HYSTERIA AS A SOMATIZATION DISORDER

     இவ்வகை ஹிஸ்டீரியா மனநோய் என்பது, நோயாளர் தனது மனக்குறைகளை அச்ச மின்றி வெளிப்படுத்தாமல், அதைத் தங்கள் மனதுக்குள்ளாகவே ஆழப்புதைத்துக் கொள் வதால், அது உடலில் திடீரென வலிப்புத் தோன்றுதல், உணர்விழத்தல் போன்ற சில விநோதஅறிகுறிகளுடன் வெளிப்படுவதாகும். இதுவும் ஒரு வகை மனநோய் தான்! இந்த மனநோய் நோயாளரின் உடலில் நரம்புகளின் மூலம் வெளிப் படுவதாகும். அதாவது, மனதில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை நோயாள ரால் இயல்பாக வெளிப்படுத்த இயலாததால், அது மனநோயாக உருவெடுத்து, உடலில் நரம்புகளின் மூலம் வெளிப்படுவதாகும்.

     பெரும்பாலும் இந்நோயாளர்கள் சிறு வயதில் முறையான வளர்ப்பு முறைக்கு உட்படாத வர்களாக இருக்கின்றனர். இவர்கள் அதிக அளவில் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கின் றனர்.இவர்களிடம் மன உறுதி சிறுதுளியும் இல்லாததால் தான், தங்கள் மனம் கற்பனையாகக் காணும் போலி உணர்வுகளுக்கு அடிமைப்படு கின்றனர். இது, இவர்கள் உடலில் சில விநோத அறிகுறிகளாக நரம்புகளின் மூலம் வெளிப்படு கின்றன. இதை இவர்களால் சுயமாகக் கட்டுப் படுத்த இயலாது. இந்நோய்க்கு பெரும்பாலும்இளம்வயதுப் பெண்கள் தான் அதிகம் பலியாகின்றனர்.

     இவர்களை முழுமையாகக் குணப்படுத்த வேண்டுமென்றால், இவர்களின் ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்ட அந்தத் தவறான கருத்துகளை அல்லது உணர்ச்சிகளை முழுமையாக நீக்க வேண்டும்.இது ஒன்று தான், நோயாளரை பூரணமாகக் குணப்படுத்த மருத்துவர் முன் உள்ள ஒரே வழியாகும்1 

     என்முன் அமர்ந்திருந்த அந்த இளம் பெண் நோயாளருக்கு சுமார் 16 வயது இருக்கும். அவர் ஓர் பள்ளி மாணவி. மிகவும் பயந்த சுபாவம் உள்ள வராகத் தெரிந்தார். அவரைப் பார்த்தால், அவரது அன்னை கூறிய அந்த நடத்தைக் கோளாறுக்கு உரியவராகத் தெரியவில்லை.அப்படி அவர் அன்னை கூறிய நடத்தைக்கோளாறுதான் என்ன?

     சமீப காலமாக என் மகள் என்னிடம் நடந்துக் கொள்ளும் முறை, எனக்கு மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. இவ்வளவு சாதுவாக உள்ள இவளா அப்படி நடந்துக்கொள்கிறாள் என்று என்னை வியக்க வைக்கிறது சாதாரணமாக நாங்கள் இயல்பாக பேசிக்கொண்டே இருக்கும் போது,சில சமயங்களில் திடீரென அவள் முகத் தசைகள் இறுக்கமடைந்து கை கால்கள் நடுநடுங்கி,நாக்குபிரண்டு,முகம்வெளுத்து, சட் டென்று என்னை பலமாகத் தாக்குகிறாள். பின்னர் சில நிமிடங்களிலேயே, மயக்கமடைந்து பின்புற மாக அப்படியே சாய்ந்து விழுந்து விடுகிறாள். ஆனால் அவளுக்கு உடலில் எவ்விதக் காயங்களும் ஏற்படுவதில்லை. பின்னர், சில நிமிடங்களிலேயே நினைவு திரும்புகிறது. அப்போது நடந்த சம்பவங் கள் பற்றிக் கேட்டால், எனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று திரு திருவென்று முழிக்கிறாள்.

     இது ஏன் நிகழ்கிறது?அவளது இயல்பு சாந்தமாக இருப்பது தான். ஆனால்,அந்த சம்பவம் நிகழும் போது மட்டும் அவளுக்கு அப்படி ஒரு வலிமை எப்படி வருகிறது என்பதை என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லை. தயவுசெய்து, என் மகள் என்னிடம்ஏன்அப்படி நடந்துக் கொள்கிறாள் என்று,சொல்லுங்கள் டாக்டர்! எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது! இதை, சரி செய்ய இயலுமா?

     நான் அந்த இளம் பெண்ணைக் கேட்டேன்: உனக்கு இதுபற்றி எதுவும் சொல்ல இயலுமா? இல்லை டாக்டர் கண்டிப்பாக எனக்கு எதுவும் தெரியவில்லை! நானாக என் அம்மாவை அப்படித் தாக்கினேன் என்று வியப்பாக இருக்கிறது! என அழத் துவங்கினாள். எனவே, நான் அவளை வெளியே அனுப்பிவிட்டு, அவள் அன்னையிடம் அவர்களது குடும்ப வரலாறு பற்றி தெரிவிக்கு மாறு வினவினேன்.

     அந்த இளம்பெண்ணின் அன்னை விவாக ரத்து பெற்றவர். அந்தப் பெண் பிறந்த சில ஆண்டு களுக்குள்ளாகவே, கணவனும் மனைவியும் பிரிந்து விட்டனர். அந்த அன்னை ஓர் ஏற்றுமதி நிறுவனத்தில், வெகுஜன தொடர்பாளராகப் பணிபுரி கிறார். தனது மகளை எதிர்காலத்தில் ஒரு டாக்ட ராகவோ அல்லது என்ஜினியராகவோ உருவாக்க விரும்புகிறாள். தனது கணவர் இல்லாத குறை, மகளுக்கு எவ்விதத்திலும் ஏற்படாதவாறு வாழ்ந்து வருகிறார்.

     பின்னர், அவரை வெளியே அனுப்பிவிட்டு, அவரது மகளை அழைத்துக் கேட்டேன். அவர்கள் இருவரும் சொன்ன விபரங்களிலிருந்து நான் தெரிந்துக் கொண்டவை :

     மகளுக்கு எவ்விதக் குறைகளும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொண்ட அந்த அன்னை யால், அனைவருக்கும் உள்ளது போல, தன் மகளுக்கும் ஒரு தந்தை வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற இயலவில்லை. தன்னை ஒத்த பெண்களுக்கு, தந்தையின் பாசம்,பரிவு,உதவி மற்றும் பாதுகாப்பு கிடைப்பது போல, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அந்தப் பெண் ணிடம் நிறையவே இருந்தது. தனது எதிர்காலம், தனக்கு ஓர் தந்தை இருந்தால் சிறப்பாக அமையும் எனவும், தந்தையின் ஆதரவு தனக்குக் கிடைக் காத தற்கு தன் அன்னையே முக்கியக் காரணம் எனவும், அந்த இளம் பெண்ணின் ஆழ்மனத்தில் பதிந்து இருந்தது. இந்த அடக்கி வைக்கப்பட்ட மனக்குறை யின் வெளிப்பாடு தான், அவளுடைய “தாக்குதல் நடத்தைப் பிறழ்வு”

                இதை சரிசெய்யும் ஹோமியோ மருந்து -

                                                அப்சிந்தியம் (Absinthinum)

                இராபின் மர்ஃபியின் மருந்துக்காண் பேரேட்டில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.                 (Homeopathic Medical Repertory by Robin Murphy)

மனம் (Mind) என்ற பிரிவில் “பலாத்கார நடத்தை” என்ற குறிமொழியில், “உணர்வின்றிக் கீழே விழும் போது” (alterning with stupor) என்ற துணைக் குறிமொழிக்குக் கொடுக்கப் பட்டுள்ள ஒரே மருந்து - அப்சிந்தியம் மட்டுமே.

                இந்த அப்சிந்தியம் என்ற ஹோமியா மருந்து சிறப்பாக நரம்புகளில் வேலை செய்கிறது.

                இதன் முக்கியக்குறிகள் : மயக்கம், வலிப்புகள், பிதற்றங்கள்

                இறுதியாக, தன் உணர்வின்றி பின்புறமாக கீழே விழுதல். பின்பு, உணர்வு, வந்தபின், முன்னர் நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுக்கு வராமை.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)

Pin It