நோய்க் கூறு (Miasm) மிகுந்த நாட்பட்ட நோய்களில், நிரந்தரத் தீர்வு (Complete Cure) காண, ஹோமியோ பதியர்கள் கையாளும் மருத்துவச் சிகிச்சை முறைகளில் ஒன்றுதான் இந்த  உடலமைப்பு மருந்துச் சிகிச்சை (Constitution Treatment) முறையாகும்.  இந்த உடலமைப்பு மருந்து சிகிச்சை முறையில், ஹோமியோபதிக் கோட்பாடுகளுக்கு உட்பட்ட “ஒத்தக் குறிகளை உடைய மருந்து” (Similimum) என்ற அடிப்படையில்தான் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.  மேலும், இந்த மருந்துகளை, “உயர்ந்த வீரியங்களில்” மட்டும் தான் (1M வீரியத்திற்கும், அதிகமான வீரியங்களில்) நோயாளருக் குக்கொடுத்து, அவருக்கு “முழுமையான நலம்” ஏற்படுத்தப்படுகிறது.  மேலும் இந்த மருந்துகளைக் கொடுத்த,  அரை  மணி நேர அவகாசத்திற்குள்ளாகவே சிலவகை நோய்களில், நோய்க் குறிகள் மறைந்து, நோயாளர் முழுநலம் பெறுகிறார்.

பேராசான் ஹானிமன் கண்டு பிடித்த மூன்று நச்சுகளான, சோரா, சைக்கோசிஸ் மற்றும் சிபிலிஸ் ஆகிய நச்சுகள் புகுந்த நோயாளர்களின் “உடலமைப்பு” (Constitution) எப்படிப் பட்டதாய் இருக்கும் என்பதை சுருக்க மாகப் பார்ப்போம்.

சோரா நச்சு நோயாளர்களின் உடலமைப்பும், நோய்க்குறிகளும்

உடலில் நோய்த் தோன்ற அடிப் படைக் காரணம், தீய எண்ணங்களாகும்.  அதாவது, கோபம், பொறாமை, காமம், வஞ்சகம், பேராசை, வன்மம் போன்ற தீய எண்ணங்களின் விளைவாக, சருமத்தில் அரிப்பு, படை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.  இந்நோய்களை, அலோபதி மருத்துவம், “சிகிச்சை” என்ற பெயரில், உடலின் உள்ளே “அமுக்கி” விடுகின்றன.  இதனால், நமது உடலின் “உயிராற்றல்” (Vital Energy) மிகவும் பழுதுப்படுகிறது.

சோரா நச்சுவால், பாதிக்கப்படா தவர்கள் இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்றே கூறலாம்.  எல்லா “நாட்பட்ட நோய்களுக்கும்” (Chornic Diseases) அடிப்படைக் காரணமாக விளங்குவது, இந்த சோரா நச்சுதான்!

இந்த சோரா நச்சுவை நீக்காமல், எந்த நாட்பட்ட நோய்களையும் குணப் படுத்த முடியாது.  மற்ற நச்சுகளான சைக்கோசிஸ் மற்றும் சிபிலிஸ் நச்சுகள், தனியாக உடலில் தானேப் புகமுடியாது.  எனவே இவை, சோரா நச்சுடன் கூட்டுச்சேர்ந்து, உடலுக்குப் பல்வேறு சீர்கேடுகளை உண்டாக்கி, சிகிச்சை யளிக்கும் ஹோமியோபதி மருத்துவரை யும், குழப்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன.

மன அமைதியின்மை, அச்ச உணர்வு, மன உழைச்சல், கோழைத் தனம், பொறாமை புத்தி, வன்முறை உணர்வு, பதட்ட உணர்வு, வெறுப்பு உணர்வு, தன் நோய்க் குறித்த அதீத உணர்வு, சக்தியின்மை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க இயலாமை, அதீத காம உணர்வு, தலையின் முன் பாகத்தில் ஏற்படும் நிலையான தலைவலி, இளநரை, வழுக்கைத் தலை, தலைமுடி வறண்டு, கிக்குக் பிடித்து பிளந்து உடையும்.  பிரசவத்திற்குப் பின் முடி உதிருதல், தலைக்கு அதிக இரத்தம் பாய்தல், பல்வலியுடன் ஈறுகளில் இரத்தக் கசிவு, தலையில் அரிப்பு, பொடுகு, படை முதலியவைத் தோன்றுதல், தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், பற்களை நறநறவென்றுக் கடித்தல், பயங்கரமான குறட்டை, பயங்கரமான கனவுகள் தோன்றுதல், அதீத உறக்கம், தலை முடியை ஈரப்படுத்திக் கொண்டு சீப்பால சீவிக் கொள்ளுதல், வெப்பத் தைப் பொறுக்க இயலாமை. 

மூக்கிலிருந்து  இரத்தம் கசிதல், வெளிரிய முகம், சளி யுடன் மூக்கடைப்பு, மலச் சிக்கலும், வயிற்றில் பூச்சிகள் தோன்று தல், ஆசன வாயில் அரிப்பு, இரத்த மூலம், சீதபேதி, குறிப்பிட்ட காலங்களில் மட்டும் தோன்றும் சரும நோய்கள், பாதங்களில் மற்றும் உள்ளங்கைகளில் தோன்றும் ஆணி, மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலி, கல்லீரல் பாதிப்புகள், சோர்வு மன நிலை, மயக்கம், சோம்பல்தனம், ஆட்டுப்புழுக்கை போன்ற மலம், நகங்களில் பிளவு, நீரிழிவு நோய், மணங்களால் ஏற்படும் ஒவ்வாமை, ஒவ்வாமையால் ஏற்படும் தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, உணவின் மீது வெறுப்பு, தலைச்சுற்றல், வாயில் கசப்புத் தன்மை, செரிக்காத பண்டங் களின் மீது அதீத விருப்பம், மாமிசம், பால், கொழுப்புப் பொருட்கள் ஆகியவற்றின் மீது வெறுப்பு, அதிகமாக வியர்த்தல், துர்வாடையுடன் கூடிய வியர்வை, உமிழ்நீர் அதிகமாகச் சுரத்தல், அதீத வேலையின் காரணமாக ஏற்படும் பசியின்மை மற்றும் களைப்பு.

சைக்கோசிஸ் நச்சு நோயாளர்களின் உடலமைப்பும் மற்றும் நோய்க் குறிகளும்

மனிதனுக்கு அதீதக் கெடுதலை உண்டுப் பண்ணக்கூடியது.  இந்த சைக்கோசிஸ் நச்சுவாகும். இந்நச்சு மேகவெட்டை (Gonorrhoea) என்ற பால் வினை நோய், ஒருவன், முறையற்ற வகையில் தன் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் தீயச் செயல்களில் ஈடுபடும் போது ஏற்படுவதாகும்.  இந்நோயுடன் தோன்றி யதே, இந்த சைக்கோ சிஸ் நச்சுவாகும்.  இந் நச்சு பொதுவாக          இரத்தத்தையும் (Blood) மற்றும் சளிச்சவ்வு படலங்களையும் (Mucous Membrances) பாதிக் கிறது.              

இந்நச்சுவால் பாதிக்கப்பட்ட நோயா ளர்கள்,  தீய நடவடிக் கைகளில் ஈடுபடுகின்ற னர்; இதன் மூலம் மகிழ்ச்சியை அடை கின்றனர்.  தீய நண்பர்களுடன் உறவு கொள்கின் றனர். காமம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.  உதாரணத்துக்கு, இவர்கள் பாலியல் பலாத்காரங் களில் ஈடுபடுவர்.  இவர்களிடம் பல கீழ்த்தரமான எண்ணங்களும் மற்றும் உணர்வுகளும் குடிக் கொண்டிருக்கும்.  தனிமையை இவர்கள் விரும்ப மாட்டார்கள்.  மிகவும் சந்தேகப் பேர்வழிகள்.  எதிலும் திருப்தி அடையாதவர்கள். தன் மனைவி மற்றும் குழந்தைகளையும் அதிகம் சந்தேகிப்பர்.  தன் உயிர் நண்பர்களையும் நம்பமாட்டார்கள்.  எந்த முடிவை யும் தீர்மானமாக எடுக்க இயலாதவர்கள்.  சபல புத்தியுடையவர்கள்.  நினை வாற்றல் குறைந்தவர்கள். எப்போதும் பெயர்களை மறந்துவிடுவார்கள்.  சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளையும் கூட மறந்து விடுவார்கள்.  மதச் சடங்குகள் இவர்களுக்குப் பிடிக்காது.

பாதுகாப்பு உணர்வு அற்றவர்கள்.  எப்போதும் தனக்கு ஏற்பட்டுள்ள நோயைப் பற்றியே நினைப்பார்கள்.  தன் தவறுகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  எல்லாவற்றிலும் இரகசியம் காப்பார்கள்.  அதீத அச்ச உணர்வு உடைய வர்கள்.  நீதி, நியாயம் போன்றவைப் பற்றி சிறிதளவும் கவலைப் படாதவர்கள்.  பெரியவர்களை சிறிதள வும் மதிக்க மாட்டார்கள்.  இவர் களுக்கு எளிதில் ஆஸ்துமா நோய் ஏற்படும்.  இரத்த சோகையும் ஏற்படும்.  சிறுநீர் சம்பந்தப் பட்ட பாதிப்புகள் ஏற்ப டும் துர்ச்சதை வளர்ச்சிகள் உடலில் உண்டாகும் தலைவலி முன்பக்கமோ அல்லது பின்பக்கமோ ஏற்படும்.  தலைச்சுற்றல் மூளையின் அடிப்பாகத்தி லிருந்து உண்டாகும் ஓய்வின்போது வலி உணர்வுகள் அதிகரிக்கும். தலைவலி மூக்கிலிருந்து இரத்தம் கசிந்தால் தணியும்.  தலைமுடி துர்வாடை வீசும்.  இந்த வாடை மீன்களின் கவுச்சி வாடையை ஒத்திருக்கு

வலி வந்த இடத்தில் அழுத்தம் ஏற்படும் போது வலி தணியும.  மாமிசத்தை இவர்கள் விரும்பி உண்பதால் சிறுநீரில் யூரிக் அமிலம் அதிகமாகக் கலந்திருக் கும்.  கீல்வாத நோய் (Gout) உண்டாகும்.  குழந்தைகள் எப்பொ ழுதும் அழுதுக் கொண்டே இருப்பார் கள்.  காலரா நோய் எளிதில் இவர்களைப் பாதிக்கும்.  சீதபேதி உண்டாகும்.  மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு எந்த நேரத் திலும் ஏற்படும். 

இவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு வேகமாக வெளியேறும்.  கர்ப்பப்பைக் கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் போன்ற சதை வளர்ச்சிகள் இவர்களுக்கு எளிதில்  ஏற்படும். இந்நச்சு உண்டாக்கும் வயிற்றுப் போக்கால் இவர்கள் சிறிதளவும் மெலிய மாட்டார்கள்.  மழை மற்றும் குளிர்க் காலங்களில் நோய்க் குறிகள் அதிகரிக்கும்.  வலியுடன் கூடிய மாதவிடாய் ஏற்படும்.  மாதவிடாய் கருநிறத்தில் கட்டித் தட்டி வெளி யேறும்; இவை பிசின் போல இருக்கும்.

சிபிலிஸ் நச்சு நோயாளர்களின் உடலமைப்பும், நோய்க் குறிகளும்

இது, மேகக் கிரந்தி (Syphilis) என்ற பால்வினை நோயுடன் பிறந்த நச்சாகும்.  இது முறையற்ற பாலுறவு நடவடிக்கைகளால், “சிபிலிஸ்” என்ற பாக்டீரியா நோய்க் கிருமி தாக்கி, அதன் விளை வாக ஏற்பட்ட நச் சாகும்.  இதில், மூன்று நிலைகள் உண்டு. ஆரம்ப நிலையில் “புண்” மட்டுமே ஏற்படும். நோய் தொற்றிய சில நாட்களில், இரண்டாம் கட்ட மாக, “மைய நரம்பு மண்டலமும், கண்களும்” பாதிக்கப்படுகிறது.  பின் இந்த நோய் மறைந்து, மூன்றாம் கட்டமாக, “மறைந்த குறிகள், மீண்டும் தோன்றி”, கொடூரமான “நாட்பட்ட நோயாக” மாறு கிறது.  ஆனால், ஹோமியோபதி சிகிச்சையால் முழுநலம் உண்டாகுமே தவிர, அலோபதி சிகிச்சை போல், நாட்பட்ட நோயாக மாறி ஒருபோதும் துன்புறுத்தவதில்லை.

இந்நோயாளர்கள் மந்தமான மனநிலை உடையவர்கள்.  எண்ணங்கள் நிலையற்றும், முட்டாள்தனமாகவும் ஏற்படும்.  அழவேண்டிய தருணங்களில், இவர்கள் சிரிப்பார்கள்.  இதே போல, சிரிக்க வேண்டிய சமயங்களில் அழுவார் கள். அரக்க குணம் மிக்கவர் கள். இதை அவர்களின் செயல்கள் அனைத்தும் வெளிப்ப டுத்தும்.  இவர்க ளுக்கு, தற் கொலை எண்ணம் அடிக்கடி தலைத்தூக்கும். இதயநோய், பக்க வாதம், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், பார்வைக் குறைபாடுகள், தடு மாற்ற நடை, பரம் பரை நோய்த் தாக் கம் ஆகியவை ஏற்படும்.

தாய்க்கு ஏற்பட்ட, இந்நச்சுத் தாக்கத் தால், குழந்தை இறந்தே பிறக்கும் அல்லது ஊனங்களு டன் பிறக்கும்.  உடலின் உள்ளுருப்புகளில், இரப்பர் போன்ற கட்டிகள் ஏற்படும்.  இந்நச்சு இரத்தம், எலும்பு ஆகியவைகளை  அழிக்கும் தன்மை வாய்ந் தது.  “குழிப்புண்” ஏற்பட்டிருந்தால், அந்நோயாளர் சிபிலிஸ் நச்சுவால் பாதிக்கப்பட்டுள்ளார் என் பதை எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.  படுக்கைச் சூடு நோய்க்குறிகளை அதிகரிக்கும். வியர்வை பிசு பிசுப்புடன், அதிக அளவிலும், ஒட்டும் தன்மை யுடனும் மற்றும் துர்நாற்றத்துடனும் உண்டாக்கும்.

உடலிலுள்ள சுரப்பிகளில், வீக்கம் ஏற்பட் டுப் பின்னர் புண் உண்டாகும்.  புண்ணில் சீழ் கோர்த்தல், வெண்படலம் படிதல் போன்றவை உண்டாகும்.  நோயாளரின் மீது துர்வாடை வீசும்.  இது குளித்தாலும் மறையாது. இவர்கள் குளித்தா லும் அல்லது கைக் கழுவினாலும், பலமுறை கழுவி யும் திருப்தி அடைய மாட்டார்கள். காய்ச்சலின் போது, அதிகம் வியர்க்கும்.  ஆனால் காய்ச்சல் தணியாது.  மாமிசம் இவர்களுக்குப் பிடிக்காது.  ஆனால், பானங்களின் மீது அதீத விருப்பம் ஏற் படும்.  அடிக்கடி சரும நோய்கள் ஏற்ப டும்.  புண் களில் அரிப்பு ஏற்படாது.  மழை மற்றும் குளிர்க் காலங்களில், நோய்க்குறிகள் அதிகரிக்கும்.  கண் புருவங்களில் முடி உதிரும்.  வாயில் உலோகச் சுவை உண்டாகும்.  நகங்கள் இரப்பரைப் போல சுலப மாக வளையும்.  உடலில் புளித்த வாடை வீசும்.

பிறர் கூறும் உடலமைப்பு வகைகள் (Other Types of Constitution) :

பேராசான் ஹானிமன் விளக்கிய சோரா உடலமைப்பை, இன்றைய ஹோமியோபதியர்கள், “நைட்ரோஜினாய்டு உடலமைப்பு” என்றும், இதை சித்த மருத்துவர்கள், “கப (குளிர்ந்த) உடலமைப்பு” என்றும், சைக்கோசிஸ் உடலமைப்பை, இன்றைய ஹோமியோபதியர்கள், “ஹைட்ரோஜினாய்டு உடலமைப்பு” என்றும், இதை சித்த மருத்துவர்கள், “பித்த (வெப்ப) உடலமைப்பு” என்றும் மற்றும் சிபிலிஸ் உடலமைப்பை, இன்றைய ஹோமியோ பதியர்கள், “ஆக்சிஜினாய்டு உடலமைப்பு” என்றும், இதை சித்த மருத்துவர்கள், “வாத (வாயு)  உடலமைப்பு” என்றும் வேறு பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.

மொத்தக்குறிகள் (Totality of Symptoms) :

உடலமைப்பு மருந்துச் சிகிச்சையின் போது, ஒரு ஹோமியோபதி மருத்துவர், நோயாளர்கள் வெளிப்படுத்தும் மனக் குறிகள் (Mental Symptoms) மற்றும் உடற் குறிகள் (Physical Symptoms) அவர் வெளிப்படுத்தும் மன உணர்வுகள் (Sensations), நோய்க் குறிகள் எந்த நேரத்தில் தோன்றுகின்றன மற்றும் மறைகின்றன.  (Time Modality) மற்றும் பிற மாறுமைகளான (Other Modalities) நோய் எப்போதும்  அதிகரிக்கிறது மற்றும் குறைகிறது என்பது போன்ற மாறுமைகளையும், நோய் எந்த இடத்தில் (Location) தோன்றியுள்ளது மற்றும் முக்கிய நோய்க் குறிகளுடன், பிற நோய்க் குறிகள் (Concomittants) என்னென்ன ஏற்படுகின்றன போன்ற சகல விபரங் களையும், தன் “துயரர் ஆய்வின்”  போது  (Case Taking) அறிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நேரமாறுமைகள் (Time Modalities) :

இந்த நச்சுகளின் காரணமாக நோயாளர்களின் நோய்க் குறிகள் பின்வரும் நேரங்களில் மட்டுமே அதிகரிக்கின்றன.

சோரா நச்சு                            - சூரியன் தோன்றியதிலிருந்து, அது மறையும் நேரம் வரை.

சைக்கோசிஸ்                      -  பகல், இரவு எல்லா நேரங்களிலும் தொல்லை தரும்.

நச்சுசிபிலிஸ் நச்சு             -   சூரியன் மறைந்ததிலிருந்து,அது தோன்றும் நேரம் வரை.

மருந்தின் வீரியம் (Potency) :

ஒத்த குறிகளை உடைய உடலமைப்பு மருந்தின் வீரியத்தைத் தேர்ந்தெடுக்க, ஒரு ஹோமியோபதியர், நோயாளருக்கு ஏற்பட்டுள்ள நோயின் ஆற்றல் மற்றும் அவரது உயிராற்றல் ஆகியவை குறித்து தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும்.  அப்போதுதான், மருந்தின் ஆற்றல் அளவு, நோயின் ஆற்றல் அளவு மற்றும் அவரின் உயிராற்றல் ஆகியவற்றின் அளவை விட, அதிக அளவில் இருந்தால் தான், நோயைப் பூரணமாக குணப்படுத்த இயலும்.

சோரா நச்சைக் களையும் சில உடலமைப்பு மருந்துகள் (Psora Constitution Remedies) :

ஆர்சனிக் ஆல்பம், பாரிடா கார்பானிகம், கல்கேரியா கார்பானிகம், கிராஃபைடிஸ், ஹெப் பார் சல்பர், அயோடேட்டம், மெர்க்கூரியஸ் செலு புலிஸ், பாஸ்பரஸ், சோரினம், சிலிகா, சல்பர் மற்றும் டியூபர்குலினம்.

சைக்கோசிஸ் நச்சைக் களையும் சில உடலமைப்பு மருந்துகள் (Sycosis-Constitution Remedies) :

அபிஸ் மெல்லிபிகா, ஆர்சனிக் ஆல்பம், கல் கேரியா கார்பானிகம், கிராஃபைடிஸ், மெடோ ரினம், நேட்ரம் சல்பியூரிகம், நைட்ரிக் ஆசிட், பாஸ்பாரிக் ஆசிட், சபீனா, செலிsனியம், செபியா, தூஜா, ரஸ்டாக்ஸ் மற்றும் ஸ்டாபி சக்ரியா.

சிபிலிஸ் நச்சைக் களையும் சில உடலமைப்பு மருந்துகள் (Syphillis-Constitution Remedies) :

ஆர்சனிக் ஆல்பம், ஆரம் மெட்டாலிகம், மெர்க்கூரியஸ் செலுபுலிஸ், நைட்ரிக் ஆசிட், ஹெப்பார் சல்பர், சின்னாபரிஸ், தூஜா மற்றும் ஸ்டாபிசக்ரியா.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.