30 ஆண்டுகள் தமிழில் எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கி வந்த, ஏறத்தாழ 30 நூல்களை தமிழில் தந்திருக்கும் சிங்கராயர் என்னும் ஆளுமையை அறிமுகப்படுத்தும் மற்றும் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம் சென்னை டிஸ்கவரி புக் பேலசில் நடைபெற்றது. இக்கூட்டத்தை வெளி ரங்கராஜன் துவக்கி வைத்தார். மேலும் இக்கூட்டத்தில் பேரா. தங்கவேல் அரங்க குணசேகரன், அமரந்த்தா ஆகியோர் உரையாற்றினர். உடல்நிலை காரணமாக கோவை ஞானி கலந்து கொள்வில்லை என்றாலும் அவரின் கட்டுரையும், நிழல் பத்திரிகை ஆசிரியரான திருநாவுக்கரசு கட்டுரையும் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. இனி வருடா வருடம் சிங்கராயர் நினைவாக மொழிபெயர்ப்புக்கான விருது வழங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் சிங்கராயர் மனைவி ராஜத்தின் எதிர்காலத்திற்கு நிதி அளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
த.வே.நடராசன், மனை.எண். 27, 3வது தெரு,
ராஜேஸ்வரி நகர், தையூர் சாலை, கேளம்பாக்கம். 603 103
கைபேசி எண்: 9445125379
காசோலை / வரைவோலை மூலம் நிதியளிப்போர் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். பணம் அனுப்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் செலுத்தலாம்.
A/c No. 20000390136
D.V.NATARAJAN, (04308) - PBB, BESANT NAGAR,