அமெரிக்காவில் இராகுல் காந்தியின் உரையும் பார்வையாளர்களின் கேள்விகளும் இராகுல்லின் பதில்களும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. இதில் தமிழர் எழுப்பிய கேள்வியின் சாரம் United Nations of India வாக இருக்க வேண்டும் எனும் அவா இருந்தது. அதாவது இத்துனணக் கண்டம் ஐரோப்பா போல் உள்ளது, ஆனால் இங்கு தற்போது ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற போக்கில் ஒன்றிய அரசு செயல்படுவதாக இருக்கின்றது என்று கேள்வியின் போக்கு அமைந்தது. இதற்கு இராகுலின் பதில் இந்திய அரசியல் அமைப்பில் Union of states என்று இருக்கின்றது. அனைத்து மொழிகளுக்கும் அவர்களின் பண்பாடு, வரலாறு, மொழி பாதுகாக்கப்படும் என்று உள்ளது என்ற பதிலுடன் தமிழ் மீது கூடுதல் கவனத்துடன் அவரது பதில் அமைந்தது.

விடுதலைக்கு முன்னும் பின்னும் காங்கிரசு அரசியல் இயக்கம் தான் மட்டுமே ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதமுடன் அரசியலில் இதன் நடவடிக்கைகளும் விளங்கியதே வரலாறு. இது இத்துணைக் கண்டத்தை இது நாள் வரை தீராத தலைவலியுடன் இருந்து வருவதற்கு காரணமாகி இரண்டு நாடுகள் உதயமாக இரண்டிலும் தேசிய இனங்கள் உரிமைகளற்ற மாநிலங்களாக காட்சியளிக்கின்றதே?. இதை உணர்ந்து கொள்ள இன்றைய BJPயின் நடவடிக்கை மாநில அரசியல் அமைப்புகளை சற்று விழிக்கச் செய்ததுடன் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மக்களில் அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்க உரையரங்கத்தில் கேள்விகளாக எழுந்தள்ளது. ஆனால் காங்கிரசு மரபில் வந்த இராகுல் காந்தி பதில் மழுப்பலாக உள்ளது.

மாநிலங்களுக்கான (தேசிய இனங்களுக்கான) அதிகாரமே இங்கு கேள்வியின் உள்ளடக்கமாக உள்ளபோது அரசியல் அமைப்பைக் காட்டி தப்பித்து கொள்கிறார் இராகுல். ஆனால் அரசியல் நிர்ணய சபையின் வரலாற்றைப் பார்க்கும் போது கடும் விவாதங்களும் அதிகார பரவல்களுக்கான உந்துதலும் இருந்த போது ஒன்றிய அரசிலே அனைத்து அதிகாரங்களையும் குவித்த கொண்டுள்ளது இன்றைய அரசியலமைப்பு. உச்சமாக ஒரு மாநிலத்தை இல்லாமல் செய்யுமளவு அதிகாரம் உள்ளது என்பதை காஷ்மீரம் விசயத்தில் தற்போதைய ஒன்றிய அரசு நிலை நிருத்தியுள்ளது. அதுமட்டுமா ! டெல்லி அரசு விவாகரத்தில் உச்சநீதி மன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்று கூறிய பின்பும் அவசர சட்ட மூலம் தனது அதிகார வரம்பை நீட்டும் பொழுதும் இதே இந்திய அரசியலமைப்பில் கூட்டாசிக்கு இடமுள்ளது என்பதை எந்த குடிமகனும் நம்ப மறுப்பான். காங்கிரசின் இந்திய தேசியமும் BJP யின் இந்துத்துவமும் உள்ளடக்கதில் அனைத்து தேசிய இனங்களின் சுயாட்சித் தன்மையை மறுப்பதே.

இந்நிலையில் அனைத்து எதிர்கட்சிகளும் காங்கிரசு உட்பட BJP யை எதிர்த்து ஒர் அணியில் கூடும் பொழுது தங்கள் மாநில உரிமைக்கு அச்சுறுத்தலாக BJP விளங்கி வருவதையே காட்டும் அதனது சர்வாதிகாரப் போகினை வெளிப்படுத்தும். ஆனால் அதமட்டும் போதாது. இந்திய அரசியலமைப்பு மாநிலங்களின் உரிமைகளை ஆங்கிலேயன் 1935ல் தனது நோக்கங்களுக்கு இசைந்தவாறு வடிவமைத்தான். இதையே இன்றைய அரசியல் அமைப்பு கொண்டுள்ளது. இதைமாற்ற எதிர்கட்சிகள் ஒன்றினையும் நடவடிக்கையில் பொது திட்டமாக கொள்ள வேண்டும், இதை காங்கிரசு ஏற்காது. இராகுல் முனைப்புடன் செயல்பட்டாலே அவர் ஒரு ஜனநாயக வாதி இல்லையேல் இவரும் வாயல் வடை சுடுபவரே.

எந்த ஒரு மொழியும் தனிப்பட்ட நபரால் காப்பாற்ற முடியாது. அது அதன் சமூக இயக்கப் போக்கில் அம்மக்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். ஏனென்றால் அவை அம்மக்கள் சமூகங்களால் வளர்த்தெடுக்கப் பட்டவையே வரலாறு. ஆக இவற்றை காக்க வளர்த்தெடுக்க அதிகாரங்கள் தேவை. அவற்றை ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் இந்திய அரசியல் அமைப்பில் இருபதாக காட்டுவது அயோகியத்தனத்தின் உச்சகட்டம். அரசியல் சிந்தனைகளில் முற்போக்குடன் இணைந்து எதிர்கட்சிகளின் கடமையாக மாநிலங்களின் தன்னாட்சி உரிமையே ஒரு குறைந்த பட்ச திட்டமாக முன் வைப்பது இவர்களின் கடமை. அப்போதான் இந்திய துணைக்கண்டம் அனைத்து தேசிய இனங்களின் கூட்டமைப்பாகும்.

- முத்துமுருகன்

Pin It