமான எதிர்காலத்தைமுரசறிவிக்கும் செயல்பாடு புத்தக கண்காட்சி. அது பெருவெற்றியடைய வாழ்த்துகிறோம்!

Pin It