எய்ட்ஸ் நோய் உடல் வியாதிக் கிருமிகளிடமிருந்து தன் காப்புத் திறனை இழந்த ஒரு நிலை. இதற்குக் காரணமான வைரஸை எச்.ஐ.வி. என்று அழைக்கிறோம். மனித உடலில் லிம்போசைட் என்ற செல் மிக முக்கியமான பணியை ஆற்றுகிறது. அது உடலில் காப்புத் திறனை ஏற்படுத்துகிறது. இதில் டிலிம்போசைட் என்னும் வகை தன்னை எதிர்க்க வரும் கிருமியைக் கொல்லும் கிருமிகொல்லியை உண்டாக்கி கிருமியை அழிக்கிறது. டி4 லிம்போசைட் என்பது. நோய்க்கிருமி உடலில் நுழைந்தவுடன் இதன் வருகையை டிலிம்போசைட்டுக்கும் பிலிம்போசைட்க்கும் தெரிவிக்கிறது. இவை லிம்போகைனின் என்ற கிருமிகொல்லியின் மூலம் நோய்க் கிருமியை அழிக்கிறது. ஆனால் எய்ட்ஸ் நோயோ டிலிம்போ சைட்டை வேரோடு அழித்து விடுகிறது. இதனால் டி4 லிம்போசைட்டும் அழிக்கிறது
எய்ட்ஸின் அறிகுறிகள்
1. சிறு நோய்கூட கடுமையாகத் தாக்குதல்.
2. கழுத்து, அரை, அக்குள், நிணநீர் கட்டிகள்
3. வாயில் உணவுக்குழாய் படை நோய்
4. உவ்வாமையினால் தோலில் படை போன்ற திட்டுக்கள்
5. காசநோய் (டி.பி), சிறுநீரக நோய், நரம்பு வியாதி சுலபமாகப் படையெடுத்தல்.
6. தொடர்ந்து அதிகமான உடலிளைப்பு
7. முகப்புற்றுக் கழலை
8. மருந்தால் கட்டுப்படாத காரணமில்லாத வயிற்றுப் போக்கு
9. வாய்ப்புண்கள், வாயில் வெள்ளைத்தடிப்புகள்.
10. கண்டுபிடிக்க முடியாத 1 மாதத்திற்கு மேற்பட்ட காய்ச்சல்
11. புதுவகை நிம்மோனியா சுரம்
எய்ட்ஸ் பற்றிய உண்மைகள்
1. எய்ட்ஸ் பெரும்பாலும் பால்வினை நோயே. ஆனால் பயந்து வெறுக்ககூடிய வியாதியல்ல.
2. இதை தவிர்க்க முடியுமே தவிர தடுக்க முடியாது இதைத் தடுப்பதற்கு எந்தவித வேக்சினும், மருத்துவம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆணுறை. பெண்ணுறை, சுத்தமாக்கப்பட்ட ஊசிகள், மாற்று நோயில்லா இரத்தம், எல்லாவற்றிக்கும் மேலாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள கற்பு நெறி. இவைதான் இன்றைய மருந்துகள்.
3. எய்ட்ஸ் தொட்டால் ஒட்டிக் கொள்ளாது. இது இரத்ததானம், விந்து இவற்றால் பரவும் நோய். உணவு, டாய்லெட், காற்று, நீர், கொசு, மூலம் எய்ட்ஸ் பரவுவதில்லை. எனவே எய்ட்ஸ் வந்தவர்களை சமூகம் புறக்கணிக்கக் கூடாது.
4. எய்ட்ஸ் உடலில் நுழைந்த பின் அங்குள்ள எதிர்ப்பு சக்திகளை அழித்து விடுகிறது. இது இரத்தப் பரிசோதனை மூலம் தெரியவர சுமார் 6-12 வாரங்கள் ஆகிறது. இதை இடைவெளிக் காலம் என்று அழைக்கிறோம்.
5. உலக சுகாதார நிறுவன கணிப்பின்படி உலகில் 15 லட்சம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தாய்லாந்திலும், இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருவதில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை சுமார்தான்.
6. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இரத்தப் பரிசோதனையால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் ஒருவருக்கு எய்ட்ஸ் நோயின் பாதிப்பு தெரிய பல ஆண்டுகள் (5,10,20) ஆகலாம். எனவே எய்ட்ஸ் ஒரு மறைந்து தாக்கும் தொற்று நோயாகும்
7 எய்ட்ஸ் நோயாளிகள் 3 வகையினர் ஆவர்.
அ. அறிகுறிகளே இல்லாத எய்ட்ஸ் நோய் பாதிப்பு உடையவர்கள்
ஆ. எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள்.
இ. எய்ட்ஸ் நோயால் அவதியுறுபவர்கள்.
8. ஒரு தடவை இரத்தப் பரிசோதனையில் எய்ட்ஸ் நோய் இருப்பதாக சந்தேகம் இருந்தாலும் அதை மூன்றுமுறை பல வழியிலும் திரும்பத் திரும்ப பரிசோதிக்க பின்னரே அதற்கு உரியவர்களிடம் டாக்டர்கள் பக்குவமாகச் சொல்ல வேண்டும்.
9. எய்ட்ஸ் வந்த கணவனோ மனைவியோ டாக்டரைக் கலந்து ஆலோசித்துப் பின் காண்டம் (ஆணுறை, பெண்ணுறை) அணிந்து உடலுறவு கொள்ளலாம்.
10. எச்.ஐ.வி. வைரஸை எலிசா என்ற பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். எலிசா கண்டுபிடித்த பிணியாளர்களெல்லாம் எய்ட்ஸ் நோயாளிகளல்லர். இதை எலீசாவிற்குப் பின் செய்யப்படுகிற வெஸ்டர்ன்பிளாட் என்ற பரிசோதனைதான் நிச்சயமாக உறுதிப்டுத்தும். யு24 Core Anige சோதனையும் உள்ளது.
11. எய்ட்ஸ் நோயைப் பூரணமாகக் குணப்படுத்தி எச்.ஐ.வி. கிருமிகளை முழுமையாக அழிக்கும் மருந்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஏ.இசட்டி (அசிட்டோ தைமிடின் அல்லது ரெட்ரோவீர்) என்னும் மருந்து எச்.ஐ.வி.யின் பெருக்கத்தை ஓரளவுக்குக் குறைத்து எய்ட்ஸ் நோயாளியின் வாழ்நாளை நீட்டிக்கிறது. மற்றம் டி.டி.ஐ. (D.D.I) அதாவது டைடமோடின், டி.டி.சி(D.D.C). அதாவது ஆக்ஸிசைடிடின் எல்லாம் நோயை தற்காலிமாகக் கட்டுப்படுத்துகிறதே தவிர குணப்படுத்தவில்லை. மேலும் இவர்கள் இந்த மருந்தை ஒன்றரை வருடம் சாப்பிட வேண்டும். அதன் மாற்று விளைவுகளையும் சந்திக்க வேண்டும். இதன் விலையோ மிக அதிகம்.
சிகிச்சை முறைகள்
எய்ட்ஸ் தனிப்பட்டவரை மட்டுமன்றி அவருடைய குடும்பத்தையே பாதிக்கும். எய்ட்ஸ் ஓர் சமூகப்பிரச்சனையே. எய்ட்ஸீக்கு தடுப்பு மருந்து கிடையாது. எய்ட்ஸ் நோய் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்தை இயன்ற அளவு மற்றவர்களுக்கும் சொல்லத் தயங்கக் கூடாது. ஆணுறை (நிரோத்) அணிவதன் மூலம் எய்ட்ஸை தடுக்க முடிந்தாலும் தகாத உடலுறவு எப்பொழுதுமே ஆபத்தானது.
ஹோமியோ மருந்துகள்
ஹோமியோபதி மருத்துவம் என்பது நோய் என்பதை அடிப்படையாகக் கொள்ளவில்லை நோயினால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட ஒருவருடைய உடல் நிலையையும் மன நிலையையும் கணக்கில் கொண்டு நோயை முழுமையாகக் குணப்படுத்துகிறது. ஜெர்மனியில் ஆங்கில மருத்துவத்தில் பட்டம் பெற்ற டாகடர் சாமுவேல் ஹானிமேன் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டதே இம்மருத்துவம். ஆங்கில மருத்துவத்தில் உள்ள குறைகளையும், பக்க விளைவுகளையும் நீக்கி, நோயாளியை வருத்தாமல் இருக்கச் செய்யவே இம்மருத்துவத்தை கண்டுபிடித்தார் அந்த அறிஞர். யோமியோபதி மருத்துவ முறையிலும் மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன.
ஆங்கில மருத்துவம் நோயிலிருந்து மனிதனைப் பார்க்கிறது. ஹோமியோபதி மருத்துவம் மனிதனிலிருந்து அவனுடைய நோயைப் பார்க்கிறது இதுவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.
சாதாரணமாக பிடிக்கும் சளிக்கு ரைனோவைரஸ் என்ற ஒரு வைரஸே காரணமாக உள்ளது. சளி பிடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. காரணத்தைக் கண்டுபிடித்து நோயாளியை மருந்துகளைச் சாப்பிடச் சொல்வது ஹோமியோபதி மருத்துவம். மருந்துகளைக் கண்டுபிடித்து, எப்படி இருப்பினும் நோயாளி களுக்குக் கொடுப்பது அலோபதி மருத்துவம்.
ஹோமியோபதி மருத்துவ முறையில் கீழே உள்ள ஆறையும் நாங்கள் கணக்கில் கொள்கிறோம்.
1. நோயின் தொடக்கம்.
2. நோய்க்காலம்
3. நோய் உள்ள இடம்.
4. நோயினால் உண்டாகும் உணர்வுகள்
5. நோய் எதனால் அதிகமாகிறது. மற்றும் குறைகிறது என்பது.
6. ஒரு நோயோடு இருக்கும் மற்ற நோய்கள்
இவை அனைத்தும் ஒவ்வொரு நோயாளிக்கும் நோய்க்கும் மாறுபடுகிறது. இதனை சரியாகக் கண்டு பிடிக்கும் திறமை வேண்டும். எந்த ஒரு ஹோமியோபதி மருத்துவ நிபுணர் இவற்றை எல்லாம் சரியாகக் கண்டுபிடிக்கின்றாரோ, அவர் நோயாளியை முழுமையாகவும், விரைவிலும், நிரந்தரமாகவும் குணப்படுத்த முடியும் என்பதே அனுபவத்தில் நான் கண்டது. நோயை மட்டும் கணக்கில் கொண்டும், நோயாளியின் உணர்வுகளை தள்ளுதலும் நோயை அதிகப்படுத்தும். அப்படிச் செய்யப்படும் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவமும் அல்ல. மேற்கண்ட அனைத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.
1. குறிப்பிட்ட நோயாளிக்கு அந்த நோயை எதிர்க்கும் சக்தி.
2. நோயாளி, நோயின் எந்த கட்டத்தில் இருக்கிறார் என்பது.
3. நோயின் தன்மை மற்றும் தீவிரம்.
4. இதற்கு முன்னர் மற்றும் இப்பொழுது ஏந்பட்டுள்ள நோய்க்கு அவர் மேற்கொண்ட சிகிச்சை முறைகள். அதற்கு ஏற்றபடி மருந்து களைக் கொடுக்க வேண்டும்.
என்னுடைய அனுபவத்தில் HIV - Positive அதாவது எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவருக்கு உண்டான காச நோயை முற்றிலும் கட்டுப்படுத்தி, நிரந்தரமாகவும், விரைவிலும் குணப்படுத்தி இருக்கிறேன். ஆறு மாதங்களில் 10 கிலோ எடை அவருக்குக் கூடியிருந்தது. அவர்தான் என்னுடைய முதல் HIV Positive நோயாளி குணமடைந்த மனநிறைவளித்த முதல் நோயாளியும் கூட.
ஹோமியோபதி மருத்துவத்தில் எய்ட்ஸ் நோய்க்கிருமியைக் கட்டுப்படுத்தவும், விரைவில் அழிக்கவும் மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. போதுமான மருந்துகளைக் கண்டுபிடித்து எய்ட்ஸீக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று சோதனைகளை செய்து கொண்டிருக்கிறேன்.
எய்ட்ஸ் வைரஸைக் கொல்வதற்கும், மீண்டும் வராமல் தடுப்பதற்கும் சில மருந்துகள் உள்ளன. சோதனை அளவில் இருந்தாலும், அவற்றை மற்றவர்களும் சோதனை செய்து சரிபார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சில மருந்துகளைத் தந்திருக்கிறேன். Syphilinum, Thuja, Rhustox, Baptisia, Lac, Can, Morbilinum, Medorrhinum போன்ற மருந்துகளை பல்வேறு வீரியங்களில் கொடுக்க வேண்டியுள்ளது. தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட முறைப்படி, குறிப்பிட்ட அளவிலும், வீரியத்திலும் ஹோமியோபதி மருத்துவ நிபுணரின் மேந்பார்வையில் மருந்துகளை எய்ட்ஸ் நோயாளிகள் சாப்பிட்டால் எந்த நிலையில் இருக்கும் நோயாளியையும் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி குணப்படுத்த முடியும்.
எளிய அறிவியல்பூர்வமான பக்க விளைவுகளோ, பின் விளைவுகளோ இல்லாத மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இம்மருந்துகள் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றவை.
உணவுகள் :
மருந்துகளின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். பொதுவாக நல்ல சத்தான பொருட்களைச் சாப்பிடலாம். அசைவம் அதிகம் சேர்க்கலாம். கொழுப்பு சேர்க்கலாம்.
உடற்பயிற்சி :
மன ஆரோக்கியம் பெற காலாற நடக்கலாம் நடை நோய்க்குத் தடை. யோகாசனம் நல்லது.