அலை கடலுக்கு அப்பால்
தமிழ் உறவுகளின்
அழுகுரல் கேட்கிறது.

இங்கு,
ஒலிபெருக்கிகளில்
தலைவர்களின்
உரத்த குரல் கேட்கிறது.

அழுகுரலை
அதிகம் கேட்பது
நானா? நீயா?

வெட்டிமன்றத்தில்
தலைவர்களின்
வீரம் வெளிப்படுகிறது!

நடுவர்களாகத்
தமிழ்நாட்டு
இளைஞர்கள்

நல்ல தீர்ப்பு
நாளை வரும்!

 

Pin It