சீனாவின் தாய்வான் மாகாணத்தின் தலைநகரான தாய்பேய் நகரில் ஆளுநர் அலுவலகம், 29.10.2012 அன்று 2000க்கும் மேற்பட்ட தொழி லாளர்களின் முற்றுகைப் போராட்டத்தால் திணறியது. 

கடும்கோபத்துடன் சீறிய தொழிலாளர்கள், காவல் துறையினர் மீதும், ஆளுநர் அலுவலகம் மீதும் அழுகிய முட்டைகளை வீசித்தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொழிலாளர்களை ஆளுநர் அலுவலகத்தை நோக்கி முன்னேற விடாமல், பெருமளவிலான காவல்துறையினர் 300 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தினர். 

தாய்பேயின் தொழிலாளர் கட்சி, தாய்வான் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு ((Taiwan International Workers’ Association (TIWA), Raged Citizens Act Now உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் இணைந்து இப்போராட்டத்தினை நடத்தின. 

பெருநிறுவன முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக, உள்நாட்டுத் தொழிலாளர்களைப் புறக் கணித்துவிட்டு, அயல்நாடுகளிலிருந்து தொழிலா ளர்களை குறைந்த ஊதியத்திற்கு குடியமர்த்து வதற்காக சட்ட விதிகளை தாய்வான் அரசு மாற்றியதுதான் தொழிலாளர்கள் சீற்றம் கொள் வதற்கான முதன்மைக் காரணமாகும். 

உள்நாட்டுத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த பகுதியாக ஆதரவு வழங்கிய ஆளுநர் மா யிங் ஜியோ (Ma Ying-jeou) தலைமை யிலான தாய்பேய் மாகாண அமைச் சரவை, செலவுகளைக் குறைக்கும் வகையில், அயல் நாட்டுகளிலிருந்து தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு அமர்த்தும் வகையில் சட்ட விதிகளைத் திருத்தப் பரிந்துரை செய்தது. மேலும், உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு ஊதியமும், அயல்நாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு ஊதியமும் நிர்ணயிக்க முடிவு செய்தது.

அரசின் இம்முடிவு, ஏற்கெனவே குறைந்த கூலிப்பெற்றுக் கொண்டு, விலைவாசி உயர்வோடு போராடிக் கொண்டிருந்த உள்நாட்டுத் தொழிலாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தாய்பேய் நகரத் தொழிற் சங்கங் களின் கூட்டமைப்புத் தலைவர் சியாங் வான் சின், “அரசின் நடவடிக்கைகள் பெருநிறுவனங் களுக்கும் பணக்காரர்களுக்கும் சேவை செய்வ தோடு மட்டுமின்றி, அந்நிறுவனங்கள் உள் நாட்டுத் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு, அயல்நாட்டுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்த வழிசெய்கின்றது” என குற்றம் சாட்டினார்.

தாய்பேய் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

Pin It