 |
ஞாநி
கல்விப் புரட்சி
இந்த வார மகிழ்ச்சி!
கல்வித் துறையில் பெரும் புரட்சிக்கு வித்திடக் கூடிய ஒரு தீர்ப்பை வழங்கி யிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
மழலையர் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்ப தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என உச்சநீதி மன்றம் குறிப்பிட்டு இருப் பதில் மிகவும் முக்கியமா னவை இரண்டு. குழந் தைகளின் பெற்றோரிடம் நேர்காணல் செய்யக் கூடாது. பள்ளிக்கூடத்துக்கு அருகில் வசிக்கும் குழந்தைகளுக்கே முன்னுரிமை தர வேண்டும். 10 கி.மீட்டருக்கு அப்பால் வசிக்கும் குழந்தை களைச் சேர்க்கமுடியாது.
சி.பி.எஸ்.இ. இயக்குநர் கங்குலி தலைமையி லான குழுவின் பரிந்துரைகளை டெல்லி மாநில அரசு ஏற்று அமல்படுத்தியது. அதை எதிர்த்து சில பள்ளி நிர்வாகங்கள் தொடுத்த மனுவை நிராகரித்து, உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருக்கிறது.
பள்ளியிலிருந்து 3 கி.மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் குழந்தைகளுக்கே முன்னுரிமை என்பதை ஒழுங்காக அமல்படுத்தினால், ஒவ்வொரு வட்டாரத்திலும் தரமான பள்ளிகள் அமைய வழி பிறக்கும். பள்ளிக்கூட வேன், பஸ் போக்குவரத்துகள் அவசியமற்றுப் போகும். தொலைநோக்கில் இந்தப் பரிந்துரைகளைப் படிப்படியாக பள்ளி இறுதிப் படிப்பு வரை விரிவுபடுத்தி னால் இன்னும் நல்லது.
நீண்ட காலமாக நான் வலியுறுத்தி வரும் இன் னொரு கோரிக்கை... அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் அனைவரின் வீட்டுக் குழந் தைகளும் கட்டாயமாக அரசுப் பள்ளிகளில்தான் படிக்கவேண்டும் என்று விதி ஏற்படுத்துவதாகும். அவர் களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படித்தாலாவது, கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளின் வசதி யையும் தரத்தையும் தனியார் பள்ளிக்கு நிகராக உயர்த்து வார்கள் அல்லவா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி எனக்கு இரண்டே குறைகள். அது தற்போது டெல்லி மாநிலத்துக்கு மட்டும்தான். நமக்கு எப்போது?
குழந்தைகளின் பெற்றோரின் கல்வித் தகுதிக்கு வெயிட்டேஜ் தர வேண்டுமென்ற பரிந்துரை, எனக்கு உடன்பாடில்லை. படிக்காத ஏழைகளின் குழந்தைகளுக்கு அல்லவா வெயிட்டேஜ் தர வேண்டும்!
அதிர்ச்சி!
எது வரதட்சணைக் கொடுமை அல்ல என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் விளக்கம் அளித்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.
நிலத்துக்கு உரம் போட பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி தன் மனைவி பீமாபாயை கணவர் அப்பாசாஹிப் அனுப் பினார். பணம் கிடைக்காத சூழலில், பீமா பாய் தற்கொலை செய்துகொண்டார்.
அவசர வீட்டுத் தேவைக்காகவோ,பண நெருக்கடியைச் சமாளிக்கவோ மாமனார் மாமியாரிடம் பணம் கேட்டால், அது வரதட்சணை கேட்டதாக ஆகாது என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கூறியுள் ளனர். பணம் கொண்டு வராததற்காக மனைவியை பீமாராவ் அடித்ததாகக் கூறப்படாததால், அவர் துன்புறுத்தியதாகாது என்பது நீதிமன்றத்தின் கருத்து.
ஒருவேளை, இந்த வழக்குக்கு இந்த வியாக்கியானம் பொருந்தலாம். ஆனால் மாமனாரிடம் ஸ்கூட்டர், கம்ப்யூட்டர், கார், கலர் டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் இத்யாதிகளைக் கேட்கும் மருமகன்கள்கூட, குடும்பத் தேவைக் காகத்தான் கேட்பதாக வாதாட முடியும் அல்லவா? தவிர, துன்புறுத்தல் என்பது உடலை மட்டுமல்ல; உள்ளத்தைத் துன்புறுத்துவதும்தான்! சுண்டு விரல்கூட மனைவியின் மீது படாமல் மன உளைச்சல் ஏற்படுத்தினால், அது துன்புறுத்தல் ஆகாதா?
பூச்செண்டு!
பாகிஸ்தானின் போராளிப் பெண் ‘முக்தார் மாய்’க்கு இந்த வார பூச்செண்டு! படிப்பறிவற்ற முக்தார் மாய், பாகிஸ்தானின் மீராவாலா கிராமத்தில் சாதிக் கொடுமைக்கு உள்ளானவர். அவர் தம்பி, உயர் சாதிப் பெண் ணிடம் பேசியதற்கான தண்டனையாக, 300 கிராமவாசிகள் கூடி, முக்தாரை நாலு பேர் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். தீர்ப்பு நிறைவேற் றப்பட்டு, முக்தார் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு வரப்பட்டார். ‘மானமிழந்தவளே... செத்துப் போ!’ என்று கூடியிருந்தவர்கள் கத்தி னார்கள். முக்தார் துவளவில்லை. உள்ளூர் காவல் நிலையத்தில் தொடங்கி, ஒவ்வொரு இடமாகப் புகார் கொடுத்தார். கடைசியில் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு நீதி கிடைத் தது. ஆறு பேர் தண்டிக்கப்பட்டார்கள்.
தன் போராட்டத்துக்கு உலகம் முழு வதும் இருந்து வந்த பண உதவியைக் கொண்டு, முக்தார் தன் கிராமத்திலேயே பெண்களுக் கான பள்ளிக்கூடம் அமைத்து நடத்துகிறார். அவரைக் கொடுமை செய்தவர்களின் வீட்டுக் குழந்தைகளும் அங்கே இப்போது படிக்கி றார்கள். முக்தாரின் வாழ்க்கை அனுபவம் ‘இன் தி நேம் ஆஃப் ஹானர்’ என்ற தலைப் பில் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது!
கொண்டாட்டம்!
சென்னை மாநகரக் காவல் துறை, அது தோன்றி 150 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுகிறது. இந்தியாவி லேயே காவல் துறை அமைப் புக்கான சட்டத்துக்கு முன் னோடி 1856 ன் சென்னை நகரக் காவல் சட்டம்தான் என்பது சென்னைவாசி களுக்குப் பெருமையே!
தொழில்நுட்ப வளர்ச்சி யிலும் புலனாய்வுத் திற மையிலும் இந்தியாவின் இதர மாநில காவல் துறை களைவிட அதிக வளர்ச்சி யில் தமிழகமும் சென்னையும் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம், காவல் துறை மக்களின் சிநேகிதனாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இன்னும் நிறைய தூரம் போக வேண்டும்.
மும்பை, ஆட்டோ பயணி களின் சொர்க்கமாக இருக் கிறது. இங்கே வேறு மாதிரி இருப்பதற்குக் காரணம், ஆட்டோக்காரர்கள் மட்டு மல்ல; போலீஸும்தான்! லஞ்சம், ஊழலில் ஈடுபடாமல் போலீஸ் இருந்தால், ஆட்டோக்காரரை மட்டுமல்ல, அர சியல்வாதியைக் கூடத் திருத்திவிட லாம். இதற்கான முனைப்பு இப் போது பல உயர் அதிகாரிகளிடம் அரும்பியிருக்கிறது. அது கீழ் வரை பரவ வேண்டும்.
வாசிப்பு!
இந்த வருடம் சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறும் புது இடம், 291 வருடங் களாக இயங்கிவரும் புனித ஜார்ஜ் அநாதை இல்லப் பள்ளி வளாகம். இந்தப் பள்ளியில் 1793 ல் இருந்து 1798 வரை படித்த புகழ்பெற்ற அநாதை தஞ்சை சரபோஜி மன்னர். பழைய அரசர் துல்ஜியின் தத்துக் குழந்தை யான சரபோஜியின் உயி ருக்கு ஆபத்து இருந்ததை அடுத்து, தரங்கம்பாடியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்வார்ட்ஸ், சரபோஜியை இந்தப் பள்ளியில் சேர்த்துப் பாதுகாப்பாகப் படிக்க வைத்தார். ஸ்வார்ட்ஸ்பாதி ரியார் இறந்தபோது, ஆங்கி லத்தில் இரங்கல் கவிதை எழுதியிருக்கிறார்சரபோஜி.
ஆனந்த விகடன் 17 .1 .2007
|