வெளியே லேசான தூறல்
வீட்டுக்குள் பெருமழை
அம்மாவின் கண்ணீர்

தாத்தாவின் தழும்புகளுக்குள்
உறைந்திருக்கிறது
சிறுவயது விளையாட்டுகள்

ஏரியில் கட்டிய மணல்வீடு
கரைக்க வரவேயில்லை
மழை.

நல்ல வெயில்
வியர்வைத் துளிகளில்
ஒளிரும் சூரியன்.

அதிரும் தப்புச் சத்தம்
முறுக்கேறும் நரம்புகளில்
புது இரத்தம்

அய்..... பெரீய்ய நட்சத்திரம்
பௌர்ணமி நிலா பார்த்து
குதிக்கும் குழந்தை

தூரத்தில் இருட்டு
பின்னும் கால்களுக்கிடையில்
மின்மினி.

மயானத்திலிருந்து
வீடு திரும்புகையில்
வழியெங்கும் மலர்ப்பிணங்கள்

தோட்டத்து சில்வண்டு குரலுக்கு
பதில் சொல்லியது
பேசப் பழகும் குழந்தை

எரியாத அடுப்பு
சமையலறையிலிருந்து வெளிவருகையில்
கருகியிருந்தாள் அம்மா.

- மு.முருகேஷ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.