மூத்து முதிர்ந்த எம்
மொழியின்மீது
மூர்க்கப் பாய்ச்சல்..

அழியாது ஒளிரும்
தமிழுடல் மீது
ஆரிய வாயின்
பகைக் கொடும்பற்கள்!

குருவிக் கூட்டைச் சிதைக்க
கொம்பேறும் குரங்காய் அதன்
கொடுஞ்செயல்!

மெய்யியல் வடித்து வாழ்ந்த
பொய்யழுகாத் தமிழினத்தின்
அறவாழ்வு வயிற்றுக்குள்
அழிநஞ்சைக் கலந்தது
ஆரியக் கொடுங்'கை'

களைச்செடிகளைப் பயிரெனப் பகரும்!
ஒப்புரவை எப்போதும்
ஒப்பாது பேசும்!

வெள்ளைச்சிலந்தி பின்னிய
கொள்ளை இந்திய வலையில் அமர்ந்து
கோலோச்சும் ஆரியம்
தமிழினத்தை
சிறுபூச்சி யாக்கிச்
செரிக்கப் பார்க்கிறது!

தின்றுசெரித்துவிட -தமிழினம்
திண்ணையி லூர்ந்திடும் பூச்சியல்ல!

ஆரியத்தை அதிரவைக்கும்
வரலாற்றுப் புரட்சியின் நீட்சி

தொல்காப்பியனுக்கு முன்பே
தோன்றிய மொழி எழுச்சி!

More articles by மூ.த.கவித்துவன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.