மரபீனி ஆய்வு கூறுகிறது

கடந்த 26-9-2009 இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளேடுகளும் வெளியிட்டுள்ளன.

இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி (பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப் பட்டுள்ளது.

இப்படியொரு  உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைக் கூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராய்ச்சிப் பார்வையும் கெட்டுப் போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதலித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளன.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்க ராஜன் என்பவரும் அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென்இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களுடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

ஆனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது என்பது மீதான ஆய்வில் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமான வையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Comments

1 comment

1
கடுங்கோன் பாண்டியன்
இந்திர நாடு (இந்தியா) மட்டுமல்ல ஐயா பாவாணர் அவர்கள் சொன்னதுபோல உலகம் முழுவதுமே தமிழர்கள் ஆண்டார்கள்... கிரேக்கத்தின் பண்டைய கடவுள் ஆதென பள்ளா (அதென பல்ல) எனும் கிரேக்க அரசி ஆவாள். . அவள் கையில் ஒரு பறவை வைத்திருப்பாள்... அதை அவர்கள் ஆந்தை என்கிறார்கள்.. ஆனால் அது கிளி என்பதுவே உண்மை... ஆதென பள்ளா நம் பாண்டிய அரசி மீனாட்சியை ஒத்து போகிறாள்.. மேலும் ஆண்டு பாண்டியா 1, பாண்டியா 2 என இரு அரசர்கள் ஆண்டுள்ளனர் ... அவர்களில் பாண்டியா2 அரசனின் மகன்களில் ஒருவனின் பெயர் பள்ளா.. இவர்கள் எல்லோருக்கும் கடவுள் எனப்படும் சுஸ்( ழுஎச்) இடியின் கடவுள் எனவும் போர்க்கடவுள் எனவும் அழைக்கப்படுகிறான் ... இவன் நமது வேந்தன் இந்திரனை ஒத்துப் போகிறான் .. ஆக அங்குள்ள பள்ளர்களும் இங்குள்ள பள்ளர்களும் ஒருவரே ..அவர்கள் தமிழரே ... மேலும் சிலி நாட்டில் உள்ள ஒரு மொழி "கடலாடி" என்பது ...இது தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.. அம்மக்கள் அவர்களின் பெயருக்குப் பின்னால் பள்ளா என சேர்த்துக் கொள்கின்றனர் ... பிரேசிலில் தமிழோடு தொடர்புடைய ஒரு மொழி பேசும் மக்கள் வாழும் ஊரின் பெயர் மல்லா... மேலும் மகதப் பேரரசின் அரசர்கள் மள்ளர்களே...தமிழர்களே.. புத்தர் இந்தியாவின் மகத பேரரசின் மள்ளர் குடியிருப்பிலேதான் தனது இறுதி காலத்தை கழித்தார்.. இது மகத நாட்டின் வரலாற்றில் உள்ளது... நேபாளின் அரச வம்சம் மள்ளர் எனும் தமிழரே... இன்றும் அங்கு ஆண்டுதோறும் (நாம் இங்கு கொண்டாடும் (பேரூர் பட்டீஸ்வரர் நாற்று நடவு இந்திர விழா , ராமநாதபுரம் பொன்னேர் பூட்டுதல் , நாலேர் பூட்டுதல் போன்ற இந்திர விழாவின் எச்சங்கள்.) இந்திர விழ கொண்டாடுகின்றனர் .. அவர்கள் தங்களை தேவேந்திர மல்லா என இன்றும் அழைத்துக்கொள்கின்றனர்... குடும்பன் , குடும்பி , குர்மி, மல்லா, பள்ள போன்று ஏகப்பட்ட பெயரில் இந்தியா முழுவதும் பள்ளர்கள் தமிழர்கள் இன்றும் கலப்பின்றியே வாழ்ந்து வருகின்றனர் ... ஏன் பள்ளர்கள் மட்டுமே உள்ளனர் ..? மற்ற சாதிகள் எங்கே என்று கேட்டால்... 500 ௦ வருடங்களுக்குமுன் தமிழ் நாட்டிலேயே பல சாதிகள் கிடையாது... இன்றுள்ள பல சாதிகள் (குறுஞ்சி , முல்லை, பாளை நில மக்கள் தவிர்த்து ..) பள்ளர்களின் கிளைக்குடிகளே...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.